SHARE

யாழ்ப்பாணத்தின் மைந்தன் விஜயகாந்த் விஜேஸ்காந்த் இன்று இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது முதலாவது ஆட்டத்தினை களம் கண்டார்.

இதன் மூலம் சர்வதேச இருபது-20 தொடர் ஒன்றில் விளையாடிய முதல் யாழ்ப்பாணத்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் Sunrisers Hyderabad அணியில் பந்துவீச்சாளராக இடம்பிடித்திருந்த விஜேஸ்காந்த் இன்று Lucknow Super Giants அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் அணியில் இடம் பிடித்திருந்தார்.

இந்தப்போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப்பெற்றது.

இந்நிலையில் இதில் 4 ஓவர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசிய விஜேஸ்காந்த் வெறும் 27 ஓட்டங்களையே எதிரணி பெற அனுமதித்திருந்தார்.

Lucknow Super Giants அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பந்து வீசுவதற்காக விஜேஸ்காந்த அணித்தலைவரினால் அழைக்கப்பட்டார்.

இதன் போது சிறிலங்கா வடக்கின் யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச T20 போட்டியை களம்காணும் முதல் வீரர் விஜேஸ்காந்த் என வர்ணனை அறையிலிருந்து விஜேஸ்காந்துக்கு சிறப்பான அறிமுகம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பான அறிமுகத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் குறிப்பாக வடக்கு மக்கள் பெருமையாக கொண்டாடி வருகின்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி Abhishek Sharma (75) Travis Head (89) ஆகியோரின் அதிரடி இணைப்பாட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்களைப்பெற்று வெற்றியை தனதாக்கியது.

Print Friendly, PDF & Email