Home Blog Page 284

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அடிக்கல்லை நடுகிறார் பிரதமர்

image_pdfPRINT

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நட்டுவைப்பார் என பிரதமரின் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்கும்
பங்கேற்பார் என பிரதமர் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டது.

“பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி, நேரில் வந்து ஆராய்வதாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்” என பிரதமர் அலுவலகத்திடம் முதல்வன் கேள்வி எழுப்பியது.

“இல்லை இல்லை. அவர் அன்றையதினம் அடிக்கல் நடுவார். இந்த விடயம் யாழ்ப்பாண படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, இந்தியத் தூதுவர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது” என்று பெயரை வெளியிட விரும்பாத பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் முதல்வனுக்கு பதிலளித்தார்.

அலரி மாளிகையில் கடந்த 27ஆம் திகதி நடந்த வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது, அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த, அதனை அண்டிய ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக பிரதமரால், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளிக்கப்பட்டது.

மேலும் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி தாம் யாழ்ப்பாணம் வரும் போது, இந்தியத் தூதுவர் , அங்கு வருவார் என்றும், இருவரும் இணைந்து, பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி இந்த தகவலைத் தெரிவித்தார்.

எனினும் பலாலி விமான நிலையத்துக்கு தேவையான காணியை எடுத்து மேலதிக காணிகள் விடுவிக்கப்படுமா? என முதல்வன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக அதிகாரி,

“பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்து சிவில் விமான போக்குவரத்து பிரிவிடம் கையளிப்பதே பிரதமரின் நோக்கம். மேலதிக காணிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு படையினரின் தீர்மானம்.

அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு சபையே முடிவை எடுக்கும்” என்றார்.

தலையில் துப்பாக்கி சூட்டுடன் முல்லைத்தீவில் இளைஞனின் சடலம் மீட்பு

image_pdfPRINT

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில்,  முள்ளியவளை 1ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22வயதுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞனே அவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தின் தலைப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்கள் காணப்பட்டமையினால் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

கணவன் கண்முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு – யாழில் கொடூரம்

image_pdfPRINT

வட்டுக்கோட்டைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கட்டிவைத்துவிட்டு, கணவன் கண் முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தியதுடன் வீட்டில் இருந்த நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் திருடர்கள் இருவர் நுழைந்துள்ளார்கள். அந்த வீட்டினுள் கணவனும் மனைவியும் இருந்துள்ளனர்.
வீட்டினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கடுமையாக தாக்கியதுடன் அவரின் வாய் கைகளை கட்டி கதிரையுடன் கட்டி வைத்துள்ளார்கள்.

பின்னர் மனைவியை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளார்கள். பின்னர் அங்கிருந்த சிறு தொகை பணத்தையும் பறித்துள்ளார்கள்.
பின்னர் மனைவியின் வாயை கட்டி வைத்து அவரை மிகவும் கொடூரமான முறையில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

குறித்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் அனைத்திலும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதுடன் வாய் தலை என்பவற்றில் பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார்கள். சுமார் 4 மணி நேரம் வரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளார்கள்.

இந்த கொடூரமான சம்பவத்தில் 59 வயதான பெண்னே பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கணவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளார். சம்பவத்தை அறிந்த அயலவர்களால் குறித்த இருவரும் மீட்கப்பட்டு நேற்று காலை 7 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் விசனம் தெரிவித்ததுடன் இவ்வாறன செயற்பாடுகளுக்கு சட்டம் மற்றும் நீதி துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன். தமக்கு பாதுகாப்பில்லை என்றும் உடனடியாக குற்றவாழிகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கு சமய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐ.நா. அமைதிகாப்பு பணிகளிலிருந்து இலங்கை இராணுவத்தினர் இடைநிறுத்தம்

100216-N-HX866-012
image_pdfPRINT

ICPPG க்கு ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களம் உறுதி

ஜக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு ஏற்ப ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தேர்ந்தெடுக்கு பொறிமுறைகளை அமைத்து இலங்கை அரசு அதனை திறம்பட அமுல்படுத்தும் வரை இலங்கை இராணுவத்தினர் ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஜ.நா. தெரிவித்துள்ளது.

ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் பொதுச்செயலாளர் லக்கிரி (JEAN-PIERRE LACROIX) சர்வதேச இன அழிப்பு மற்றும் வழக்காடு மையத்திற்கு (ICPPG) அண்மையில் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் அவ்வமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

.ஐ.நா. அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளுக்காக லெபனான் செல்லவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் ஐக்கியநாடுகள் சபையால் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பில் ICPPG அமைப்பின் நிறைவேற்கு பணிப்பாளர் செல்வி அ. சீவரட்ணத்தினம், நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியின் செயலருக்கு கடிதம் ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி வைத்தார்.

அதில், அமைதிப்படைக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் குறித்த பின்னணியை இணையத்தளங்களின் மூலம் மிக இலகுவாக பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிந்ததாயின் லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த வீரர்கள் குறித்து தங்களிற்கு வழங்கப்பட்ட PHP படிவங்களில் அவரின் பின்னணி எவ்வாறு இடம்பெறாது போயிருந்தன?.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி லெபனானில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படை நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தின் 49 வீரர்களை முன்னதாகவே அனுப்பியிருந்தனர். அதில் 2016 இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அனுப்பப்பட்ட வீரர்கள் தொடர்பில் சிலரது ஆவணங்களை இலங்கை இராணுவத்தினர் இலங்கை மனித உரிமை கவுன்சிலில் சமர்ப்பிக்கத்தவறியுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 திகதி லெபனானுக் அனுப்பப்பட்ட இலங்கையின் 49 வீரர்களும் ஐ.நா. வின் விதிமுறைகளின் படி முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கு அனுப்பட்டார்களா? அப்படி அனுப்பபட்டிருப்பின் அதில் போர் குற்றம் இளைத்தவர்கள் இடம்பெற்றிருந்தமை எவ்வாறு? அப்படியாயின் அவர்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தவும்? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார் என ICPPG தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவோர் அதி உயர் செயற்திறனும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருத்தல் அவசியம். ஆவர்கள் நன்னடத்தை தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்டிருத்தல் கூடாது. துவிரஇ சர்வதேச மனித உரிமை அல்லது மனிதநேயச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டோ அல்லது அவ்வாறான சந்தேகத்திற்கு உட்பட்டவராகவோ இருத்தல் கூடாது. இதனை ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட பரிந்துரை செய்யும் நாடுகளே உறுதிப்படுத்தவேண்டும்.

அந்தவகையில் இதனைச் சரிவர செய்ய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதனாலேயே இலங்கை இராணுவத்தினர் குறித்த பணியில் ஈடுபடுத்தப்படுவது காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் இந்த முடிவினை சர்வதேச இன அழிப்பு மற்றும் வழக்காடும் மையம் வரவேற்பதுடன் சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேயத்தினை பாதுகாக்கும் முகமாக ஐ.நா. அமைதிகாப்பு பணிகளிளில் ஈடுபட உள்ளோரின் விபரங்களை வெளியிடக் கோரிக்கையையும் விடுத்துள்ளது.

ஊடக அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்

ஊடக அறிக்கை –

தணியா தாகம் !

image_pdfPRINT

தமிழீழ வரைபடத்தின் தோற்றம் மின்ன அம்பாள் உலா வந்த காட்சி ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று (29) நிகழ்ந்தேறியுள்ளது

மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்று ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூங்காவன திருவிழாவின்போது தமிழீழ வரைபடத்தால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் வெளி வீதி வலம் வந்த காட்சி இடம்பெற்றது.

மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்த போது திரண்டிருந்த பக்தர்கள் உணர்வு நெகிழ்சி கொண்டனர்.

அதேவேளை குறித்த காட்சி படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த்தேசிய  உணர்வை சிதைக்க சிங்கள பேரினவாதம் பல நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தி வருகின்றபோதிலும் மாறாக்கொள்கையுடன் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பதை இவ்வாறான நிகழ்வுகள் எடுத்து காட்டுகினறன.

சிறுத்தை அடித்துக் கொலை; 10 பேருக்கு விளக்கமறியல்

image_pdfPRINT

சிறுத்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பான சந்தேகநபர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் நடைபெற்ற இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 07 பேரும் இன்று (29) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அது தவிர இச்சம்பவம் தொடர்பில் மேலும் 03 சந்தேகநபர்கள் நீதிமன்றில் சரணடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் 10 பேரையும், எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 21 ஆம் திகதி, கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திற்குள் புகுந்த சிறுத்தையொன்று 10 பேரை காயப்படுத்திய நிலையில், ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் அதனை அடித்துக் கொலை செய்திருந்தனர்.

