நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோடைகால விளையாட்டு பிரித்தானியாவில் வெகு விமரிiசாயக நடைபெற்றது
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவாக பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் நடாத்தும் கோடைகால விளையாட்டு விழாவின் 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா நேற்யைதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றது.
இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் பெருமளவில் பங்ககேற்றனர். உதைபந்தாட்டம் வலைபந்தாட்டம் மற்றும் தமிழர் விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் தமிழர் உணவுப்பண்டங்களும் பரிமாறப்பட்டன.


