Home Blog Page 298

வடமராட்சியில் வாடிகளுக்கு எதிராக போராடியவர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வாடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு கடற்படை புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு -தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களில் பலருக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளை வானில் ஏத்துவம் 4ஆம் மாடியைப் பார்க்க ஆசையாக இருக்கிறதா? என்று அச்சுறுத்தலை கடற்படையின் புலனாய்வாளர்களால் விடுக்கப்படுகின்றது என்று மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கும் பிரதேச செயலருக்கும் இடையிலான கலந்துரையாடலில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். கடலட்டை வாடி தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்படாது கலந்துரையாடல் நிறைவு பெற்றது. எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தவறினால் மாபெரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் தொடர்ச்சியாக மீட்கப்படும் மனித எலும்புகள்

image_pdfPRINT

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்று காலை 7 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமானது.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும், மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக இன்று ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள் மீட்கப்பட்டது

மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
-மேலும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணிலும்  அகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள், பற்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அகழ்வு பணிகள்  இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரயில்வே ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

image_pdfPRINT

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி ரயில்வே தொழிநுட்ப சேவைச் தொழிற்சங்கம் இன்று மாலை 4 மணி முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது. 

எனினும் இன்றைய ரயில் போக்குவரத்து எவ்வித பாதிப்புமின்றி வழமைபோல் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே தொழில்நுட்ப சேவைச் தொழிற்சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித தெரிவிக்கையில்,
இத்தொழிற்சங்கப் போராட்டத்தில் ரயில்வே இயக்குனர்கள், தொழிநுட்பபிரிவு, பழுது பார்த்தல் பிரிவு, தொழில்நுட்ப அதிகாரிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 
12 சதவீத சம்பள அதிகரிப்பு, ஏனைய கொடுப்பனவுகள் உட்பட நீண்ட காலமாக நிலவிவரும் எமது பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டுள்ளோம். எனினும் இதுவரையில் எமக்கு உரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

இது குறித்து போக்குவரத்து துறை பிரதியமைச்சர் அஷோக அபேசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அப் பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்கவில்லை. அதனாலேயே இன்று மாலை 4 மணிமுதல் 48 மணிநேர பகிஷ்கரிப்பில் ஈடுபட ஆரம்பித்தோம் என்றார்.

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி போதும் – விமானப்படை

image_pdfPRINT

பலாலி பிராந்திய விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி மட்டுமே தேவை என விமானப்படை தரப்பு தெரிவித்துள்ள நிலையில் விமானநிலைய விஸ்தரிப்புக்கு என மீண்டும் மேலதிகமாக பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படக்கூடாது என மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாதுகாப்பு படைத்தரப்பினர், அரச அதிகரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலேயே மேற்குறித்த விடயத்தை விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு ஏற்கனவே 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலதிகமாக பொதுமக்களின் 400 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படப்போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமைக்கு பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எனவே நேற்றைய கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர் அதில், பலாலி பிராந்திய விமானநிலைய விஸ்தரிப்புக்கு குறைந்த பட்சம் எத்தனை ஏக்கர் காணி தேவை என படைத்தரப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விமானப்படை அதிகாரி பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 போதும் எனவும் அதை விட குறைந்த அளவு காணி விஸ்தரிப்புக்கு போதாது எனவும் மேலதிகமாக காணி தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.

எனவே அதற்கு அனைத்து தரப்பும் சம்மதித்துள்ள நிலையில் விமானநிலைய விஸ்தரிப்புக்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் வலி வடக்கு பிரதேசத்தில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் படையினர் வசமுள்ள பிரதான வீதிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பாரிய படை முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் தற்போது விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதுடன், பிரதான வீதிகள், மதஸ்தலங்கள் பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகள் எதிர்வரும் சில மாதங்களுக்குள் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக படைத்தரப்பு தெரவித்துள்ளது.

யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தினரை அமர்த்துங்கள் -ரணில் ஆலோசனை

image_pdfPRINT

யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த அனுமதித்தால் யாழ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோட்டையை இராணுவத்திற்கு வழங்கினால் தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பல இடங்களை மீட்டு அபிவிருத்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாதுகாப்பு படைத்தரப்பினர், அரச அதிகரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோட்டை அமைந்துள்ள நிலப்பரப்பினுள் உள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து 6 ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினருக்கு தந்தால் யாழ். நகர்ப்பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும் என இராணுவத்தளபதி தெரிவித்தார்
யாழ். கோட்டை தொல்லியல் சார் முக்கியத்துவத்தை கொண்ட மையமாகவும் மரபுரிமை சின்னமாக இருப்பதுடன் சுற்றுலா மையமாக உள்ளது. எனவே அங்கு இராணுவத்தினரை எவ்வாறு அமர்த்துவது என மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நகர் அபிவிருத்திக்கு காணிகள் தேவைப்பாடாக உள்ளது. எனவே 6 ஏக்கர் நிலப்பரப்பை கோட்டையில் இராணுவத்துக்கு கொடுத்தால் நகர்ப்புற காணிகளை நாம் மீட்க முடியும். அங்கு அபிவிருத்தி செய்ய முடியும் என மக்கள் பஜரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கிளார்.
எனவே தொல்லியல் திணைக்களத்திடம் இது தொடர்பாக பேசி மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள மக்கள் சீற்றமடைய எங்கள் பயமே காரணம் – வடக்கு முதல்வர் விளக்கம்

