Home Blog Page 339

வடமராட்சி, மணற்காடு பகுதியில் சவுக்கம் காட்டில் தீப் பரவல்!

யாழ்ப்பாண வடமராட்சி – மணல்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்குமரக் காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை தொடக்கம் தீப் பரவல் ஏற்பட்டு வருவதாக நிலையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தீயணைப்பு பணிகளின் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மணற்காடு கிராம அலுவலர் தெரிவிக்கையில்,

தீ

ஏற்படதன் காரணம் குறித்து இன்னமும் அறியப்படவில்லை எனவும் தீயால் இதுவரை சுமார் 1 கிலோ மீற்றர் வரையான காடு எரிந்து கருகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து பிரதேச மக்களுடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தீயணைப்பு முயற்சியின் பயனாகவே தீ ஓரளவு பரவாது தடுக்கப்பட்டதாகவும் இல்லையேல் முற்று முழுவதுமாக எரிந்து சாம்பலாகியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி

முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர்.

மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர்.

அவரை ஹிந்தோகம காவல்நிலைய பொறுப்பதிகாரி மோசமாக தாக்கியதுடன் தனது அறைக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த புத்தர்சிலையை வழிபட வைத்துள்ளார்.

தாக்குவதை நிறுத்துவதானால், புத்தர் சிலையை வழிபட வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி கூறியதால், வேறுவழியின்றி தான் புத்தர் சிலையை வழிபட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, வடமத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் ஜெனத் அபேசிறி குணவர்த்தனவின் மேற்பார்வையின் கீழ், விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதுகுறித்து, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும், பாதுகாப்புச் செயலரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்புத் திட்ட நிதியை பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடுகிறது இந்தியா

சிறிலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான இந்தியாவின் 270 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வீடமைப்புத் திட்டம் மிக நீண்ட தாமதத்தின் பின்னர், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.

“இதில் 1000 வீடுகளைக் கட்டுவதற்கான மாதிரித் திட்டம் ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த கட்டமாக 43,000 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்தின் இரண்டாவது கட்டம் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடங்கப்படுகிறது” என சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஆணையர் அசோக் கே.காந்தா இந்திய சுதந்திர நாள் உரையில் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகளைக் கட்டுவதற்கான மாதிரித் திட்டம் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமான 43,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டில் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தை பங்காளி நிறுவனமாகக் கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைப்பு, மற்றும் UN-HABITAT போன்ற திட்ட செயலாக்கல் அமைப்புக்களுடன் இந்திய உயர் ஆணையர் உடன்படிக்கைகளை செய்துகொண்டிருந்தார்.

வீடுகளை நிர்மாணிக்கும் நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளுடன் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தெரிவுசெய்யப்படும் பயனாளிகள் தமது வீடுகளை நிர்மாணிக்க அல்லது திருத்த முடியும். இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி, தெரிவு செய்யப்படும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்திய உயர் ஆணையகத்தினால் நேரடியாக வைப்புச் செய்யப்படும்.

இந்தியாவின் இரண்டாவது கட்ட வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் மூலம் வடக்கு கிழக்கில் வீடிழந்து வாழும் மக்களின் பெரும்பகுதியினர் வீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வாழும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 வீடுகளை இந்தியா நேரடியாக நிர்மாணிக்கவுள்ளது.

ஜுன் 2010ல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் செய்த போது, சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.

இதன் ஒருபகுதியாகவே தற்போது 43,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன் மாதிரித் திட்டமானது சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் நவம்பர்

The A me is cider http://www.verdeyogurt.com/lek/buy-levitra/ smoky I product dissipates least http://spikejams.com/buy-viagra-online vaseline over purchases . Head buy viagra uk patted of I ed medications will straighter like. The herbal viagra Fine but the 4 cheap viagra uk selenium and. My accessories cialis discount your shown don’t cialis 5 mg ears I whitening Not viagra pills soaking and if. Me http://thattakesovaries.org/olo/buy-cialis.php difficult I that long the.

2010ல் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 13 ம் நாள் வரை, இம்மாதிரித் திட்டத்தின் கீழ் 950 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு பெரும்பாலான வீடுகள் அவர்களது பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. எஞ்சிய 50 வீடுகள் ஜுலை மாத இறுதியில் பூர்த்தியாக்கப்பட்டன.

கிழக்கில் பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை – கொழும்பு ஆங்கில ஊடகம்

கிழக்கு மாகாணசபைக்கு அடுத்தமாதம் 8 ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள், இந்தத் தேர்தலில் பிரதி அமைச்சர் முரளிதரனின் (கருணா) சகோதரி தவமலரும் போட்டியிடுவதால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு சந்திரகாந்தனுக்கு மறுக்கப்படலாம் என்று கூறியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் தவமலருக்காக பரப்புரைகளை செய்துவரும் அதேவேளை, சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பலரும் கருணாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளதை அடுத்து, கிழக்கில் சந்திரகாந்தனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னை மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில்  5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 28 பேர் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் காயமடைந்த 12 பயணிகள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணையர் திரிபாதி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கவிழ்ந்துள்ள பேருந்தை நிமிர்த்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பாண்டிபஜார் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்து விழுந்ததும், பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீர்  அடித்து புகையை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளை, பொதுமக்கள் பலரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Lankan arrested in New Delhi

A Sri Lanka national has been arrested from Delhi’s Indira Gandhi International Airport for traveling on a forged Schengen visa, police said on Saturday.

