
ஜரோப்பியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சற்று முன்னர் இங்கிலாந்தை 2-1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி கொண்ட ஸ்பெயின் 4 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.
கடந்த 16 ஆவது தொடரிலும் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை நழுவ விட்ட இங்கிலாந்து இம்முறை 17 ஆவது தொடரிலும் இறுதிப்போட்டியைக் களம் கண்டு கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பை நழுவிட்டது.
அரங்கு நிறைந்த ரசிகர்களின் வானைப்பிளக்கும் பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பமான போட்டியின் முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் எதுவும் பெறப்படாத நிலையில் இடைவேளை காண்டது.
ஆட்டம் ஆரம்பமானது முதல் ஸ்பெயின் பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும் இங்கிலாந்தின் கோல் எல்லையை நெருங்குவது கடினமாகவே இருந்தது. அதே வேளை மறுபக்கத்தில் இங்கிலாந்து ஸ்பெயின் கோல் எல்லையை நெருங்கும் எந்தவொரு முனைப்பும் எடுக்காது தடுத்தாடும் ஆட்டத்தையே கையாண்டுகொண்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமாகி வெறும் 2 நிமிடங்களில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது ஸ்பெயின். ஆட்டத்தின் 47 ஆலது நிமிடத்தில் ஸ்பெயின் முன்கள இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் அதிரடிக்கோலினைப்போட்டு ஸ்பெயினை முன்னிலைப்படுத்தினார்.
இதனையடுத்து எல்லோரும் எதிர்பார்த்திருந்த இங்கிலாந்து அணியின் வீரர் மாற்றம் நிகழ்ந்தது. அணித்தலைவர் ஹரிக்கு பதிலாக இளம் வீரர் ழுடடநை றுயவமiளெ களம் இறக்கப்பட்டார்.
இந்நிலையில் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆட்டத்தில் 73 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோலினைப்போட்டு 1-1 என ஆட்டத்தை சமநிலைப்படுத்த போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. இங்கிலாந்தின் பாலிமர் அக்கோலினைப்போட்டார்.
1-1 என்ற சமநிலை கண்ட ஆட்டம் மேலதிக நேரத்திற்கு நகரலாம் என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பினரிடமும் இருந்த வேளையில் அந்த எதிர்பார்ப்பை தகர்த்த ஸ்பெயின் 86 ஆவது நிமிடத்தில் மேலுமொரு கோலினைப்போட்டு கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.