Home Blog Page 287

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களைக் கோருகிறது ஓஎம்பி

image_pdfPRINT

ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அவற்றை தந்துதவுமாறு காணாமற்போனோர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இறுதிப் போர் நிறைவடைந்த பின் இராணுவத்தினர் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் அண்மையில் வெளியிட்டது.

அந்தப் பட்டியலை முறியடிக்கும் செயற்பாடுகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இறங்கியுள்ளது.

அதனடிப்படையில் காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக விவரங்களைச் சேகரிக்கும் பணியில் வெளிவிவகார அமைச்சு களமிறங்கியுள்ளது.

இது தொடர்பாக காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த பெயர்களடங்கிய பட்டியல் ஒன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கு அமைவாக, தற்பொழுது 351 பெயர்களைக் கொண்டுள்ளதும், http://www.disappearance.itjpsl.com/#lang=tamilஇன் வாயிலாக அணுகிக்கொள்ளக்கூடியதுமான இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் 2009 மே மாதத்தில் இலங்கை இராணுவத்தினரின் காவலில் இருந்த போது காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களினுடையதாகும்.

நாடாளுமன்ற சட்டம் ஒன்றினால் (2017ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சட்டம்) தாபிக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகமானது, ஏனையவற்றுக்கு மத்தியில், காணாமற்போன நபர்களை தேடுதல் மற்றும் கண்டறிதல் மற்றும் குறித்த நபர்கள் எந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனை தெளிவுபடுத்துதல், மற்றும் அவர்களது தலைவிதி,

காணாமற்போன நபர்களின் சம்பவங்களை குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரசபைகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் காணாமற்போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் காணாமல் போன நபர்கள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படக்கூடிய முறையான நிவாரணங்களை அடையாளங்காணுதல் போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான அமைப்பு ஆகும்.

ஆகையால், பின்வருவன தொடர்பிலான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமற்போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தி, ஊக்குவிக்கின்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் ஏனைய/ மேலதிக விரிவான தகவல்கள் மற்றும் அவர்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டார்கள் – எவரிடமும் / எந்த அமைப்பிடமும் காணப்படும், இந்த சட்டத்தின் 27ஆம் பிரிவினால் விபரிக்கப்பட்டுள்ள வகையில் காணாமற்போயுள்ளதாக கருதப்படத்தக்க பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்கலான ஏதேனும் நபர்களின் வேறு ஏதேனும் பட்டியல்கள் / தகவல்கள்
ஏதேனும் தகவல்கள் காணப்படின், அவற்றை பின்வரும் வகையில் தெரியப்படுத்தவும் – என்றுள்ளது.

தலைவர்,
காணாமல் போனோருக்கான அலுவலகம்,
முகவரி: 34, நாராஹேன்பிட வீதி, நாவல, இலங்கை
மின்னஞ்சல்: ;

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் ஒன்றுகூடி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

image_pdfPRINT

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(20) யாழில் முக்கிய கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இன்று காலை-09.45 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலின் போது “முதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளதாகவும், அடுத்த 15000 பட்டதாரிகளுக்கான நியமன வெற்றிடத்தில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் பின் வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது பட்டதாரிகளுக்குப் பட்ட இறுதித் திகதி அடிப்படையில் நியமனம் வழங்குதல் வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. குறித்த கோரிக்கையை முன்னிறுத்தி வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வை எதிர்கொண்ட வடமாகாணப் பட்டதாரிகள் அனைவரும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(22) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை,குறித்த போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இந்தப் போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் முழுமையாகப் பங்குபற்றுவதனூடாகவே எமக்கான உறுதியான தீர்வைப் பெற முடியுமெனவும் தெரிவித்துள்ளது.

யாழ்.மல்லாகத்தில் மீண்டும் பரபரப்பு!: சற்றுமுன் இளைஞன் கைது

image_pdfPRINT

யாழ். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இளைஞனொருவர் சற்று முன்னர் தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) இரவு யாழ்.மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள சகாய மாதாத் தேவாலயத் திருவிழாவில் வெளியேயிருந்து வந்த சிலர் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். இந்நிலையில் தேவாலயத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த இளைஞர்கள் அதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது அவ்விடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் திருவிழாவில் பங்கேற்றிருந்த இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞரை மோட்டார்ச் சைக்கிளில் கொண்டு சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த இரு இளைஞர்களையும், அவருக்கு உதவிய குடும்பஸ்தரொருவரையும் வைத்தியசாலையில் வைத்துப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்த இளைஞனின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் மல்லாகம் குளமங்கால் பகுதியில் பெருமளவான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே இன்று இரவு மல்லாகம் குளமங்கால் பகுதியில் குறித்த இளைஞரின் வீட்டிற்குச் சென்ற தெல்லிப்பழைப் பொலிஸார் அவரைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கைது நடவடிக்கை மேற்படி பகுதி மக்களிடையே மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையைக் காணவில்லை; தோண்டி தேடிப்பிடத்த மக்கள்

image_pdfPRINT

பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திபாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் தேடிக்கண்டு பிடித்துள்ளனர்.

வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டில் இருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட 61 ஏக்கரில் பலாலி வடக்கு ஜே/ 254 கிராம சேவையாளர் பிரிவில் காணப்பட்ட பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடத்தையே காணவில்லை.

குறித்த பகுதி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதை அடுத்து , மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று , தமது காணிகளை பார்வையிடனர்.

அதன் போது அப்பகுதியில் இருந்த பாடசாலையை தேடிய போது அதனை காணவில்லை. பின்னர் அப்பகுதியில் இருந்த தொட்டி ஒன்றினை அடையாள படுத்தி தேடிய போது பாடசாலை கட்டடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில் அத்திபாரத்தை மாத்திரமே மக்கள் கண்டனர்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த குறித்த பாடசாலை கட்டம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டமை அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது.

மாணவியை கடுமையா தண்டித்த அதிபருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

image_pdfPRINT

சாவகச்சேரி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் அடித்து தண்டித்ததாக பொலிஸ் அவசர பிரிவு இலக்கத்திற்கும் தென்மராட்சிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடசாலையில் தரம் 10 கல்வி பயிலுகின்ற மாணவி ஒருவர் நேற்று மதியம் பாடசாலை முடிந்து பெற்றோருடன் மோட்டார்ச் சைக்கிளில்  வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீதியில் விழுந்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாணவி மாற்றப்பட்டுள்ளார்.

இதன் போது மாணவியை பரிசோதித்த வைத்தியர் உள்ளங்கையில் கண்டல் காயங்கள் இருப்பதை அவதானித்து மாணவியை வினவியுள்ளார். இதன்போது அதிபர் முச்சக்கர வண்டியின் ஏரியலால் அடித்துள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

குறித்த பாடசாலையில் தரம் 10, 11 மாணவர்களின் பெற்றோருக்கான கூட்டம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை மைதானத்தில் வைத்து பாடசாலை அதிபர் தண்டித்துள்ளார். இதன்போதே முச்சக்கர வண்டியின் ஏரியல் ஒன்றினால் அதிபர் அடித்துள்ளதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.  இதையடுத்தே மாணவியின் தந்தை இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் அவசர இலக்கத்து முறையிட்டுள்ளார்.

சுன்னாகம் துப்பாக்கி சூட்டு விவகாரம்; பொலிஸாரின் வாக்குமூலம் தமிழில் பெறப்படவேண்டும்

image_pdfPRINT

-மனித உரிமை ஆணைக்குழு அறிவுறுத்தல்

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் சிங்கள மொழியில் பதியபட்டமையை மனித உரிமை ஆணைக்குழு அறிந்து , தமிழ் மொழியில் வாக்கு மூலம் பதியப்பட வேண்டும் என பொலிசாருக்கு அறிவுறுத்தி உள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்கு மூலங்களை பொலிசார் சிங்கள மொழியிலையே பதிவு செய்துள்ளனர். அதனால் வாக்கு மூலங்களை வழங்கியவர்களது , கூற்றுக்கும் பதியப்பட்டவைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன. அதனை அடுத்து வாக்கு மூலங்களை தமிழ் மொழியில் பதியுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

அதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் சென்று அவதானித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டு உள்ளோம்.

சம்பவத்தினை நேரில் கண்டவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் சுன்னாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் வெளி சென்றமை , உள் வந்தமை ,  துப்பாக்கி எடுத்து சென்றமை தொடர்பில் தகவல் புத்தகத்தில் பதியப்பட்டு உள்ளதா ? என்பது தொடர்பிலும் தகவல்களை பெற்று உள்ளோம்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  குறித்த சம்பவம் தொடர்பில் நாம் எமது அவதானத்தை தொடர்ந்து செலுத்தி வருவோம் என தெரிவித்தார்.

ஆவா குழு இருவரை தப்பிக்க விட்ட யாழ் பொலிஸார் !

image_pdfPRINT

ஆவாகுழுவை சேர்ந்த இருவரை கைது செய்வதற்காக தாம் துரத்தியதாகவும்,அதன் போது அவர்கள் விபத்துக்கு உள்ளான நிலையில் தப்பி சென்று உள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெயரியவருவதாவது ,

சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கொக்குவில் சந்திக்கு அருகில் பொலிசார் மறிக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தப்பி சென்றுள்ளனர்.

