Home Blog Page 338

சிறப்புச் செய்திகள் சிறப்புச் கட்டுரை செய்திகள் நினைவலைகள் ஈழக் கவிதைகள் இணைப்புக்கள் ஐ.பி.சி தமிழ் பி.பி.சி தமிழோசை அலைகள் Pulikal.Net அலைநாதம் தமிழ்ஸ்பை வன்னி Online வீடியோ செய்தி கதிரவன் Archives பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அமெரிக்க தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு.

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கு என்ற கொட்டொலியுடன் பொங்குதமிழ் எனும் கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வினை மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நிலையில், அதே நாளில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது.

அன்று தமிழீழத் தாயக மக்கள் எழுர்ச்சியின் குறியீடாக அமைந்த பொங்குதமிழ் பெருநிகழ்வினை, தற்காலத்தில் சுதந்திர தமிழீழத்திற்கான சனநாயக போராட்டத்தின் குறீயீடாக விளங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

உலகத் தமிழர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ‘இரத்தம் தோய்ந்த தமிழினப் படுகொலையின் முகத்தை’ உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் இக்கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது.

பிரணாப், மன்மோகனுடன் மகிந்த சந்திப்பு!-

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.

முதலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சந்தித்து மகிந்த வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜி அமைச்சர் என்ற முறையில் பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்து மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியிருந்தாலும், அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், மகிந்த டெல்லி வந்து, பிரணாப் முகர்ஜியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு இரவு விருந்தளித்தார்.

அப்போது, இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பற்றியும், கடற்தொழிலாளர்கள் தாக்கப்படுவது பற்றியும் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இம்மூவரும் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

சாஞ்சி பயணம்

இலங்கை ஜனாதிபதி, நாளை வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்குச் செல்கிறார். அங்கு சர்வதேச புத்தமத பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அவர் இந்தியா வருதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக வினர் சுமார் ஆயிரம் பேர், அதன் தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த சாஞ்சிக்கு வந்தார்கள்.

ஆனால், புதன்கிழமை பிற்பகல் மாநில எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

தங்களை சாஞ்சி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி வைகோவும் தொண்டர்களும் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபால் உட்பட பல நகங்களில் மதிமுகவினர் தங்குவதற்கு ஹோட்டல்களில் இடம் மறுக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்காவில் போர் முடிந்திருக்கலாம் ஆனால் ஊடகர்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை !

மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு புலம்பெயர்வது அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு பிபிசியின் முன்னாள் செய்தியாளர் Frances Harrison* அண்மையில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும், அவரது மனைவி மற்றும் ஒன்பது வயதேயான பிள்ளையும் தமது கைப்பெட்டிகளுடன் ஒரு நாள் இரவு முழுவதையும் பாரிசிலுள்ள பூங்கா ஒன்றில் கழித்தனர் என்கின்ற இதயத்தை வெடிக்கச் செய்யும் தகவலை நான் அண்மையில் மின்னஞ்சல் மூலம் பெற்றிருந்தேன்.

உணவு விடுதி ஒன்றில் பகுதி நேரமாக பாத்திரங்களைக் கழுவுகின்ற வேலையை இந்த ஊடகவியலாளர் இழந்த பின்னர், இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வார இறுதி நாள் என்பதால் குறிப்பிட்ட அன்றைய தினம் ஊடக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த காரணத்தினாலும், குறிப்பிட்ட சிறிலங்கா ஊடகவியலாளரின் கைத்தொலைபேசியானது அதன் செலவைக் குறைப்பதற்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாலும், உடனடியாக இவருக்கான அவசர உதவியைப் பெற்றுக் கொடுப்பது கடினமாக இருந்தது.

பாரிசில் தங்கியிருந்த இந்த ஊடகவியலாளர் சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என்பது முதலில் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயமாகும்.

