Home Blog Page 30

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது பற்றி பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்!

image_pdfPRINT

இணைந்து ஆதரவு தரும்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்புமாறு ICPPG அவசர கோரிக்கை

இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் செவ்வாய் அன்று (05 Dec 2023) மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு பாராளுமன்றின் வெஸ்ட் மினிட்டர் அரங்கத்தில் (Westminster Hall) நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரத்தின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த 2020 காலப்பகுதியில் இருந்து ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன. அத்துடன் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரும் சித்தரவதையால் பாதிக்கப்பட்டோரும் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றர்.

கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது. இது போல மே மற்றும் யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திரு கீத் குலசேகரம் அவர்களின் முயற்சியில், பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர் ஒருங்கிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களையும் உயர்மட்ட அரசில் தலைவல்களையும் தொடர்பு கொண்டு, தொடர் இராஜதந்திர சந்தப்புக்களை நடாத்தி, இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தேடி வருவதுடன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அழுத்தம் வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த முயற்சியில் பிரித்தானிய பழமைவாத கட்சிக்கான தமிழர்கள் (BTC), தொழில்கட்சிக்கான தமிழர்கள் (TFL), Sri Lanka Campain மற்றும் Redress ஆகிய அமைப்புக்களும் இணைந்து கொண்டன. இந்த அடிப்படையில் இதுவரை 600க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்ளை தொடர்பு கொண்டுள்ளதுடன், 60க்கு மேற்பட்ட சந்திப்புக்களையும் நடாத்தியுள்ளனர்.

கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (GSR) தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்களின் இடைவிடாத முயற்சியின் விளைவாக பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பின்கள் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யுமாறு பகிரங்கமாக கோரிக்கை விடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றும் அண்மையில் வெளிவிடப்பட்டது.

இந்த அயராத முயற்சியின் அடுத்த கட்ட முன்னேற்றமாக, தற்போது தழிழருக்கான பிரித்தானிய அனைத்துகட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPGT) தலைவரான மதிப்பிற்குரிய எலியட் கொல்பேர்ண் (Hon. Elliot Colburn MP) அவர்களின் உதவியுடன், BTC மற்றும் TFL அமைப்புக்களால் இந்த முக்கிய பாராளுமன்ற விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய 10 Dec 2023 அன்று பிரித்தானியா தனது புதிய தடைப்பட்டியலை அறிவிக்க உள்ள நிலையில் இந்த பாராளுமன்ற விவாதம் மிகமுக்கிய மாற்றத்தை கொண்டுவரக்கூடியது என்றும், இதனால் இந்த அரிய சந்தர்ப்பத்தை ஈழத்தமிழர்கள் தவறவிடக்கூடாது என்றும் ICPPG தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தமது பகுதி பாராளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கான மாதிரி கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அனைவரும் தயவுசெய்து அவசரமாக இந்த கடிதத்தை அல்லது இதுபோன்ற கடிதம் ஒன்றை அவரவர் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி உதவுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த அயராத முயற்சியின் அடுத்த கட்ட முன்னேற்றமாக, தற்போது ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய மாட்டின் டே (Hon. Martyn Day MP அவர்களால், தழிழருக்கான பிரித்தானிய அனைத்துகட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPGT) தலைவரான மதிப்பிற்குரிய எலியட் கொல்பேர்ண் (Hon. Elliot Colburn MP) அவர்கள், BTC மற்றும் TFL ஆகியோரின் உதவியுடன் இந்த முக்கிய பாராளுமன்ற விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Letter-to-MP-Ask-to-Attend-Parliamentry-Debate-on-Sanction-SL-War-Criminals-05-Dec-2023

