SHARE
image_pdfPRINT

 

இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரான காலம் சென்ற திரு வரதகுமார் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனமான சமூக அபிவிருத்திக்கான மையம் (Centre for Community Development (CCD-UK) இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிராந்தியங்களில் வாழும் பின்தங்கிய சமூகங்களுக்கு பலதரப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த சேவைகளுக்கான நிதி சேகரிப்பதற்கான நிகழ்வானது கடந்த சனிக்கிழமை 11 ஏப்பிரல் 2026 அன்று பிரித்தானியாவின் New Malden நகரிலுள்ள Shiraz Mirza Trust Manor Park Hall இல் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமூக தலைவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தாயகத்தில் யுத்தத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களையும் அங்கவீனர்களான முன்னாள் போராளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களையும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவி திட்டங்கனை செயற்படுத்த நிதி திரட்டும் நோக்கில் இந் நிகழ்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், அதன் இயங்கு நிலை தொடர்பாகவும் எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை இந் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்வானது தமிழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய தளமாக தொடர்ந்து அமைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.