டிலக்ஷன் மனோரஜன்
இலங்கை போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல் திட்டம் மாவீரர் நாளாகிய இன்று நவம்பர் 27 லண்டன் ஆக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையில் இன்று வரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல் திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக் குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளான புலம்பெயர் தமிழர்களிடம் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்திட்டம் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி இந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் இடைக்கால நீதி பொறிமுறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு இச் செயற்திட்டம் அத்தியாவசியமாக இருக்கின்றமையால் மிகுந்த ஆர்வத்துடன் பணியில் தாமாக முன்வந்து ஈடுபடுவதுடன் ஈழ மண்ணின் விடுதலைக்காய் உயிர் நீத்த வரலாற்று நாயகர்களின் கனவை நினைவாக்க எம்மாலான சிறு பணியை செய்வதில் மன நிறைவடைவதாக தெரிவித்தார்கள்.
மேற்படி செயற்திட்டத்தில் செயற்பாட்டாளர்களான கனிஸ்ரன் விமலதாசன், நாகராசா லம்போதரன், லக்ஷ்மன் திருஞானசம்பந்தர், டிலக்ஷன் மனோரஜன், புகழினியன் விக்டர் விமலசிங்கம், சிவநாதன் டிலக்சன், பிரசாந் இராசரத்தினம், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி,,துலக்ஷன் பாலாசன்முகராசா, ஜதுர்ஷன் ஜெயக்குமார், சசிகரன் செல்வசுந்தரம், றொனால்ட் அன்ரனீஸ் உதயகுமாரன்
றொனிஸ்ரன் அன்ரனீஸ் உதயகுமாரன், கஜானந் சுந்தரலிங்கம், துவாரகன், செல்வரெத்தினம், ஶ்ரீ அபிராமி ஶ்ரீ பேலேஸ்வரன், சிவசிதம்பரம் கோகுலன், ரகிஷன் சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.