தமிழீழ தேசியக்கொடி பொறித்த ஆடை அணிந்த இளைஞன் யாழில் கைது

image_pdfPRINT

தமிழீழ தேசியத்தலைவர் மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஆகியன பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் இன்றைய தினம்(28)  இராணுவ புலனாய்வுப்  பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப் படம் பொறித்த ஆடை அணிந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் பின்னர்   கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் மாவீரர்களுக்கு அஞ்சலி

image_pdfPRINT

தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு- கிழக்கில் இம்முறை மாவீர் துயிலுமில்லங்கள் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் ஈழதேசத்தின் யாழ்மாவட்டத்தில் கோப்பாய், வடமராட்சி, கொடிகாமம், உடுத்துறை தீவகம் சாட்டி, மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் வல்வெட்டித்துறை தீருவில் திடல் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில்- கனகபுரம் விசுவமடு, முழங்காவில்,
மன்னார் மாவட்டத்தில்- ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான்,
முல்லைத்தீவு மாவட்டத்தில்- விசுவமடு, முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில், பச்சைப்புல்மோட்டை
வவுனியா மாவட்டத்தில்- ஈச்சங்குளம்
அம்பாறை மாவட்டத்தில் – கஞ்சிக்குடியாறு,
மட்டக்களப்பு மாவட்டத்தில் – மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதேவேளை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ், கனடா, அமெரிக்கா, நியூஸிலாந்து உட்பட தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரர் நாளில் இலங்கை போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுப்பு

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

இலங்கை போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல் திட்டம் மாவீரர் நாளாகிய இன்று நவம்பர் 27 லண்டன் ஆக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையில் இன்று வரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல் திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக் குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளான புலம்பெயர் தமிழர்களிடம் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்திட்டம் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி இந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் இடைக்கால நீதி பொறிமுறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு இச் செயற்திட்டம் அத்தியாவசியமாக இருக்கின்றமையால் மிகுந்த ஆர்வத்துடன் பணியில் தாமாக முன்வந்து ஈடுபடுவதுடன் ஈழ மண்ணின் விடுதலைக்காய் உயிர் நீத்த வரலாற்று நாயகர்களின் கனவை நினைவாக்க எம்மாலான சிறு பணியை செய்வதில் மன நிறைவடைவதாக தெரிவித்தார்கள்.

மேற்படி செயற்திட்டத்தில் செயற்பாட்டாளர்களான கனிஸ்ரன் விமலதாசன், நாகராசா லம்போதரன், லக்‌ஷ்மன் திருஞானசம்பந்தர், டிலக்‌ஷன் மனோரஜன், புகழினியன் விக்டர் விமலசிங்கம், சிவநாதன் டிலக்சன், பிரசாந் இராசரத்தினம், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி,,துலக்‌ஷன் பாலாசன்முகராசா, ஜதுர்ஷன் ஜெயக்குமார், சசிகரன் செல்வசுந்தரம், றொனால்ட் அன்ரனீஸ் உதயகுமாரன்
றொனிஸ்ரன் அன்ரனீஸ் உதயகுமாரன், கஜானந் சுந்தரலிங்கம், துவாரகன், செல்வரெத்தினம், ஶ்ரீ அபிராமி ஶ்ரீ பேலேஸ்வரன், சிவசிதம்பரம் கோகுலன், ரகிஷன் சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Deepening Impunity in Sri Lanka as Government Fails to Address War Crimes and Suppresses Commemoration Rights

image_pdfPRINT

In a scathing assessment of the state of affairs in Sri Lanka, Yasmin Sooka, the director of the International Truth and Justice Project (ITJP), has cast a stark light on the deepening culture of impunity persisting within the nation. Sooka’s revelation underscores the government’s persistent failure to ensure accountability for the war crimes and crimes against humanity committed during the culmination of the civil war in May 2009.

The aftermath of the civil war has not ushered in an era of peace for Tamils in Sri Lanka; instead, they continue to face persecution both within the country and abroad. Sooka pointed out that the ongoing violence perpetrated by security forces not only inflicts harm on individuals and their families but also serves to dismantle the very social fabric upon which coexistence, tradition, and trust are built.

Of particular concern is the Government’s blatant disregard for the legitimate rights of Tamil families to mourn and remember their loved ones on November 27th, a date significant to the Tamil struggle for liberation.