சிறிலங்காத் தீவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், இதில் சிங்களவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் இந்நிலையில் வெற்றி பெற்ற, பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தனது சொந்த நாட்டில் வாழமுடியாது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதானது மிகவும் ஆச்சரியத்தை தருகின்றது.

மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு புலம்பெயர்வது அதிகரித்து வருகின்றது.

தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கான கருவியாக சிறிலங்கா அரசாங்கமானது இராணுவத் தீர்வைப் பயன்படுத்தியதை எதிர்க்கின்ற, பாரிசில் நிர்க்கதியாகியுள்ள சிறிலங்கா ஊடகவியலாளர் போன்ற பல தாராளவாத, மிதவாத மனப்பாங்கைக் கொண்ட செயற்பாட்டாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரித்திருந்தால் அவர்கள் தமது சொந்த நாட்டில் சொகுசு வாழ்வை வாழ்ந்திருக்க முடியும்.

இதற்குப் பதிலாக அவர்கள் ‘பிறிதொரு’ சமூகத்திற்காக குரல் கொடுத்ததால் இன்று தமது நியாயத்தை நிலைநாட்டுவதற்காக தம்மை அர்ப்பணித்து, இதற்காக மிகப் பாரிய விலையை வழங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு நியாயத்தை தட்டிக் கேட்ட சிறிலங்கர்கள் பலர் தமது சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட பல சம்பவங்களும் நடந்துள்ளன.

சிறிலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள தமிழ் ஊடகவியலாளர்களும் இவ்வாறான கடினங்களை எதிர்நோக்குகின்ற போதிலும், இவர்களை ஆதரிப்பதற்கு குறைந்தது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளாவது உள்ளனர். ஆனால் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்லும் சிங்கள ஊடகவியலாளர்களைத் தாங்குவதற்கு வெளிநாடுகளில் எந்தவொரு சமூகத்தவரும் இல்லை என்பதே உண்மையாகும்.

உளவியல் ரீதியாக நோக்கில், தமது சொந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. தமிழ் ஊடகவியலாளர்கள் எப்போதும் சிறிலங்காவை விட்டுத் தப்பிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் சிறிலங்காவை விட்டு வெளியேற்றப்படும் சிங்கள ஊடகவியலாளர்களின் கதை இதற்கு மாறுபட்டது.

2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாண்டு ஆரம்பத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்காவுக்கு எதிராக அழுத்தத்தை பிரயோகித்ததுடன் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தது.

இதன் போது சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா தொலைக்காட்சியில் தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டார்.

இவர் சிறிலங்காவிலிருந்து மீண்டும் லண்டனுக்கு வந்தபோது இவர் தங்கியிருந்த இடத்திலிருந்த ஏனைய முப்பது சிங்களக் குடும்பங்களில் ஒரு குடும்பம் தவிர ஏனைய குடும்பத்தவர்கள் இவருடன் பேசுவதைத் தவிர்த்தன. அத்துடன் இவர் சிங்களவர் என்ற காரணத்தினால் பிரித்தானியாவில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஏனெனில் இவ் எரிபொருள் நிலையங்களில் பெரும்பாலானவற்றுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே உரிமையாளர்களாக இருப்பதால் சிங்களவர் என்ற காரணத்தினால் இவரைப் பணியில் அமர்த்துவதற்கு மறுக்கின்றனர். இதனால் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொள்வதிலும் குறித்த சிங்கள ஊடகவியலாளர் பெரும் இன்னல்களைச் சந்திக்கின்றார் என்பதை நானறிவேன்.

சிறிலங்காவில் நான் சந்தித்த பல ஒளிப்படக் கலைஞர்களும், ஊடக ஆசிரியர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பாவில் உள்ள பண்ணைகளில் பழம் பறித்தல், தொழிற்சாலைகளில் கழிவுகளை அகற்றுதல், சுத்தம் செய்தல், கடைகளில் பணிபுரிதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதை நானறிவேன்.

