மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய நாட்களாக இடம்பெற்ற திடீர் புகையிரதப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பெருமளவான பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தொழிற்சங்க தலைவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பேரில் எடுக்கப்படும் தீர்மானங்களினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களை ஒடுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜரோப்பியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சற்று முன்னர் இங்கிலாந்தை 2-1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி கொண்ட ஸ்பெயின் 4 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.
கடந்த 16 ஆவது தொடரிலும் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை நழுவ விட்ட இங்கிலாந்து இம்முறை 17 ஆவது தொடரிலும் இறுதிப்போட்டியைக் களம் கண்டு கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பை நழுவிட்டது.
அரங்கு நிறைந்த ரசிகர்களின் வானைப்பிளக்கும் பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பமான போட்டியின் முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் எதுவும் பெறப்படாத நிலையில் இடைவேளை காண்டது.
ஆட்டம் ஆரம்பமானது முதல் ஸ்பெயின் பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும் இங்கிலாந்தின் கோல் எல்லையை நெருங்குவது கடினமாகவே இருந்தது. அதே வேளை மறுபக்கத்தில் இங்கிலாந்து ஸ்பெயின் கோல் எல்லையை நெருங்கும் எந்தவொரு முனைப்பும் எடுக்காது தடுத்தாடும் ஆட்டத்தையே கையாண்டுகொண்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமாகி வெறும் 2 நிமிடங்களில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது ஸ்பெயின். ஆட்டத்தின் 47 ஆலது நிமிடத்தில் ஸ்பெயின் முன்கள இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் அதிரடிக்கோலினைப்போட்டு ஸ்பெயினை முன்னிலைப்படுத்தினார்.
இதனையடுத்து எல்லோரும் எதிர்பார்த்திருந்த இங்கிலாந்து அணியின் வீரர் மாற்றம் நிகழ்ந்தது. அணித்தலைவர் ஹரிக்கு பதிலாக இளம் வீரர் ழுடடநை றுயவமiளெ களம் இறக்கப்பட்டார்.
இந்நிலையில் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆட்டத்தில் 73 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோலினைப்போட்டு 1-1 என ஆட்டத்தை சமநிலைப்படுத்த போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. இங்கிலாந்தின் பாலிமர் அக்கோலினைப்போட்டார்.
1-1 என்ற சமநிலை கண்ட ஆட்டம் மேலதிக நேரத்திற்கு நகரலாம் என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பினரிடமும் இருந்த வேளையில் அந்த எதிர்பார்ப்பை தகர்த்த ஸ்பெயின் 86 ஆவது நிமிடத்தில் மேலுமொரு கோலினைப்போட்டு கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
உலகமெங்குமுள்ள கால்ப்பந்து ரசிகர்கள் இன்று இரு பெரும் திருவிழாவை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் தென் அமெரிக்காவின் (கோபா அமெரிக்கா) கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் இன்று நடைபெறவுள்ளன.
அந்தவகையில் ஐரோப்பியன் சம்பியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகளும் மறுபக்கத்தில் கோபா அமெரிக்கன் சம்பியன் தொடரின் இறுதியில் உலக்கிண்ண சம்பியன் ஆர்ஜன்டீனா – கொலம்பியா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் இன்று இங்கிலாந்து நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பேர்லின் ஒலிம்பிக் அரங்கை இன்று அலங்கரிக்கும் சம்பியன் கிண்ணத்தை இன்று இங்கிலாந்து முதன் முதலாக தனது நாட்டிற்கு எடுத்து வரப்போகிறதா! அல்லது ஸ்பெயின் மீண்டுமொருமுறை கிண்ணத்தை எடுத்துச்செல்லவுள்ளதா! என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இவ் ஐரோப்பிய சம்பியன் தொடரில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆவது (2020 இல் நடைபெறவேண்டிய தொடர் கொரோனா காரணமாக 2021 இல் நடைபெற்றது) தொடரிலேயே முதன் முதலாக இறுதிப்போட்டியை களம் கண்ட இங்கிலாந்து அதில் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பை இத்தாலியிடம் (பெனால்டி) பறிகொடுத்தது.