The ITJP has been diligently documenting a disturbing trend since 2014, wherein torture survivors who have fled abroad face continued threats and intimidation from Sri Lankan intelligence agencies. Those attending remembrance events in the north-east are systematically photographed, later becoming targets of threats and harassment, fostering an atmosphere of fear and silencing dissent.

Sooka shared a poignant and tragic account of a man who, under the impression that it was safe to speak at a cemetery event on November 27, 2022, was later subjected to abduction, torture, and forced to flee. This individual, who left behind a newborn baby and a thriving business, symbolizes the human cost of the Government’s oppressive actions.

The interrogation tactics employed by security forces, particularly focusing on the funding of commemorations, were criticized by Sooka as missing the essence of these events. Commemorations, she emphasized, are not only acts of resistance but also serve as expressions of deep personal grief for survivors of the war, who find themselves not only victims of state-sponsored violence but also grappling with the overwhelming barrier of impunity.

Survivors consider it their moral and social responsibility to remember the dead and the disappeared, constituting a collective act of remembrance that transcends individual suffering.

Despite relentless repression, Tamil survivors abroad continue to courageously reclaim their right to remember the dead, finding new ways to articulate their experiences. These endeavors are not merely for personal catharsis but are seen as crucial for keeping the memory alive for future generations.

Sooka challenged President Ranil Wickremesinghe’s proposal for a Truth Commission, expressing doubt about survivors’ willingness to participate in a context where their basic right to mourn is denied. To make the commission successful and credible, President Wickremesinghe must take decisive action, ensuring an end to state-sponsored violence, no surveillance on November 27, and a commitment to prevent reprisals against organizers or participants.

In a plea to the international community, Sooka urged them not to remain silent in the face of this repression. She called for the deployment of international observers to ensure transparency during commemorations, emphasizing the critical need to prevent further repression. Sooka underscored the importance of guaranteeing that officers in plain clothes are not surveilling or documenting events, asserting that the diplomatic community must play a proactive role in addressing the ongoing human rights violations in Sri Lanka.

மாவீரர் தின நிகழ்வுகளில் சர்வதேச கண்காணிப்பாளின் பிரசன்னம் வேண்டும்

image_pdfPRINT

சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான செயல்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள்

தமிழீழ மாவீரர் நாள் நினைவுகூரும் நிகழ்வுகளில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படுவது பற்றியும், இதற்குத் தீர்வாக சர்வதேச கண்காணிப்பாளர்களை நினைவு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு இராஜதந்திரிகள் அனுப்பவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்த சிறுகுறிப்பின் முழுவடிவம் இதோ:

2009 மே மாதத்தில் உள்நாட்டுப்போரின் முடிவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளமையானது, சிறிலங்காவில் தண்டனையிலிருந்து விலக்களிப்பு மேலும் அதிகரித்துள்ளதையே காட்டிநிற்கின்றது.

போர் முடிவடைந்திருந்தாலும், சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள்மீதான துன்புறுத்தல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையானது தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் மட்டுமல்லாது, கூட்டுவாழ்வு, பாரம்பரியம், நம்பிக்கை ஆகியனவற்றைக் கட்டியெழுப்பும் சமூகக்கட்டமைப்பையும் சிதைக்கின்றது.

நவம்பர் 27ஆம் திகதி தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்தவர்களை நினைவுகூருவதற்கும் கவலைகொள்வதற்கும் தமிழ் குடும்பங்களுக்கு இருக்கும் நியாயமான உரிமைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் மீறிவருகின்றது.

2014ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பி, வெளிநாடுகளுக்குத் தப்பிவந்தவர்களின் வாக்குமூலங்களை எனது நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது. சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்கள் வடக்குக் கிழக்கில் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைப் படம்பிடித்து, பின்னர் அவர்களிடம் சென்று, அவர்களை அச்சுறுத்தியுள்ளன.