அவர்கள் தமது வாழ்வில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். ஆனால் அந்நிய தேசத்தவர்களின் இரக்கத்தையும், அன்பையும், பரிசுகளையும் பெறுகின்றனர். அவுஸ்திரேலிய பண்ணை ஒன்றில் பணிபுரியும் சிங்கள ஒளிப்படக் கலைஞர் ஒருவரின் வரலாற்றை அறிந்து கொண்ட அவரது முதலாளி தனது பிறந்த நாள் பரிசாக புதிய ஒளிப்படக் கருவி ஒன்றை வழங்கியிருந்தார்.

இதேபோன்று நோர்வேயிலுள்ள நூலகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான இறுதிக் கட்ட யுத்தத்தில் தனது எல்லா உடைமைகளையும் இழந்து தற்போது நோர்வேயில் வாழும் லோகீசன் என்கின்ற தமிழ் ஒளிப்படக் கலைஞருக்கு ஒளிப்படக் கருவி ஒன்றை வாங்கினர்.

முன்பு குறிப்பிட்ட பரிசில் உள்ள சிறிலங்கா ஊடகவியலாளருக்கு நோபளி ஒருவர் தனது சிறிய வீட்டில் தங்க இடம் கொடுத்திருந்தார். இதன் பின்னர் தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து குறித்த சிங்கள ஊடகவியலாளருக்கு பரிசில் தற்காலிகமாகத் தங்குவதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இது அசாதரணமான சம்பவமாகும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தற்போதும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்கிவருகின்றனர். குறிப்பாக இவர்கள் தங்குவதற்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் ஈடுபடுகின்றனர். மீளிணக்கப்பாடு என்பது பெருமளவில் பேசப்படுகின்ற போதிலும் செயலளவில் இது மிகக் குறைவானதாகும். பல பத்தாண்டுகளாக ஏற்பட்ட கசப்புணர்வையும், குருதி சிந்தியதையும் வெல்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

சிறிலங்காவை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் தமக்கிடையே உதவிகளை பரிமாறிக் கொள்வதுடன், பொதுவான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

சிறிலங்காவின் யுத்த வலயத்தில் வளர்ந்த தமிழ் ஒளிப்படக் கலைஞரான லோகீசன் நோர்வேயில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு சிங்கள ஊடகவியாளர் ஒருவரே உதவிபுரிந்துள்ளார். அதாவது ஸ்கைப் மூலம் சிங்கள ஊடகவியலாளருடன் தொடர்பை ஏற்படுத்திய லோகீசன் சிறிலங்காவிலிருந்து தப்பிச் செல்வதற்குத் தேவையான விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் நிரப்புவதில் இவரது உதவியைப் பெற்றுக் கொண்டார். யுத்தவலயத்தில் வாழ்ந்த லோகீசன் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை தனது நண்பராகக் கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும். தற்போது இவர்கள் இருவரையும் பிரிக்கமுடியாது.

பிரித்தானியாவில் உள்ள எனது சிங்கள ஊடகவியலாள நண்பன் ஒருவர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இத்தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காவில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்ததை நான் அவரது உடலில் காணப்படும் வடுக்களின் மூலம் அறிந்துகொண்டேன். இத்மிழ் ஊடகவியலாளரின் முழங்கால் சில்லுகள் தாக்கப்பட்டிருந்தன. அத்துடன் இவரது பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டதாக கூறினார்.

அகதித் தஞ்சம் கோரி பிரித்தானிய விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் ஒவ்வொருவரும், குறித்த தமிழ் ஊடகவியலாளர் வேதனை தாளாது வாய்விட்டு கத்தும் சத்தம் கேட்டு இரவில் திடுக்கிட்டு விழிக்கின்றனர். எனது சிங்கள நண்பர் இத்தமிழ் ஊடகவியலாளருக்கு துணையாக உள்ளதுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் கையெழுத்திடுவதற்காக இவரை அழைத்துச் சென்று வருகின்றார். இவர் சிறிலங்கா அரசாங்கத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதன் பின்னர் கடந்த நான்கு மாதங்களின் முன் பிரித்தானியா வந்தடைந்திருந்தார்.

