பழமைவாதக்கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிற் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
நேற்றைய தினம் (4) நடைபெற்ற பொதுத்தேர்தலின் முடிவில் 412 ஆசனங்களைப் பெற்ற தொழிலாளர் கட்சி கடந்த 14 வருடங்களாக ஆட்சியிலிருந்த பழமைவாதக் கட்சியை வென்று புதிய ஆட்சியமைத்துள்ளது.
14 வருடங்களாக பிரித்தானியாவின் ஆட்சியை தன்வசம் வைத்திருந்த பழமைவாதக் கட்சி 121 ஆசனங்களை மாத்திரம் பெற்றதுடன் லிபரல் டெமோகிறட்டிக் கட்சி 71 ஆசனைங்களையும்இ நைஜல் பெராஜ் தலைமையிலான றிபோம் என்ற கட்சி 4 ஆசனங்களையும்இ வடஅயர்லாந்தின் விடுதலைப் போராட்ட அமைப்பின் அரசியல் பரிவான சின்பெயின் கட்சி 7 ஆசனங்களையும் பெற்றுள்ளன. அதே வேளை ஸ்கொட்லாந்தில் தனிநாடு கோரிவந்த ஸ்கொட்லாந்து தேசிய கட்சி முன்னைய நிலையில் இருந்து 38 ஆசனங்களை இழந்து 9 ஆசனங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (5) இங்கிலாந்து அரசர் சார்ள்;ஸ்ஸை சந்தித்து தனது வெற்றியை தெரியப்படுத்திய தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் பின்னர் இலக்கம் 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிதைமர் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திற்கு வருகை தந்ததுடன் நாட்டு மக்களிற்கு வெற்றியுரையும் நிகழ்த்தினார்.
அதில் இது மாற்றத்துக்கான ஆரம்பம் எனவும் அரசாங்கம் மீண்டும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான ஆணையை பெற்றுள்ளது எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.