2022 நவம்பரில் வடக்கிலுள்ள கல்லறையொன்றில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஒருவரை நாங்கள் நேர்காணல் கண்டபோது, புதிய ஜனாதிபதி இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதை அனுமதித்திருந்தமையால், உரையாற்றுவது பாதுகாப்பானது என்று தான் எண்ணியதாகத் தெரிவித்தார். ஆனால், ஓரிரு நாட்களின் பின்னர், அவரது கருத்துச் சுதந்திரத்தையும், நடமாடும் சுதந்திரத்தையும் மீறும் வகையில், அவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்; அவர் தன்னுடைய புதிதாகப் பிறந்த குழந்தையையும் செழிப்பாக நடந்த வியாபாரத்தையும் கைவிட்டு, வெளியேறினார்.

‘இந்த நினைவு நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்குவது’ யார் என்று விசாரணைகளில் பாதுகாப்புப் படைகள் கேட்கின்றார்கள். இதில் முக்கியமான ஒரு விடயத்தை அவர்கள் தவறவிடுகின்றார்கள். நினைவேந்தல்களை ஏற்பாடுசெய்வதும், அவற்றில் கலந்துகொள்வதும் வெறுமனே எதிர்ப்பினை வெளிப்படுத்தும் செயல்கள் அல்ல, மாறாக, இக்கொடூரமான போரில் உயிர்தப்பிய அனைவராலும் உணரப்படும் தனிப்பட்ட துயரங்களின் வெளிப்பாடேயாகும். அரச ஆதரவு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டவர்களே; அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் காணமல்போதல்கள், சித்திரவதை அல்லது மரணம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களுக்கு மேலதிகமாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையின்மையை காண்பதுடன். உயிர்ப்பழித்ததற்கான குற்றஉணர்ச்சியுடனும் வாழ்கின்றார்கள்.

உண்மைக்கும் நீதிக்குமான அவர்களது தேடலில், இறந்துபோனவர்களையும் காணாமற்போனவர்களையும் தொடர்ந்து நினைவுகூருவது தங்களது தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பென உயிர்தப்பியவர்கள் கருதுகின்றார்கள். நவம்பர் 27இல் வெறுமனே அவர்களது குடும்பங்களும் நண்பர்களும் மட்டுமன்றி, மாறாக முழுச் சமூகமே அவர்களின் தியாகங்களையும் கூட்டுத் துன்பத்தையும் நினைவுகூருகின்றது.

உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பொது இடங்களிலும் தனியாகவும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான தங்களது உரிமையினை மீளவும் பெற்றுக்கொள்வதை பல ஆண்டுகளாக நாம் கண்டிருக்கின்றோம். இந்தச் செயற்பாட்டில் உயிர்தப்பி, சாட்சியங்களாக இருப்பதன் நிதர்சனத்துடன் அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாங்கள்பட்ட தனிப்பட்ட துன்பங்களை மட்டுன்றி, தங்களது சமூகங்களது துன்பங்களதும் நினைவுகளையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக புதிய வழிகளைத் தேடிக்கொள்கின்றார்கள்.

