ஆட்டம் நேர நிறைவை அண்மித்த போது 90 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு எதிராக அதிரடிக்கோலினைப்போட்ட இங்கிலாந்து நடப்பு ஐரோப்பா கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
1-1 என்ற கோல்க்கணக்கில் இருந்த அணிகளும் மேலதிக கோலினைப் பெற போராடிக்கொண்டிருந்த நிலையில் ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் மாற்று வீரராக உள்நுழைந்த Ollie Watkins 90 ஆவது நிமிடத்தில் அதிரடிக்கோலினைப்போட்டு இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
இஇதனையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
ஐரோப்பா கிண்ண தொடரின் 2 ஆவது அரையிறுதியாட்டம் சற்று முன்னர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இவ்வரையிறுதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பமாகி 7 ஆவது நிமிடத்தில் கோலினை போட்டு நெதர்லாந்து அதிர்ச்சியளித்தது.
ஆதன் பின்னர் 18 ஆவது நிமிடத்தில் கிடைத்த தண்ட உதை வாய்ப்பை இங்கிலாந்து அணித்தலைவர் ஹரிக்கேய்ன் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டம் 1-1 கோல்கணக்கில் இடைவேளைகண்டது.
பின்னர் 2 ஆவது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து பந்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதிலும் நெதர்லாந்தின் பின் கள தடுப்பை தகர்ப்பதில் கடினம் கண்டது.
ஆட்டம் நேர நிறைவை அண்மித்து கொண்டிருந்த போதிலும் இரு அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் பெறமுடியாத இறுக்கமான நிலை காணப்பட்டதால் இறுதியில் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி நிலைக்கே ஆட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையிலேயே ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளர் இரு வீர்களை திடீர் மாற்றம் செய்தார். இந்த மாற்றமே இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டத,
மாற்று வீரர்களில் ஒருவராக களமிறங்கிய ஆட்டத்தின் 90 ஆவஅது நிமிடத்தில் இலாபகமாக பந்தை நகர்த்தி இங்கிலாந்தின் கோல் எல்லைக்குள் அதிரடியாக பந்தை பறக்க விட்டு இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.