image_pdfPRINT

நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான்; காரணம். எங்கள் பயமே காரணம் என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் வாராந்த கேள்வி பதிலில், கேள்வியான, ‘உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா? என பொதுமகன் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர்
உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் “உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள்! வெளிப்படுத்தினால் அடிப்போம், கொல்லுவோம், நாட்டை விட்டுத் துரத்துவோம்.” என்பதே. சிங்கள மக்களின் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களும் வன் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவந்த போது எம்மைப் பயப்படுத்திப் பேசாது வைக்கப் பார்த்தார்கள்.

காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் பேரை ஏரிக்குள் (டீநசைய டுயமந) அப்படியே தூக்கி வீசினார்கள். 58ம் ஆண்டுக் கலவரம், 77ம் ஆண்டுக் கலவரம், 83ம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டு துக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வ சாதாரணம்.

இவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது? “தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேச விடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்துவிடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம், வெள்ளைவானில் கொண்டு சென்று உரிய தண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்வி கேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒருகையில் மனித உரிமை சாசனம் மறுகையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர்தானும் கொல்லப்படவில்லை. “ணுநசழ ஊயளரயடவநைள” (பூஜ்ய அப்பாவி மரணங்கள்) என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்;, பிரிவினைவாதிகள்;, வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்” என்றவாறுதான் கூறிவந்துள்ளனர்.

நாங்களும் அவற்றைக் கண்டு கேட்டுப் பயந்து விட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறி எமது மன உளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அங்கிருந்து உள்@ர்வாசிகளுக்குப் பணம் தந்து உதவுகின்றோம். அல்லது உள்@ரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒரு முகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுகின்றார்கள். எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொரு முகம் காட்டுகின்றோம். “நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்” என்ற தொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். “நாங்கள் “தா” “தா” என்று கேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்” என்கின்றோம். அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது. தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுவிட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்து விடுகின்றோம்.

இதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? “பாருங்கள்! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள்? நாம் சொல்வது போல் கேட்டு நடக்கின்றார்கள்” என்று கூறுகின்றார்கள். எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித் தவறி எமது அபிலாi~களை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தீயவர் ஆகிவிடுவோம். இவ்வாறான மிரட்டுதலைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உண்மை நிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப்பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளை, மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறி வந்ததால்த்தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார். தீவிரவாதி ஆகின்றார். நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான்; காரணம். எங்கள் பயமே காரணம். இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

உயிருக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்பொழுதும் யாருக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனை பேர்? விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள். ஆகவே உரிய நேரம் வரும்போது பலதும் நiபெறுவன. உயிர் கூட தானாகவே பிரிந்து செல்லும்.

அதற்காக சொல்ல வேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்ற சொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது தவறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு சாவது மேலா அல்லது சொகுசு வார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும்போது நாம் உயிர்ப்பலியாவது மேலா? எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்திகூட கொல்லப்பட வேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மாகாந்தி இதற்கொரு உதாரணம்.
பாதுகாப்பைக் கோரிப் பெறுமாறு கேட்டுள்ளீர்கள். தற்போதும் எனக்குச் சட்டப்படி பாதுகாப்பு தரப்பட்டே வருகின்றது. தேவையெனில் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம்.

ஆனால் உங்கள் கேள்வியை மையமாக வைத்து இன்னுஞ் சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சில சிங்கள மக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்? பலகாரணங்களை நான் கூறுவேன்.

முன்னைய இராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்த அரசாங்கம் எம்மை முன்போல் கட்டி வைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப்பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த இராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றிக் கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய்பேசா மடந்தையர் ஆக்கி வைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் தான்; அவர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்தவிதப்பட்டும் அறிந்து விடக்கூடாது. ஆகவே கொலை மிரட்டலாலாவது எம்மைக் கட்டுப்படுத்த வேண்டும், வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.

இன்றைய நிலை வேறு முன்னர் இருந்த நிலை வேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்பட்டுள்ளன. சர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. புநநெஎய இதுவரையில் கொடுத்த காலக்கேடு விரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்று நினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.

இராணுவம் ஒரு புறம், அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்கு நன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறி வருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்று எவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவது போல் “போணிக்கா” (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருட பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளை நினைவு படுத்தினால்த்தான் கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆகவேதான் எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் பாரிய நெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராது என்று கூறி வருகின்றேன்.