எந்தவொரு அடக்குமுறையும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மனிதனுடைய தேவையை, குறிப்பாக அது உங்களது பிள்ளையாவோ அல்லது பெற்றோராகவே இருக்கும்பட்டத்தில், அடக்கிவிடப்போவதில்லை. போர் முடிந்தபின்னர், பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது, சிறைக்காவலர்கள் பழிவாங்குவாங்குவார்கள் என்பதை முழுமையாகத் தெரிந்திருந்தும், நவம்பர் 27ஆம் திகதி அதிகாலையில் எழுந்து மெழுகுதிரி ஏற்றியதாக சித்திரவதையிலிலிருந்து உயிர்தப்பிவந்த ஒருவர் விபரித்தார். இருப்பினும், அவர்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி சுயமரியாதை அதுவாகவே இருந்ததுடன், அதற்கான அந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றினை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார்; போரில் உயிர் தப்பியவர்கள் அவர்களுக்கிருக்கும் வருத்தப்படுவதற்கான உரிமையைக் கூட பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ள, நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்வதன்மூலமாக தங்களது மனவலிகளுக்கு ஆறுதல்தேடக்கூட முடியாதுள்ள சூழ்நிலையில், இவ்வாறான ஒரு அமைப்பில் உயர்தப்பியவர்கள் கலந்துகொண்டு, தங்கள் வாக்குமூலத்தை வழங்குவது சாத்தியமல்ல. உண்மயை கண்டறியும் ஆணைக்குழு நம்பகரமானதாகச் செயற்பட்டு, வெற்றியடையவேண்டுமாக இருந்தால், அரச ஆதரவுடன் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், நவம்பர் 27ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளைப் பாதுகாப்புப் படைகள் கண்காணிக்காது விடுவதுடன் என்பதுடன், இவற்றை ஏற்பாடுகள் செய்பவர்கள் அல்லது பங்குபற்றுபவர்களுக்கு எதிராக எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்கவும்கூடாது. இந்த அடக்குமுறையைக் கண்டு இராஜதந்திர சமூகம் அமைதிகாக்காது இருப்பதுடன். சாதாரண உடைகளில் வரும் அதிகாரிகள் புதைப்படங்கள் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அனுப்பவேண்டும்.

யஸ்மின் சூக்கா,
JTJP

மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் குருத்திகொடை வழங்கிய தமிழர்கள்

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

மாவீரர் வாரத்தின் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் தமிழர் செறிந்து வாழும் இடம் எங்கும் உணர்ச்சியுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாள் Shepherds Bush Donar Center இல் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்து இடம் பெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்குருதிக் கொடை நிகழ்வில், தமிழ் இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரை தியாகம் செய்த வரலாற்று நாயகர்களுக்காய், பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் முன்வந்து, உணர்வோடு உதிரம் வழங்கினர்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட கொடையாளிகளை கொளரவித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேவேளை, குறித்த நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் 69 அவது அகவை தின நிகழ்வும் இடம்பெற்று கேக் வெட்டி மகிழப்பட்டது.

அதிகமான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றமையால் பல்வேறு வேற்று மொழி பேசும் மக்களும் இவ்விடத்தில் திரண்டு உதிரக் கொடையாளிகளிடம் அங்கு நடக்கும் விடயம் எதற்காக இடம் பெறுகின்றது என்று கேட்டு அறிந்து கொண்டதுடன் எதிர்வரும் காலங்களில் தாமும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக வாக்குறுதியளித்தனர்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்க கோரிக்கை!

image_pdfPRINT

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளின் வீடியோ தொகுப்பு தமிழ் இளையோரால் வெளியீடு

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக கோரும் காணொளி ஒன்றினை தமிழ் இளையோர் வெளியிட்டுள்ளார்கள்.

உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு விதிமுறைகள் 2020 இல் நடைமுறைக்கு வந்ததில் இருந்து ICPPG இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யக் கோரும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் ICPPG உடன் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தமையும் இது போல மே மற்றும் யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (GSR) தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பில் ICPPG, தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேடி அனைவரையும்; தொடர்பு கொண்டு, தொடர் சந்தப்புக்களை நடாத்தி, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அழுத்தம் வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் இடைவிடாத முயற்சியின் விளைவாக பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பின்கள் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யுமாறு பகிரங்கமாக கோரிக்கை விடுத்து தங்கள் ஆதரவினை வெரிவித்து வருகின்றனர்.

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கைப் போர்க் குற்றவாளிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பின்கள் வெளியிட்ட பகிரங்க அறிக்கைகளைத் தொகுத்து இன்று தமிழ் இளையோர் காணொளி ஒன்றை வெளியிட்டனர்.

https://youtu.be/8RMTM_d3k2s?si=1Gs8HGIfZZkPuYh8

British Politicians jointly call upon the UK to Ban the Sri Lankan War Criminals!

image_pdfPRINT

Tamil Youth release a video of British MPs publicly calling for sanctions

Since the Global Human Rights Sanctions Regulations 2020 came into force, the ICPPG launched a campaign to call upon the UK government to sanction the Sri Lankan war criminals including the notorious Shavendra Silva who are response for the Genocide of Tamils in Sri Lanka. The Tamil youth and the victims in the UK joined the campaign and took it forward in multiple channels.

