Home Blog Page 292

யாழ். மீனவ போராட்டகளத்திலிருந்து மாவையை வெளியேற்றிய மக்கள்

image_pdfPRINT

“அத்துமீறியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள் அதுகுறித்து நாடளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை” என கூறி,  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆர்ப்பாட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டார்.

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா போராட்டம் ஆரம்பமான யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர் சம்மேளன வளாகத்திற்குள் உட்பிரவேசித்திருந்தார்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை அங்கு கூடியிருந்த பெருமளவான இளைஞர்களும், மீனவர்களும் ஒன்றிணைந்து வெளியேறுமாறு கூச்சலிட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“அத்துமீறியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள் அதுகுறித்து நாடளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை”

“நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இதுவரை எங்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?”, “இது மக்கள் போராட்டம்…அரசியலுக்கு இங்கு இடமில்லை…”,

என அங்கிருந்த இளைஞர்களாலும் மக்களாலும் அரசியல் வாதிகளை வெளியேறும்படி கூக்குரலிடப்பட்டது. இதனையடுத்து வளாகத்தைவிட்டு வெளியே வந்த சேனாதிராஜா தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண முல்லைத்தீவில் நடமாடும் சேவை

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான ஆளுநரின் நடமாடும் சேவை எதிர்வரும் 14.06.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணி உரிமம் தொடர்பிலான முறைப்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அதிகளவில் ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக ஆளுநர் றெஜினோல்ட் குரே நடமாடும் சேவையினை முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்தில் நடாத்தவுள்ளார்.

ஏற்கனவே மூன்றுமுறை நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் மேலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு தீர்வினை காண்பதற்காக நான்காவது தடவையாக எதிர்வரும் 14ம் திகதி ஆளுநர் றெஜினோல்ட் குரே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

சிங்கள மீனவர் விவகாரம்; யாழில் மாபெரும் கண்டனப் பேரணி

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி பிரதான வீதுயூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்த்து.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக  வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட  அரச அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

”கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரனும்”

image_pdfPRINT
-ஆனந்த சுதாகரினின் பிள்ளைகள் உருக்கம்

கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா எங்களது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என அயுள்தண்டனைக்கைதி ஆனந்த சுதாகரினின் பிள்ளைகள் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையிலேயே, கிளிநொச்சி வரவுள்ள ஜனாதிபதி தங்களது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயட் தண்டனை அரசியற்கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்களும் இந்நாட்டின் சிறுவர்கள் எனவும் எனவே தங்களின் நிலை உணர்ந்து ஜனாதிபதி தங்களது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யவேண்டும் எனவும் அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் தானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகிறோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மார்ச்மாதம் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

மனைவியின் இறுதிக்கிரியையில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்ட ஆனந்த சுதாகரன் (வெறும் 3 மணித்தியாலங்களே அனுமதி) பின்னர் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் கூடவே சிறைச்சாலை வாகனத்தில் ஏற முற்பட்ட காட்சி ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இதனயைடுத்து மக்கள் முதல் அரசியல் வாதிகள் வரை ஆனந்த சுதாகரனின இரு பிள்ளைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். இதன் உச்சக்கட்டமாக அவ்விரு பிள்ளைகளும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது அப்பாவை விடுதலை செய்யக்கோரிய போது விரைவில் அப்பாவை விடுதலை செய்வேன் என ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்திருந்ததார்.

இதனால் கடந்த சித்திரை புதுவருடத்தின் போது தமது அப்பா விடுதலை செய்யப்படுவார் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் இதுவரையில் அச்சிறுவர்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றாது ஏமாற்றமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

மலசலகூடத்திற்குள்ளிருந்து ஆணின் சடலம் மீட்பு

image_pdfPRINT

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் வீடு ஒன்றின் மலசலகூடத்திற்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு ஜோர்ஜ் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீடு ஒன்றின் மலசல கூடத்திற்குள் இருந்தே இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த 48 வயதுடைய சுரேந்திரன் என இனங்காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வை.நெடியகாட்டில் பதற்றம்; 10 மேற்பட்டோருக்கு வாள் வெட்டு

image_pdfPRINT

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் விளையாட்டு மைதானம் தொடர்பில் இளைஞர்களிடையே ஏற்றப்பட்ட மோதலில் சுமார் 10 இற்கும்  அதிகமானவர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர்.

விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாமே பின்னர்  கைகலப்பாகி இன்று வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இதனால் வல்வெட்டித்துறையில் தற்போது பதற்ற நிலை தோன்றியுள்ளதுடன் குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்குள் சரி செய்யாவிட்டால் கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை

image_pdfPRINT

-அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

நாங்கள் சிங்கள மயமாக்களுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

முப்பது ஆண்டு கால போருக்குப்பின்னர் வடக்கு மாகாணத்திற்கு தேவையான தகுதி மிக்க வைத்தியர்களை தகுதி மிக்க பொறியியலாளர்களை தகுதி மிக்க ஆசிரியர்களை தகுதி மிக்க சிவில் சேவையாளர்களை சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை நாங்கள் பெற முடியாமல் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய சூழல் எழுந்திருக்கிறது.

