SHARE
100216-N-HX866-012

ICPPG க்கு ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களம் உறுதி

ஜக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு ஏற்ப ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தேர்ந்தெடுக்கு பொறிமுறைகளை அமைத்து இலங்கை அரசு அதனை திறம்பட அமுல்படுத்தும் வரை இலங்கை இராணுவத்தினர் ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஜ.நா. தெரிவித்துள்ளது.

ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் பொதுச்செயலாளர் லக்கிரி (JEAN-PIERRE LACROIX) சர்வதேச இன அழிப்பு மற்றும் வழக்காடு மையத்திற்கு (ICPPG) அண்மையில் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் அவ்வமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

.ஐ.நா. அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளுக்காக லெபனான் செல்லவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் ஐக்கியநாடுகள் சபையால் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பில் ICPPG அமைப்பின் நிறைவேற்கு பணிப்பாளர் செல்வி அ. சீவரட்ணத்தினம், நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியின் செயலருக்கு கடிதம் ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி வைத்தார்.

அதில், அமைதிப்படைக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் குறித்த பின்னணியை இணையத்தளங்களின் மூலம் மிக இலகுவாக பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிந்ததாயின் லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த வீரர்கள் குறித்து தங்களிற்கு வழங்கப்பட்ட PHP படிவங்களில் அவரின் பின்னணி எவ்வாறு இடம்பெறாது போயிருந்தன?.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி லெபனானில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படை நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தின் 49 வீரர்களை முன்னதாகவே அனுப்பியிருந்தனர். அதில் 2016 இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அனுப்பப்பட்ட வீரர்கள் தொடர்பில் சிலரது ஆவணங்களை இலங்கை இராணுவத்தினர் இலங்கை மனித உரிமை கவுன்சிலில் சமர்ப்பிக்கத்தவறியுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 திகதி லெபனானுக் அனுப்பப்பட்ட இலங்கையின் 49 வீரர்களும் ஐ.நா. வின் விதிமுறைகளின் படி முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கு அனுப்பட்டார்களா? அப்படி அனுப்பபட்டிருப்பின் அதில் போர் குற்றம் இளைத்தவர்கள் இடம்பெற்றிருந்தமை எவ்வாறு? அப்படியாயின் அவர்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தவும்? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார் என ICPPG தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவோர் அதி உயர் செயற்திறனும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருத்தல் அவசியம். ஆவர்கள் நன்னடத்தை தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்டிருத்தல் கூடாது. துவிரஇ சர்வதேச மனித உரிமை அல்லது மனிதநேயச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டோ அல்லது அவ்வாறான சந்தேகத்திற்கு உட்பட்டவராகவோ இருத்தல் கூடாது. இதனை ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட பரிந்துரை செய்யும் நாடுகளே உறுதிப்படுத்தவேண்டும்.

அந்தவகையில் இதனைச் சரிவர செய்ய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதனாலேயே இலங்கை இராணுவத்தினர் குறித்த பணியில் ஈடுபடுத்தப்படுவது காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தின் இந்த முடிவினை சர்வதேச இன அழிப்பு மற்றும் வழக்காடும் மையம் வரவேற்பதுடன் சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேயத்தினை பாதுகாக்கும் முகமாக ஐ.நா. அமைதிகாப்பு பணிகளிளில் ஈடுபட உள்ளோரின் விபரங்களை வெளியிடக் கோரிக்கையையும் விடுத்துள்ளது.

ஊடக அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்

ஊடக அறிக்கை –

Print Friendly, PDF & Email