இதனையடுத்து, அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் ஆராய்ந்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் கொலைக்கு நீதி கோரி மகஜர் கையளிப்பு

image_pdfPRINT
பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதியை கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்கட்டுள்ளது.
சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியைக் கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய இன்று கடையடைப்பும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரசியாகச் சென்று சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்திருந்தனர்.
இதன் பின்னர் அங்கிருந்து பஸ்களில் யாழ் சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆளூநர் ரெஜினோல்ட் கூரேயிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்தனர்.

வடமாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு

image_pdfPRINT

பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜினாவிற்கு நீதி கோரி நாளை வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு அப்பகுதி மக்களும் சமூகமட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

மாணவியின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரம் சந்நியில் மாணவர்களும் பொது அமைப்புக்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையிலையே நாளையதினம் வட மாகாணம் தழுவிய ரீதியில் கதவடைப்பு போராட்டமொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கங்கள், சமூகமட்ட அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோருவதுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இப்போராட்டத்திற்கு தாங்கள் அழைப்பு விடுப்பதாக சமூகமட்ட அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

‘கல்வி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியா வரவேண்டும் ! ; இல்லையேல் போராட்டம் தொடரும்’

image_pdfPRINT

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை ஏழு மணி முதல் சுழிபுரம் சந்தியில் வீதிகளை மறித்து போராடத்தை ஆரம்பித்துள்ளனர்.
மாணவியின் கொலை தொடர்பில் அரசியல் வாதிகளே கல்வித்துறை சார் அதிகாரிகோ சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை எனக் குற்றஞ்ஞாட்டியே இப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்கின்ற அனவரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
எனவே கல்வி அமைச்சு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டுமென்று போராட்டக்கார்ர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் வருகை தந்தாலே தமது போராட்டத்தை தாம் நிறுத்துவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் வெட்டிக் கொலை – மானிப்பாயில் கொடூரம்

image_pdfPRINT

மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாகவுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்ததுவிட்டு தப்பித்துள்ளனர்.

69 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது.
சம்பவம் இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரபாகரன் சொன்னது முற்றிலும் உண்மையே – ஞானசார தேரருக்கு வந்த ஞானம்

image_pdfPRINT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போதுதான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே.

பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், தற்போதுதான் எமக்கு புரிந்துள்ளது.

அரசியலில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் – மிகத் தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார்.

நாட்டு மக்களுக்கு அரசியல்தீர்வு பெற்றுத் தருவதாக கூறி அவரே, இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்முறையை தோற்றுவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது. நாட்டு மக்கள் மகிந்தவையும் நம்ப வேண்டாம் மைத்திரியையும் நம்ப வேண்டாம்.

சிறந்த அரசியல் தலைவரை சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக உள்ளன.

ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும், கடந்த அரசும், தற்போதைய அரசும் நிறைவேற்றவில்லை.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இனிமேலும் தொடர வேண்டாம்” என்று ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலையில் தனக்கு காற்சட்டையை அணிவிக்க முயற்சிக்கப்பட்ட போதும், தான் அதனை அணியவில்லை என்றும் ஞானசார தேரர் கூறினார்.

சிறையில் இருந்த ஐந்து நாள்களும் தான், காவி உடையை கழற்றி வைத்துவிட்டு, சாரமும் சட்டையும் அணிந்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தபால் ஊழியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்: வியாழன் முதல் தபால் சேவை வழமைக்கு

image_pdfPRINT

16 நாள்கள் நீடித்த தபால் திணைக்கள ஊழியர்களின் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்படுவதாக தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இன்று மாலை அறிவித்தார்.

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வு விரைந்து வழங்கப்படும் என தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது தொடர் போராட்டத்தை வரும் ஜூலை 7ஆம் திகதிவரை இடைநிறுத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாளைமறுதினம் வியாழக்கிழமை முதல் தபால் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு, நிரந்தர நியமனம் மற்றும் அரச நிர்வாக சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முனவைத்து கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மத்திய விநியோகப் பகுதி உள்பட தபால் திணைக்கள ஊழியர்கள் 24 ஆயிரம் பேர் நாடுமுழுவதும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் தொடர் போராட்டத்தின் 16ஆவது நாளான இன்று தபால் அமைச்சருடன் பேச்சு நடத்தப்பட்டது.

error: Content is protected !!