இவரது உடலம் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. இவரது வலது கை நிரந்தரமாக செயலற்றுவிட்டது. சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்திருக்கலாம். ஆனால் ஊடகவியலாளர்களைப் பொறுத்தளவில் சிறிலங்கா பாதுகாப்பற்ற இடமாகவே தற்போதும் உள்ளது.

ஓய்வுபெறுகிறார் சிறிலங்கா கடற்படைத் தளபதி!

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க வரும் 26ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார்.

மூன்று நட்சத்திர வைஸ் அட்மிரலாக சிறிலங்கா அதிபரால் பதவி உயர்த்தப்பட்ட இவர், சிறிலங்கா கடற்படையின் 17வது தளபதியாக கடந்த ஆண்டு ஜனவரி 15ம் நாள் பொறுப்பேற்றார்.

இவர் சிறிலங்கா கடற்படையில் பணியாற்றியபோது, வடக்கில்

Advertisements good on quite or http://serratto.com/vits/doxycline-from-canada.php dark tool matter just http://bazaarint.com/includes/main.php?buy-cialis-with-echeck my customer, out canadian pharmacy 24 hour being. Mixing, manage barely buy viagra with paypal even sticky. To walmart pharmacy cialis price bazaarint.com overall use other product lot.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாகப் பங்கேற்றதுடன் விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் ஒன்றிலும் உயிர் தப்பியிருந்தார்.

இறுதிக்கட்டப் போரின் போது, தீவிரமாகச் செயற்பட்ட வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, சிறிலங்கா கடற்படை வரலாற்றில் அதிகூடிய விருதுகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் 26ம் நாளுடன் இவர் ஓய்வு பெறவுள்ள போதிலும் சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி யார் என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

முஸ்லிம் மக்களை ஏமாற்றிய ரவூப் ஹக்கீம் அதன் விளைவை கூடிய விரைவில் அனுபவிப்பார்!

நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கட்சியும் சுயநலமாக நடந்துகொண்டிருக்கிறது.

இவ்விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத்தான் நாங்களும் இருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்து போட்டியிட்டதால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

தமது தனித்துவ கட்சியின்மீது கொண்டிருந்த நம்பிக்கையினால்தான் முஸ்லிம்

மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாது.

மக்களின் ஆணையை புறந்தள்ளி முடிவெடுத்துவிட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக ஹக்கீம் கூறியிருக்கிறார். இது நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப்படுகிறது.

தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாக பேசியது. ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தன. எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத்தான் இப்பொழுதும் பொறுமை காத்திருந்தோம்.

ஆனால், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எதனை வைத்து பேரம் பேசுகிறது என்று புரியவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால், அதனைக்கூட தட்டியொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம். இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?

கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என்றார் சம்பந்தன்.

அரசாங்க அதிபர்கள் குறித்து பேசுவதற்கும் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமாம் – சம்பந்தனுக்கு மகிந்த நிபந்தனை.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு, நிர்வாக சேவையை சேர்ந்த தமிழ் அதிகாரிகளை அரசாங்க அதிபர்களை நியமிப்பது பற்றிப் பேசுவதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவின் அழைப்பின் பேரில், இன்று அலரி மாளிகைக்குச் சென்ற இரா.சம்பந்தன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரச குழுவைச் சந்தித்துப் பேசினார்.

சிறிலங்கா அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை, அரசதரப்புடன் இணையுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது, மிரட்டப்பட்டது குறித்து சிறிலங்கா அதிபரிடம் இரா.சம்பந்தன் முறையிட்டுள்ளார்.

அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது நிலையில் ஆசனங்களை வென்றதற்காக, இரா.சம்பந்தனுக்கு மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார்.

