SHARE

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்று காலை 7 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமானது.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும், மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக இன்று ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள் மீட்கப்பட்டது

மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
-மேலும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணிலும்  அகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள், பற்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அகழ்வு பணிகள்  இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email