இந்நிலையில் 17 ஆவது தொடரான நடப்பு தொடரிலும் மீண்டும் அதே உத்வேகத்துடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது இங்கிலாந்து. இளம் வீரர்களுடன் அவர்களின் துடிப்பான உத்வேகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இங்கிலாந்து இன்று இறுதிப்போட்டியிலும் ஆச்சரியம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் தொடரின் கடந்த போட்டிகளையும் நெதர்லாந்துடனான அரையிறுதி ஆட்டத்தையும் பார்க்கும் போது இங்கிலாந்து சற்று மந்தகதியான ஆட்டப்போக்கையே வெளிப்படுத்தியது.
இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான அணித்தலைவர் ஹரிக்கேய்ன் இத்தொடரில் தனது ஆட்டத்திறனை முழுமையாக வெளிப்படுத்த தவறியே வருகின்றார். சிறந்த பாசராகவும் சிறந்த ஸ்கோர் பினிசராகவும் திகழும் அவர் இத்தொடரில் தடுமாற்றத்தையே வெளிப்படுத்தி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
நெதர்லாந்துடனான அரையிறுதியாட்டத்தில் பயிற்றுவிப்பாளர் இறுதியில் அவரை வெளியில் எடுத்து மாற்று வீரரை களமிறக்கியதே அணியின் வெற்றிக்கு வித்திட்டது இங்கு குறிப்பிடப்படவேண்டியது.
இன்றைய போட்டியில் ஹரி முழுமையானதொரு ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அதிசயங்களை நிகழ்த்த தவறினால் அது ஸ்பெயின் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஹரியின் ஆட்டத்தில் இன்று மாற்றம் காணப்டாவிட்டால் அவரை முன்னராகவே மாற்றீடு செய்வதே பயிற்றுவிப்பாளரின் சாதூரியமாக அமையும்.
தவிர, அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சாக்கா. பெல்லிங்கம் மற்றும் ஃபோடன் ஆகியோரும் இன்று தமது ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த வேண்டும். ஸ்பெயின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் அதே எதிர் வேக ஆட்டத்தை இங்கிலாந்து வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை நெருங்க முடியும் என்பது எனது கணிப்பு.
அதேநேரம் இங்கிலாந்து அணியின் பின்கள தடுப்பில் பெரும் ஓட்டை ஒன்றே இத் தொடர் முழுவதும் காணப்படுகின்றது. காரணம் இங்கிலாந்து வீரர்கள் வேகமாக ஓடுவதை விரும்புகிறார்கள் இல்லை என்றே தோன்றுகின்றது. பந்து எதிர்க்களம் நோக்கி முன்னேறும் போது வேகமாக முன்னேறிச் செல்லும் பின்கள வீரர்கள், பின்னர் பந்து எதிரணியிடம் சேரும் போது அதே வேகத்துடன் பின்களத்தை பலப்படுத்த தவறிவருகின்றனர். இது கவனிக்கபடவேண்டியதே.
இவற்றுக்கிடையில் இன்றைய ஆட்டம் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி பெனால்ட்டி உதைக்கு நகராமல் முன்னரே வெற்றியை தனதாக்க இங்கிலாந்து முனைப்பெடுக்க வேண்டும். மாறாக பெனால்டியில் இங்கிலாந்தின் எந்தவொரு வீரர்களையும் நம்ப முடியாத ஒரு நிலையே உள்ளது.
மறுபக்கத்தில் 3 முறை இச் சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் இம்முறையும் அதனை தனதாக்கி ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை அதிகமுறை (4) வென்ற அணி எனும் பெயரை தனதாக்க உத்வேகத்துடன் காத்துள்ளது.
துடிப்பான இளம் வீரர்கள் கொண்டு மிரட்டும் ஸ்பெயின் இன்று இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக விளங்குவதுடன் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காலிறுதியில் ஜேர்மன், அரையிறுதியில் பிரான்ஸ் என பலம் பொருந்திய அணிகளை வெற்றி கண்டு வந்த ஸ்பெயின் இன்று இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காத்திருக்கும்.
