SHARE

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது

இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் ஆலயக்குருக்கள் ஆலய நிர்வாகத்தினர் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன் படி இக்கோயில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் (18) 60 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது இதற்குள் வயாவிளான் ஞானவைரவர் ஆலயமும் விடுவிக்கப்பட்டது. இதன்படி (ஜே / 254) பலாலி வடக்கில் 17 ஏக்கரும் , (ஜே. 245) வசாவிளான் மேற்குப் பகுதியில் 12 ஏக்கரும் ,(ஜே/ 249) தையிட்டி வடக்கு பகுதியில் 9 ஏக்கர் நிலமும், (ஜே/ 244) வசாவிளான் கிழக்குப் பிரதேசத்தில் 10 ஏக்கர் நிலமும், (ஜே/ 252) பலாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் 13.5 ஏக்கரும் ஜே/ 250 கிராம சேவகர் தையிட்டியில் 8.5 ஏக்கருமாகவே மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டன. இப்பகுதியில் இராணுவத்தினர் முகாம்களை முட்கம்பி வேலிகள் அகற்றி வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

மேலும் ஆதிமயிலிட்டி பூதவராயர் கோயில் பாதையையும் நேற்று முன்தினம் படையினர் விடுவித்தனர்.

Print Friendly, PDF & Email