SHARE

16 நாள்கள் நீடித்த தபால் திணைக்கள ஊழியர்களின் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்படுவதாக தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இன்று மாலை அறிவித்தார்.

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வு விரைந்து வழங்கப்படும் என தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது தொடர் போராட்டத்தை வரும் ஜூலை 7ஆம் திகதிவரை இடைநிறுத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாளைமறுதினம் வியாழக்கிழமை முதல் தபால் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு, நிரந்தர நியமனம் மற்றும் அரச நிர்வாக சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முனவைத்து கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மத்திய விநியோகப் பகுதி உள்பட தபால் திணைக்கள ஊழியர்கள் 24 ஆயிரம் பேர் நாடுமுழுவதும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் தொடர் போராட்டத்தின் 16ஆவது நாளான இன்று தபால் அமைச்சருடன் பேச்சு நடத்தப்பட்டது.

Print Friendly, PDF & Email