இதில் இன்று ஸ்பெயின் இளம் வீரர் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லெமின் ஜமால் மீது அதிக நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அரையிறுதியில் பிரான்சின் தோல்விக்கு வித்திட்ட அவர் இறுதிப்போட்டியிலும் ஸ்பெயினை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்; என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை ஸ்பெயின் வெற்றியை உறுதி செய்யும் போர்வீரன் ஜமாலே என அந்த ஒற்றை வீரன் மேல் அவரின் தோள் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள பெரும் அழுத்தமே இன்றைய ஆட்டத்தில் அவரை நிலைகுலைய வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தனது 16 ஆவது வயதில் அதிரடிக் கோலினைப் போட்டு ஸ்பெயினை இறுதிப்போட்டிக்குள் அழைத்துச் சென்ற ஜமால் இன்று தனது 17 ஆவது வயதில் ஜரோப்பியக் கிண்ணத்தை கரங்களில் ஏந்துவாரா என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது.
தனது 15 ஆவது வயதில் ஸ்பெயின் அணிக்காக இரு கோல்களையும் 16 ஆவது வயதில் ஸ்பெயினுக்காக மேலும் ஒரு கோலினையும் அதாவது அரையிறுதியில் பிரான்சிற்கு எதிராக அவர் போட்ட 3 ஆவது கோலினையும் போட்ட ஜமால் நேற்றைய தினம் 13 யூலை தனது 17 ஆவது பிறந்தநாளினை கொண்டாடினார்.
இரு அணிகளும் இதுவரையில் 27 போட்டிகளை களம் கண்டுள்ளன. அதில் 14 போட்டிகளை இங்கிலாந்தும் 10 போட்டிகளை ஸ்பெயினும் வெற்றி கொண்ட அதேவேளை 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இறுதியான 5 ஆட்டங்களிலும் (2011 – 2018) தலா இரு வெற்றிகளும் ஒரு சமநிலையும் கண்டுள்ளன.
இந்நிலையில் முதன்; முறையாக கிண்ணத்தை தனதாக்கும் கனவுடன் சொந்தமண் அல்லாது வெளிநாடு ஒன்றில் பெரும் தொடரின் இறுதிப்போடியில் இன்று முதன் முதலாக களம் காணும் இங்கிலாந்தும் – 4 ஆவது முறையாக கிண்ணத்தை தனதாக்க துடிக்கும் ஸ்பெயினும் மோதவுள்ள இறுதியாட்டம் எந்த முடிவை கால்பந்து ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதேவேளை ஜேர்மனியில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள போதிலும் இங்கிலாந்திலும் ஸ்பெயினிலும் ரசிகர்கள் திருவிழாவை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
ஆட்டம் நேர நிறைவை அண்மித்த போது 90 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு எதிராக அதிரடிக்கோலினைப்போட்ட இங்கிலாந்து நடப்பு ஐரோப்பா கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
1-1 என்ற கோல்க்கணக்கில் இருந்த அணிகளும் மேலதிக கோலினைப் பெற போராடிக்கொண்டிருந்த நிலையில் ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் மாற்று வீரராக உள்நுழைந்த Ollie Watkins 90 ஆவது நிமிடத்தில் அதிரடிக்கோலினைப்போட்டு இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
இஇதனையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
ஐரோப்பா கிண்ண தொடரின் 2 ஆவது அரையிறுதியாட்டம் சற்று முன்னர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இவ்வரையிறுதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பமாகி 7 ஆவது நிமிடத்தில் கோலினை போட்டு நெதர்லாந்து அதிர்ச்சியளித்தது.
ஆதன் பின்னர் 18 ஆவது நிமிடத்தில் கிடைத்த தண்ட உதை வாய்ப்பை இங்கிலாந்து அணித்தலைவர் ஹரிக்கேய்ன் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டம் 1-1 கோல்கணக்கில் இடைவேளைகண்டது.
பின்னர் 2 ஆவது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து பந்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதிலும் நெதர்லாந்தின் பின் கள தடுப்பை தகர்ப்பதில் கடினம் கண்டது.
ஆட்டம் நேர நிறைவை அண்மித்து கொண்டிருந்த போதிலும் இரு அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் பெறமுடியாத இறுக்கமான நிலை காணப்பட்டதால் இறுதியில் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி நிலைக்கே ஆட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையிலேயே ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளர் இரு வீர்களை திடீர் மாற்றம் செய்தார். இந்த மாற்றமே இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டத,
மாற்று வீரர்களில் ஒருவராக களமிறங்கிய ஆட்டத்தின் 90 ஆவஅது நிமிடத்தில் இலாபகமாக பந்தை நகர்த்தி இங்கிலாந்தின் கோல் எல்லைக்குள் அதிரடியாக பந்தை பறக்க விட்டு இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியதையடுத்து அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக நேற்று முதல் குறித்த வைத்தியசாலையில் பெரும் பதற்றமானதொரு சூழல் நிலவி வந்தது.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக பொது மக்கள் ஒன்றிணைந்து நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில், இன்றும் அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக ஏ9 வீதியில் இன்று பாரிய பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டிருந்தது.
