முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதோடு சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கலந்துரையாட பிரித்தானியாவின் பிரிதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பிரித்தானிய பாராளுமன்றில் ஒன்று கூடுகின்றது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் எதிர் வரும் 18 ஆம் திகதி தாயகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படவுள்ளது.
இந்நிலையிலேயே பிரித்தானியாவில் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் உறு துணையாக நிற்கும் தொழிற்கட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை வழமைபோன்று அனுஷ்டிக்கவுள்ளது.
தொழிலாளர் கட்சியின் தலைவரும் நிழல் மாநில செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் Anneliese Dodds MP இன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்றின் குழு அறை 11 இல் இடம்பெறவுள்ள
தமிழர்களுக்கான தொழிலாளர் கட்சியின் தலைவர் திரு சென் கந்தையா மற்றும் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான CATHERINE WEST MP, WESS TREETING MP, DAME SIOBHAIN MCDONAGH MP, RT.HON SIR STEPHEN TIMMS MP, GARETH THOMAS MP, JOHN MC DONNELL MP, DAWN BUTLER MP, JAMES MURRAY MP, VIRENDRA SHARMA MP, SARAH JONES MP, BARRY GARDINER MP ஆகியோரும் சித்திரவதையிலிருந்து விடுதலைக்கான அமைப்பின் தலைமை நிர்வாகி SONYASCEATS, NATALIA KUBESCH (Legal Officer at REDRESS), DR SHIVAAHNEE RAVEENTHIRAN – People for Equality &Relief in Lanka (PEARL), JENSIYA NEWTON – International Diplomatic Council Of Tamil Eelam (IDCTE), DR CHAYAN SHANMUGARATNAM – International Diplomatic Council Of Tamil Eelam(IDCTE), YVONNE SCHOFIELD (The SriLanka Campaign for Peace&Justice) ஆகியோரும் இதில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.