SHARE

இரண்டாவது முறை இறுதிக்கிரியையின் போதும் உயிர் இருப்பதாக உணரப்பட்ட சிறுமி  தனியார்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற நிலையில்  உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையால்    அறிக்கையிடப்பட்டு நான்கு நாட்களின் பின்னரே மீண்டும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் நீடித்தமையால் அவள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இதனையடுத்து குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் (7) வீட்டில் நடைபெற்ற போது முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது. அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது.

அதனையடுத்து குழந்தை தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இந்து முறைப்படியும் வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள் பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து குழந்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் இறுதிச் சடங்கு நேற்று நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் குழப்பம்  ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்த நிலையில் குழந்தை நேற்றும் மலம் சலம் கழித்துள்ளதுடன் அவரின் நாடித்துடிப்பு அவ்வவ்போது உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே அவர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email