குறித்த வீதியில் ஒன்றுக்கூடிய மக்கள், வைத்தியர் அர்ச்சுனனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதோடு, அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறக்கூடாது என்றும் கோஷமெழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மதியம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையை விட்டு வெளியேறியிருந்தார். விசேட பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும், இவருக்கு மக்கள் எதிர்ப்பையும் மீறி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடிய குழுவினர் தொடர்பாக சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை வழங்கவுள்ளதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள, சிறீதரனின் இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத , ஒன்பது பேர் முகத்தையும், மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்து, வாள்களை சுழற்றியவாறு வீதியால் செல்லும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொடிகாமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் சிறீதரன் கருத்து தெரிவித்த போது ,யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழல் ஒன்றிற்கு அகப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பழமைவாதக்கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிற் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
நேற்றைய தினம் (4) நடைபெற்ற பொதுத்தேர்தலின் முடிவில் 412 ஆசனங்களைப் பெற்ற தொழிலாளர் கட்சி கடந்த 14 வருடங்களாக ஆட்சியிலிருந்த பழமைவாதக் கட்சியை வென்று புதிய ஆட்சியமைத்துள்ளது.
14 வருடங்களாக பிரித்தானியாவின் ஆட்சியை தன்வசம் வைத்திருந்த பழமைவாதக் கட்சி 121 ஆசனங்களை மாத்திரம் பெற்றதுடன் லிபரல் டெமோகிறட்டிக் கட்சி 71 ஆசனைங்களையும்இ நைஜல் பெராஜ் தலைமையிலான றிபோம் என்ற கட்சி 4 ஆசனங்களையும்இ வடஅயர்லாந்தின் விடுதலைப் போராட்ட அமைப்பின் அரசியல் பரிவான சின்பெயின் கட்சி 7 ஆசனங்களையும் பெற்றுள்ளன. அதே வேளை ஸ்கொட்லாந்தில் தனிநாடு கோரிவந்த ஸ்கொட்லாந்து தேசிய கட்சி முன்னைய நிலையில் இருந்து 38 ஆசனங்களை இழந்து 9 ஆசனங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (5) இங்கிலாந்து அரசர் சார்ள்;ஸ்ஸை சந்தித்து தனது வெற்றியை தெரியப்படுத்திய தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் பின்னர் இலக்கம் 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிதைமர் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திற்கு வருகை தந்ததுடன் நாட்டு மக்களிற்கு வெற்றியுரையும் நிகழ்த்தினார்.
அதில் இது மாற்றத்துக்கான ஆரம்பம் எனவும் அரசாங்கம் மீண்டும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான ஆணையை பெற்றுள்ளது எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பாக அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாக இருப்பதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன் பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழலக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டதுடன் ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரியும் கலந்துகொண்டிருந்தார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தளுக்காக அரசியல் வாதிகள் தமது தேர்தல்பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் இணைந்துள்ளனர்.
அந்தவகையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Devid pinto Duschinsky இன்தேர்தல் பிரச்சாரத்தில்ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள் தலைமையில் முகமது தல்ஹா முகமது இசாத், செல்வரத்தினம் தினேஷ்குமார், கிருஷாந்த் நவரத்னம், உதயநாயகி கோணமலை தனராசசிங்கம் ஆகிய செயற்பாட்டாளர்கள்கலந்துகொண்டார்கள்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும்இ தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் Epsom மற்றும் Ewell பகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆர்யுஐசுஐ அவர்களின் தேர்தல்பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்று அவருக்கான பிரச்சார பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற மேற்படி இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள் தலைமையில் தனுஷியன் மஹேந்திரன், திரு சிவகாந்த், அனுஷன் பாலசுப்பிரமணியம், திலீபன் அபிநாஷ், விதுர்ஷன் சுகிர், யோகராசா நிஷாந்தன், யோகராசா இதயரோமின்சன் ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டார்கள்.