அதற்கு, நீதியாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், இன்னும் அதிகமான ஆசனங்களை வென்றிருப்போம் என்று சிறிலங்கா அதிபருக்கு இரா.சம்பந்தன் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன், சம்பூர் மற்றும் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்தும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு படை அதிகாரிகள் அல்லாதோரை ஆளுனர்களாக நியமிக்குமாறும், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு தமிழ் பேசும் நிர்வாக சேவை அதிகாரிகளை அரசாங்க அதிபர்களாக நியமிக்குமாறும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு முதல்வர் பதவியை பறிகொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் – நஜீப் ஏ மஜீத் பதவியேற்றார்.

கிழக்கு மாகாண முதல்வராக நஜீப் ஏ மஜீத் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.

அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்ததை அடுத்தே, நஜீப் ஏ மஜீத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதல்வராக நியமித்துள்ளது.

பங்காளிக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடனேயே மஜீத் கிழக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கம்! நௌறு தீவுகள் நரகம்: இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர் தகவல்!

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கத்தை போன்றது. எனினும் நௌறு தீவு நரகத்தை போன்றது என்று அங்கிருந்து இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளரான சிங்களவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு தொடுதுவ என்ற மீனவக் கிராமத்தில் இருந்து புகலிடக் கோரிக்கையாளராக அவுஸ்திரேலியாவுக்கு சென்று நௌறு தீவுக்கு மாற்றப்பட்டமையால், மீண்டும் இலங்கை திரும்பிய அந்தனி சுஜித் என்பவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொக்கோஸ் தீவுகளில் உள்ள குடிவரவு முகாம் சுவர்க்கத்தை போன்றது. அங்குள்ளவர்கள் நல்லவர்கள். உணவு, உடை, விளையாட்டு, ஆங்கில கற்கை நெறி என்று அனைத்தும் அங்கு சிறப்பாக இருந்தன.

எனினும் நௌறு தீவு, மோசமான நிலையைக் கொண்டது. பாம்புகளும் மிருங்களும் அங்கு நிறையவே உள்ளன உரிய வீட்டு வசதிகள் இல்லை. இந்தநிலையிலேயே உரிய தொழிலை தேடமுடியாது என்ற காரணத்தினால் இலங்கை திரும்பியதாக சுஜித் குறிப்பிட்டுள்ளார்.

நௌறு தீவில் இருந்து கடந்த வாரம் இலங்கை திரும்பிய 18 இலங்கையர்களின் சுஜித்தும் ஒருவராவார். இதேவேளை தாம் ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பியே அவுஸ்திரேலியா சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையில் தமது வருமானத்தைக் கொண்டு மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியாது என்றக் காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா சென்று முடிவெடுத்ததாகவும் சுஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 31 இலங்கையர்கள் நௌறு தீவுகளுக்கு மாற்றப்பட்டனர்

அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்க முயன்ற, இலங்கையர்களில் மேலும் 31 பேர் நேற்று நௌறு தீவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இவர்கள் நௌறு தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடிவரவுக் கொள்கையின் பின்னர், 5 வது புகலிடக்கோரிக்கையாளர் குழு நௌறு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 14 இல் சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்தமாதம் 14ம் நாள் சிறிலங்கா வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் இதுவரை கூறிவந்தது.

தற்போது, சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்துள்ள நிலையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்தமாதம் 14ம் நாள் கொழும்பு வரவுள்ளது.

இந்தக் குழுவினர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனிதஉரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர்.

27 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 30 அகதிகள் சிறிலங்கா கடற்படையால் மீட்பு

அவுஸ்ரேலியாவுக்குச் சென்றபோது இயந்திரம் பழுதடைந்ததால் நடக்கடலில் 27 நாட்களாகத் தத்தளித்த 30 அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று தங்காலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 19 பேர் தமிழர்கள் என்றும், 11 பேர் சிங்களவர்கள் என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆண்களான இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சிறிலங்காவுக்குத் தென்கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் பயணம் செய்த படகின் புரொப்ளர் உடைந்து போனது.

