SHARE

நிபந்தனைகயின் அடிப்படையில் பிரித்தானியாவின் கன்சர்வேர்ட்டி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செயலாற்றிவரும் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் குழு அக்கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான Hon. Loue Franch MP அவர்களின் பிரச்சார பணியில் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் ஆளும் கட்சியான கன்சர்வேர்ட்டிவ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பெரும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொள்ள தமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் புலம் பெயர் தமிழர்களும் வாக்குகளின் எண்ணிக்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளாக உள்ளனர் என்பது மறுப்பதுக்கில்லை.

இந்நிலையிலேயே இந்த சர்ந்தப்பத்தினைப்பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டு நீதி வழங்குவதோடு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியா தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழர்களின் தனிநாட்டு தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரச்சார பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டு செயலாற்றி வரும் தமிழ் செயற்பாட்டாளர்கள் Old BexLey and sidcup பகுதியில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Loue Franch MP அவர்களுக்கான ஆதரவு வேண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இன்பராஜ் பத்திநாதர்க, ஜன் தேவராசா ஆகியோர் தலைமையில் செயற்பாட்டாளர்களான மரியநாயகம் வேதநாயகம், ரமணன் சிவலிங்கம்ஈ, ஸ்வரன் டறோஜன், ஏஞ்சலோ நிருசன், பத்மநாதன் துலக்ஷன், றூபன் மத்தியாஸ், ஜெயவீரசிங்கம் பேரானந்தம், சிவசிதம்பரம் கோகுலன், துரைராஜா நீதிராஜா, பரணீதரன் பர்மிலன், பிரியதர்ஷன் கனகலிங்கம் ஆகியோரே இப் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email