நான் “அடிப்படை” என்று கூறும் போது எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறி வருகின்றேன். வடகிழக்கு இணைப்பு வேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இதுகாறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்தி வந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சம~;டி அடிப்படையிலான அரசியல் யாப்பு கோரப்படுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் பல பிழையான செய்திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்த வேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒரு நாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒரு நாடே. அதையும் தமிழர் பங்கு போடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.

உண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சிங்கள மொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலே தான் வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. னுNயு பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித் திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும். அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும்.
எம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டு மிராண்டிகள் போல் நடந்து கொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்ப வேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்க வைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளது என தெரிவித்தார்.

மொட்டைக் கடிதத்துடன் வடக்கு கல்வி அமைச்சரை அழைக்க வந்த ரி ஐ டி

image_pdfPRINT

வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனை கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருகை தருமாறு அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அழைப்பைக் கல்வியமைச்சர் நிராகரித்துள்ளார்.

இன்றைய தினம்(29) யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரனை எதிர்வரும் யூன் மாதம்-05 திகதி கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தர அழைக்கும் அழைப்பாணையுடன் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என எவருமில்லையெனத் தெரிவித்த அமைச்சின் அதிகாரிகள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை சந்திக்க அவர்களிற்கு அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, எவரது ஒப்பமும் அற்ற வெறுமனே கைகளால் எழுதப்பட்டு யாரால் எழுதப்பட்டது? அல்லது யாருக்கு எழுதப்பட்டது? என்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோப் பிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றைக் கையளித்த அவர்கள் விசாரணையொன்றிற்காகக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தர அழைப்புவிடுத்தனர்.

எனினும் மொட்டைக்கடிதப் பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த அவர் எதிர்வரும் யூன்-05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணக் கல்வி அமைச்சரிடமே மொட்டைக்கடித அழைப்பாணையுடன் வருகை தரும் இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சாதாரண பொதுமக்களுடன் எவ்வாறு கையாளுவர் என்பது குறித்துத் தனக்குச் சந்தேகமிருப்பதாக கலாநிதி.க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் இப் பிரிவினர் சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக கடிதங்களைக் கையாளாமல் மொட்டைக்கடிதப் பாணியில் அனுப்பிவைப்பது எதற்காக? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT
காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்.ஊடகவியலாளர்களினால் நாளைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுப்படவுள்ளது .
யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது நேற்று அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து அதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.

விலையேற்றத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT
பொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய மாக்ஸிச லெனிச கட்சியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் உயிரழப்பு

image_pdfPRINT
வட்டுக்கோட்டை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த வேலுப்பிள்ளைப்பிள்ளை மகேந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவர்.
கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
வட்டுக்கோட்டை மாவடி சந்தியில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் முதியவருடன் மோதி விபத்துக்குள்ளானர்.
விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதான வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பயனின்றி முதியவர் உயிரிழந்தார்.

போராளிகள் கட்சி தலைவரிடம் 5 மணித்தியாலங்கள் தொடர் விசாரணை

image_pdfPRINT

போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் 05 மணித்தியாலம் தொடர் விசாரணை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும் புலனாய்வு

ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நான்காம் மாடியில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2. 30 மணி வரையான 05 மணித்தியாலங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் தொடர்ச்சியாக துருவி துருவி விசாரிக்கப்பட்டார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரிடம் மாவீரர் தின கொண்டாட்டம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு ஆகியன குறித்து பல கேள்விகளையும் கேட்டதுடன் இவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

மாவீரர் தினத்தை ஜனநாயக போராளிகள் கட்சி எங்கெல்லாம் கொண்டாடியது? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொண்டாடுவது ஏன்? என்று முக்கியமாக கேட்டு உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூருவதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதாக வேந்தன் சொல்லியதுடன் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதே ஜனநாயக போராளிகள் கட்சியின் நோக்கமாகும் என்றும் கூறி இருக்கின்றார்.

வேந்தன் பூசா, வெலிக்கடை ஆகியவற்றில் இரு வருடங்களுக்கு மேல் தடுப்பில் போடப்பட்டு, புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமுதாயத்தில் கலந்து வாழ விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போராளியை 4 ஆம் மாடிக்கு அழைத்தமை தொடர்பில் விசாரணை

image_pdfPRINT

-பிரதமர் ரணில்

ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விஷேட கலந்துரையாடலை நடாத்தி இருந்தார்.
அதன் போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கும் போது ,
இந்த மண்ணிலே உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு சகல மக்களுக்கும் உரித்துள்ளது. அந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அடுத்து முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.
முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டு அவர்கள் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பி வாழ்கின்றனர்.
அதே வேளை அவர்களின் கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சி எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகவும் உள்ளது. எனவே விசாரணைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கூறி இருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் . இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
error: Content is protected !!