SHARE
image_pdfPRINT

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் விளையாட்டு மைதானம் தொடர்பில் இளைஞர்களிடையே ஏற்றப்பட்ட மோதலில் சுமார் 10 இற்கும்  அதிகமானவர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர்.

விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாமே பின்னர்  கைகலப்பாகி இன்று வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இதனால் வல்வெட்டித்துறையில் தற்போது பதற்ற நிலை தோன்றியுள்ளதுடன் குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.