தப்பி சென்ற இருவரையும் பொலிசார் துரத்தி சென்ற வேளை யாழில் இருந்து கொக்குவிலை நோக்கி வந்து கொண்டிருந்த காருடன் கொக்குவில் சந்தியில் மோதி இளைஞர்கள் இருவரும் விபத்துக்கு உள்ளானர்கள்.

குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்துக்கு உள்ளானதை அடுத்து சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிசார் , விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் ஆவா குழுவினருடையது எனவும் , தப்பி சென்ற இருவரும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பெண் கொழும்பில் சடலமாக மீட்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

35 வயதான இந்த பெண், யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொழும்பு- கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் வீட்டு பணிப்பெண்ணாக தங்கியிருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2ம் குறுக்கு தெருவிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான வீட்டு உரிமையாளர், சம்பவ நேரத்தில் வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மீது சித்திரவதை குற்றச்சாட்டு

image_pdfPRINT

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் தடுத்து வைத்து இரு இளைஞர்களை பொலிஸ் பொறுப்பதிகாரி மிக மோசமாக சித்திரவதை செய்து தாக்கினார் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் மற்றும் தீருவிலை சேர்ந்த குகதாஸ் விஜயதாஸ் ஆகிய இருவருமே சித்திவரதைக்கு உள்ளாகி உள்ளனர் என தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரான சு. கெங்காரூபன் தெரிவிக்கையில்
கடந்த சனிக்கிழமை 16ஆம் திகதி ஊரில் நண்பர்களுக்கு இடையில் கைக்கலப்பு ஏற்பட்டது. அதன் போது எனது நண்பர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலுக்கு இலக்கான நண்பரை நான் அழைத்து வந்த போது , மற்றைய தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொண்ட வல்வெட்டித்துறை பொலிசார் எம்மை உதயசூரியன் கடற்கரை மதவடி பகுதியில் வழிமறித்து தாக்குதல் நடாத்தினார்கள்.
பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு தடுத்து வைத்து எம்மை சிவில் உடையில் இருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் கடுமையாக சித்திரவதை புரிந்து எம்மை தாக்கினார்கள்.
அதனால் எமது உடலில் கண்டால் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. பின்னர் எம்மை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அன்றைய தினமே நீதிவான் எமக்கு பிணை வழங்கினார்.
எமது ஊரில் உள்ள ஊறணி வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றால் , பொலிசாரின் அச்சுறுத்தல் இருக்கும் என்பதனால் நாம் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றோம் என தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்டது வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம்

image_pdfPRINT

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது

இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் ஆலயக்குருக்கள் ஆலய நிர்வாகத்தினர் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன் படி இக்கோயில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் (18) 60 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது இதற்குள் வயாவிளான் ஞானவைரவர் ஆலயமும் விடுவிக்கப்பட்டது. இதன்படி (ஜே / 254) பலாலி வடக்கில் 17 ஏக்கரும் , (ஜே. 245) வசாவிளான் மேற்குப் பகுதியில் 12 ஏக்கரும் ,(ஜே/ 249) தையிட்டி வடக்கு பகுதியில் 9 ஏக்கர் நிலமும், (ஜே/ 244) வசாவிளான் கிழக்குப் பிரதேசத்தில் 10 ஏக்கர் நிலமும், (ஜே/ 252) பலாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் 13.5 ஏக்கரும் ஜே/ 250 கிராம சேவகர் தையிட்டியில் 8.5 ஏக்கருமாகவே மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டன. இப்பகுதியில் இராணுவத்தினர் முகாம்களை முட்கம்பி வேலிகள் அகற்றி வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

மேலும் ஆதிமயிலிட்டி பூதவராயர் கோயில் பாதையையும் நேற்று முன்தினம் படையினர் விடுவித்தனர்.

மல்லாகம் இளைஞன் கொலை விவகாரம்; 40 பேரை இலக்கு வைத்துள்ள பொலிசார்

image_pdfPRINT

மல்லாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து 40 பேரை இலக்கு வைத்து பொலிசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குழு மோதல் இடம்பெற்றது. அதன் போது மோதலை தவிர்க்க சென்ற பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆரம்ப விசாரணைகளின் அடிப்டையில் அன்றைய தினம் தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40 பேர் இரண்டு குழுக்களாக மோதிக்கொண்டனர் என தெரியவந்துள்ளது. 

அதன் அடிப்படையில் அன்றைய தினம் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இளைஞர்களை விடுவிக்க பொலிஸார் கடும் எதிர்ப்பு; தொடர்ந்தும் விளக்கமறியல்

image_pdfPRINT

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தமையை அடுத்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்தார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்யபட்ட மூன்று இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இளைஞர்களை தெல்லிப்பளை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் இல்லத்தில் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த மூன்று இளைஞர்களையும் பிணையில் விடுவிக்க பொலிசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை அடுத்து மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

error: Content is protected !!