SHARE
-ஆனந்த சுதாகரினின் பிள்ளைகள் உருக்கம்

கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா எங்களது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என அயுள்தண்டனைக்கைதி ஆனந்த சுதாகரினின் பிள்ளைகள் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையிலேயே, கிளிநொச்சி வரவுள்ள ஜனாதிபதி தங்களது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயட் தண்டனை அரசியற்கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்களும் இந்நாட்டின் சிறுவர்கள் எனவும் எனவே தங்களின் நிலை உணர்ந்து ஜனாதிபதி தங்களது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யவேண்டும் எனவும் அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் தானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகிறோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மார்ச்மாதம் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

மனைவியின் இறுதிக்கிரியையில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்ட ஆனந்த சுதாகரன் (வெறும் 3 மணித்தியாலங்களே அனுமதி) பின்னர் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் கூடவே சிறைச்சாலை வாகனத்தில் ஏற முற்பட்ட காட்சி ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இதனயைடுத்து மக்கள் முதல் அரசியல் வாதிகள் வரை ஆனந்த சுதாகரனின இரு பிள்ளைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். இதன் உச்சக்கட்டமாக அவ்விரு பிள்ளைகளும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது அப்பாவை விடுதலை செய்யக்கோரிய போது விரைவில் அப்பாவை விடுதலை செய்வேன் என ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்திருந்ததார்.

இதனால் கடந்த சித்திரை புதுவருடத்தின் போது தமது அப்பா விடுதலை செய்யப்படுவார் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் இதுவரையில் அச்சிறுவர்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றாது ஏமாற்றமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Print Friendly, PDF & Email