இதனால் தென்னிலங்கையிலிருந்து பலரை இங்கே கொண்டுவரவேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.

நாங்கள் கல்வி கற்ற காலத்தில் விஞ்ஞானத்துறையில் ஐந்து துறைகள் மட்டுமே காணப்பட்டன. ஆனால் இன்று அப்படியல்ல. விஞ்ஞானத் துறையில் மட்டும் 27 இற்கும் அதிகமான துறைகள் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றன. கணித விஞ்ஞானத்துறைகளில் தற்போது 40 இற்கும் அதிகமான துறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஹாட்லி கல்லூரி போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள பாடசாலைகள் தமது மாணவர்களை 6 ஆம் தரத்திலிருந்தே அதிகமாக கணித விஞ்ஞானத் துறைகளை நோக்கி நகர்த்த வேண்டும்.

எங்களுடைய யாழ் போதனா வைத்தியசாலை வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்திய சாலைகளில் வைத்தியர்கள்,தாதிகள் உள்ளிட்டோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே அதிகம் காணப்படுகின்றனர். இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்களுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும்.

இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் அதற்கான களம் பாடசாலைகள் தான். ஆகவே வடக்கு மாகாணத்தில் அதிகமான மாணவர்களையும் அதிக வளங்களையும் கொண்ட பெரிய பாடசாலைகள் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன் எனதெரிவித்தார்.

‘பாதுகாப்பு அதிகாரிகள் எம்மை சந்திக்கிறார்களில்லை’ – கூட்டமைப்பு புலம்பல்

image_pdfPRINT

பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை சந்திப்பதை புறக்கணித்து வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு அதிகாரிகளே தம்முடன் சந்திப்புக்களை ஏற்படுத்த விரும்புவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் மக்களின் பிரச்சினையை எவ்வாறு அறிவிப்பது என்பதே பிரச்சினையாக மாறியுள்ளது என மேலும் தெரிவித்த அவர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி தம்முடனான சந்திப்புக்களுக்கு நேரத்தை ஒதுக்க qமுடியாது என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சுட்டிக்காட்டினார்.

பரபரப்பை ஏற்படுத்திய குழந்தையின் மரணம்; 4 நாட்களின் பின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

image_pdfPRINT

இரண்டாவது முறை இறுதிக்கிரியையின் போதும் உயிர் இருப்பதாக உணரப்பட்ட சிறுமி  தனியார்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற நிலையில்  உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையால்    அறிக்கையிடப்பட்டு நான்கு நாட்களின் பின்னரே மீண்டும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் நீடித்தமையால் அவள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இதனையடுத்து குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் (7) வீட்டில் நடைபெற்ற போது முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது. அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது.

அதனையடுத்து குழந்தை தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இந்து முறைப்படியும் வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள் பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து குழந்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் இறுதிச் சடங்கு நேற்று நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் குழப்பம்  ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்த நிலையில் குழந்தை நேற்றும் மலம் சலம் கழித்துள்ளதுடன் அவரின் நாடித்துடிப்பு அவ்வவ்போது உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே அவர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடலட்டை தடைப் போராட்டத்தில் கட்சிகளுக்குள் சர்ச்சை

image_pdfPRINT

கூட்டமைப்பு- முன்னணி ஆதரவாளர்கள் முறுகல் 

கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் மக்களுடன் பங்கேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திரலிங்கம் சுகிர்தன், ரவிகரன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனரன் .

இந்நிலையில் போராட்டத்தின் போது  ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், “கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இதை கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக பன்னீர்ச் செல்வம் “2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் அதைத்தானே செய்தீர்கள்” என்று கஜேந்திரனுடன் தர்க்கப்பட்டார்.

பின்னர் தர்க்கத்தில் ஈடுபட்டவர்களை ஏனையோர் சமரசப்படுத்த குழப்ப நிலை முடிவுக்கு வந்தது.

கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்துக்குள் நுழையும் இரு தமிழர்

image_pdfPRINT

கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்கள் தெரிவாகி வரலாறு படைத்துள்ளனர்.

கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர்.

விஜய் தணிகாசலமும் மற்றும் லோகன் கணபதி ஆகிய இருவருமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட விஜய் 16,224 வாக்குகளையும் மார்க்கம் தோன்கில் தொகுதியில் போட்டியிட்ட லோகன் கணபதி 18943 வாக்குகளையும் பெற்றனர்.

தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்த தமிழ் இளைஞன் பலி

image_pdfPRINT

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் இன்று ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மின் உயர்த்தியில் மேலே செல்லும் போது தவறி விழுந்தே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

error: Content is protected !!