SHARE
பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதியை கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்கட்டுள்ளது.
சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியைக் கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய இன்று கடையடைப்பும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரசியாகச் சென்று சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்திருந்தனர்.
இதன் பின்னர் அங்கிருந்து பஸ்களில் யாழ் சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆளூநர் ரெஜினோல்ட் கூரேயிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்தனர்.
Print Friendly, PDF & Email