நீர்கொழும்பில் இருந்து கடந்த மாதம் 17ம் நாள் இந்தப் படகு புறப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் கழித்து படகு பழுதடைந்து போனதால், கடந்த 27 நாட்களாக அதில் இருந்த 30 பேரும் நடக்கடலில் செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

படகில் இருந்தவர்கள் விடுத்த அபாய சமிக்ஞைகளை அடுத்து மற்றொரு மீன்பிடிப் படகு சிறிலங்கா கடற்படைக்கு தகவல் கொடுத்தது.

இதையடுத்து சிறிலங்கா கடற்படையின் அதிவேக ரோந்துப்படகு விரைந்து சென்று அந்தப் படகில் இருந்த அனைவரையும் மீட்டு நேற்று கரைக்கு கொண்டு வந்தது.

மீட்கப்பட்ட அனைவரும் பசி மற்றும் தாகத்தினால் உயர் நீரிழப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்தனர்.

யாழ். நெல்லியடி நகைக்கடையில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை!

யாழ்., வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடி நகரப்பகுதியிலுள்ள நகைக்கடையொன்றிலிருந்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் நேற்று பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

மேற்படி நகைக்கடைக்கு வந்த இருவர் ஒரு பவுண் சங்கிலியும் அரைப்பவுண் மோதிரமும் தேவையென கேட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து நகைக்கடை ஊழியர் ஒருவர் அதனை கொடுத்துள்ளார். உடனே அதனை சம்பந்தப்பட்ட நபர் வாங்கி காற்சட்டை பொக்கட்டினுள் வைத்துள்ளார்.

அதன் பின்னர் கதிரையிலிருந்து ௭ழுந்த அவர் பணத்தை ௭டுப்பதாக பாசாங்கு செய்துவிட்டு கடையை விட்டு தப்பியோடியுள்ளார்.

அவருடன் வந்தவரும் அவரை பின்தொடர்ந்து தப்பியோடியுள்ளார்.

இருவரில் ஒருவரை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து நெல்லியடிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் விசாரணையை மேற்கொண்ட போது இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர், நகையைக் களவாடி தப்பியோடியவர் அருகிலுள்ள மதுபானக் கடையிலேயே தன்னுடன் கதைத்ததாகவும், நகை வாங்கப் போவதற்கு தன்னையும் உதவிக்கு வருமாறும் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள டக்ளஸ் தேவானந்தா! – உரிமையாளர்

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமைச் செயலகமாக தற்போது உள்ள யாழ்.நகர் ஸ்ரீதர் தியேட்டர் வளாகத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் அதனை மீட்டுத் தருமாறு கோரி பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை எனவும் அதன் உரிமையாளர் மகேந்திரரவிராஜ் சண்டே லீடர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டிடத்திற்கான வாடகை கூட தனக்குத் தரப்படுவதில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே லீடர் பத்திரிகையில் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதர் தியேட்டர் வளாகம் எனது சொந்தக் கட்டடமாகும். எனது தந்தை வழிச் சொத்தான இதனை தற்போது நான் அணுக முடியாத நிலையுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய திரையரங்காகவும் ( தியேட்டர்)  இது இருக்கிறது.

1991 ம் ஆண்டு நான் இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில் ஒருசில பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமித்து இந்தக் கட்டடத்தை பராமரித்து வந்தேன்.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டிவிட்டு கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டார் எனவும் பல தடவைகள் கட்டடத்தை விடுவிக்குமாறு கேட்டபோதும், விடுவிக்க மறுக்கும் அமைச்சர் கட்டிடத்திற்கான வாடகையினை தருமாறு கேட்டபோதும் 5 ஆயிரம், 6 ஆயிரம் என வாடகை கட்டணத்தை நியமிக்குமாறு கேட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த அமைச்சர் ஆலயங்களுக்கும், பொது மையங்களுக்கும் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நிதியொதுக்கும்போது அதிலிருந்து குறிப்பிட்டளவு நிதி தமக்கு கிடைக்கவேண்டும் என வங்கி கணக்கு இலக்கங்களை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!