SHARE

பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திபாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் தேடிக்கண்டு பிடித்துள்ளனர்.

வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டில் இருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட 61 ஏக்கரில் பலாலி வடக்கு ஜே/ 254 கிராம சேவையாளர் பிரிவில் காணப்பட்ட பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடத்தையே காணவில்லை.

குறித்த பகுதி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதை அடுத்து , மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று , தமது காணிகளை பார்வையிடனர்.

அதன் போது அப்பகுதியில் இருந்த பாடசாலையை தேடிய போது அதனை காணவில்லை. பின்னர் அப்பகுதியில் இருந்த தொட்டி ஒன்றினை அடையாள படுத்தி தேடிய போது பாடசாலை கட்டடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில் அத்திபாரத்தை மாத்திரமே மக்கள் கண்டனர்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த குறித்த பாடசாலை கட்டம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டமை அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது.

Print Friendly, PDF & Email