In April 2021, the ITJP, a highly respected Human Rights Organization submitted a 50-page dossier consisting evidence of Shavendra Silva’s involvement in the war crimes to the Sanctions Department of the UK’s FCDO and demanded his ban in the UK.

In May and in June 2021, the ICPPG submitted petitions to the British Prime Minister and the FCDO based on testimonies of at least 200 Tamil Youth tortured and sexually abused by the Sri Lankan armed forces most recently in 2019 to 2021.

As a result of the rigorous campaign, on 18 May 2022 an Early Day Motion (EDM 64) was brought in the British Parliament. The Tamil victims managed to persuade more than 30 British MPs jointly signed the EDM calling for sanctions and independent investigation into the War Crimes and Genocide in Sri Lanka.

Under the pursuit of the ICPPG, the Tamil youth and the victims continue to meet the British Parliamentarians and urge them to apply political pressure on the FCDO to take serious steps to sanction Shavendra Silva and others. As a result of their relentless efforts, several British MPs joined the campaign and expressed their support by publicly calling for sanctions.

Today, the campaigners launched a video compiling the public statements made by the British politicians in support of the call to sanction Sri Lankan war criminals including Shavendra Silva, the Chief of the Sri Lankan Army.

https://youtu.be/8RMTM_d3k2s

இலங்கை இராணுவ அதிகாரிகளை தடை செய்ய பிரித்தானியாவில் தொடரும் முயற்சி

image_pdfPRINT

டேவிட் சிம்மண்ட்ஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் ரூயிஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் (Ruislip, Northwood and Pinner) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் சிம்மண்ட்ஸ் எம்.பி (Hon David Simmonds MP) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (20/11/2023) காலை 10.15 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், பழமைமைவாவாதக்கட்சிக்காகான தமிழர்கள் அமைமைப்பின் (British Tamil Conservatives – BTC) செயலாளர் திரு. கஜன் ராஜ் அவர்களும், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்‌ஷான் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான திரு. கங்காதரன் திலக்ஷன், திரு. மோகனதர்ஷன் நாகநாதன், மற்றும் திரு. ஸ்ரீபன் நாகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

அடுத்து உரையாற்றிய திரு. கஜன்ராஜ் அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காண்பிப்பது மிகவும் ஏமாற்றம் தருகிறது என்றும் இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்வது தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய பொப் பிளக்மன் (Hon. Bob Blackman MP) ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனில் இணைந்து செயற்படும்படியும் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் ஆதங்கத்தையும், தனது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தான் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைப்பதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் வாக்களித்தார். அந்துடன் திரு. கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணையவும், FCDO விற்கு தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி தன்னாலான வகையில் அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.

உலகக் கிண்ணத் தொடர் மாற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

image_pdfPRINT

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எமது நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தில் காணப்படும் குழப்பங்களே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாட்டில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் 5 கிரிக்கெட் தொடர்களும் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் நிர்வாகத்தின் கீழ் தான் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், 2000 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2002 ஆம் ஆண்டு செம்பியன் கிண்ணத் தொடர், 2006 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர், 2012 ஆம் ஆண்டு டி- 20 தொடர் என்பன இடைக்கால கட்டுப்பாட்டுக் குழு நிர்வாகத்தின் கீழ் தான் நாட்டில் இடம்பெற்றன.

எனவே, விளையாட்டுத் துறை அமைச்சரும், ஜனாதிபதியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் சபையிடமும், ஐ.சி.சியிடமும் இது தொடர்பான விளக்கத்தை கோர வேண்டும்.

எப்படி இந்தத் தரப்பினர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எமது நாட்டில் நடைபெறவிருந்த தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும்?

அத்தோடு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர், இதன் ஊடாக தேசத்துரோக செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!