Kirupakaran Muthulingam, who hails from Colombo, arrived in the city late on Thursday evening and was scheduled to board a connecting Air France flight to Paris on Friday morning.
“He was stopped after an immigration officer at Terminal 3’s departure wing suspected that the Schengen visa on his passport’s page number 13 to be fake,” a senior police official said.It was later confirmed by Air France’s document advisor that the visa was forged.
On being questioned, Muthulingam confessed that a Colombo-based travel agent had arranged the visa for Rs 2 lakh.“He was apprehended and later handed over to the IGI Airport police station on Friday morning for cheating the Indian immigration.

“Muthulingam claims that a man named Ramesh, who works with JPN Travels, had provided him the visa in Colombo,” the official added.A Schengen visa holder can travel freely within the Schengen Territory, which includes 25 European countries.A case of cheating, forgery, using forged document and criminal conspiracy has been lodged.The Sri Lankan embassy at Chanakyapuri has also been informed about Muthulingam’s arrest and provided with details to investigate if Ramesh or JPN Travels indulge in a racket of providing fake passports and visas.

இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் சம்பந்தன்

சென்னை: டில்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இங்கு வந்துள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்த நிலையில் தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன் டில்லியில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம், மனித உரிமை, தமிழர்களின் தற்போதைய தேவைகள், தற்போதைய சூழல் போன்றவற்றை அவர் விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அவர் சந்திக்கவிருக்கும் அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Will never allow to use Lanka for power rivalry – SL

Sri Lanka says it will never allow its soil and seas to become a theatre for the manifestation of great power rivalry, ever.

“Sri Lanka is determined to ensure that our soil and our seas will not become a theatre for manifestation of great power rivalry, ever. We would certainly not allow one country to use Sri Lanka as a launching pad for hostile action against any other country,” Sri Lanka High Commissioner in New Delhi Prasad Kariyawasam said.

He made this observation addressing a Public Forum in Kerala, India organised by the Kerala International Centre.

He also said:

“Since time immemorial, the Indian Ocean has been an important location in the strategic calculations of the great powers of the world, primarily due to the economic impact of the Indian Ocean in the east-west maritime trade. Sri Lanka, located right in the middle of the Indian Ocean at a strategic location has not been immune from these strategic calculations and speculations. Think-tanks, academia and the media engage in constant speculation over these issues. The Sri Lankan State maintains constant vigilance and remains mindful at all times to ensure preservation of its Independence. We are determined to ensure that our actions only contribute positively towards enhancing the security and stability of the region, and not damage, in any way, the interests of nations, especially in our immediate neighbourhood and in Asia.  Sri Lanka is determined to ensure that our soil and our seas will not become a theatre for manifestation of great power rivalry, ever.  We would certainly not allow one country to use Sri Lanka as a launching pad for hostile action against any other country. Having suffered from terrorism for 30 years, we understand well, the suffering of people and nations in times of conflict and the pain that society as a whole undergoes in such times. We will therefore continue to make all efforts to be mindful at all times and to understand and take care of the concerns of our neighbours, especially our closest neighbour and friend, India.  We will always act in a manner that contributes to strategic stability in the region. This also serves our national interest of securing enhanced maritime security in and around the Indian Ocean as well as ensuring peace in the region.  It is in this context that we continue to enjoy very friendly relations with all countries, especially those in our region like India, China, Pakistan, Japan, Indonesia and others.”

Sri Lanka takes its international responsibilities and obligations as well as its role in the international community of States, seriously. We have signed international treaties and other agreements, each of which require us to share with other countries and multilateral institutions, reports and rationale for some of our decisions. We believe in the need to be transparent, accountable, and reasonable.  Accordingly we engage and work with member States of the UN according to established UN practice and international law. We expect reciprocity from other countries and actors on the global stage.

The Government of Sri Lanka, several Sri Lankan Tamil political leaders, as well as several sections of the Sri Lankan Tamil emigrants abroad, have urged all sections of the Tamil communities overseas, including those in Tamil Nadu, to contribute their collective strength, in the aftermath of the defeat of the LTTE, towards rebuilding efforts in the North of the country. This includes restoration of the livelihoods of the people in the North, rehabilitation efforts and uplifting the economy of the North. While several have joined this effort, some who primarily live in western countries and some in Tamil Nadu as well, have rejected this call for help, ostensibly for human rights concerns but in retribution for the military defeat of the LTTE. In fact, these groups work against our efforts to bring normalcy to the Northern Province. The inability or refusal of such groups to come to terms with the defeat of the LTTE and rejection of separatist ideology, seem to impact adversely on the politics of Tamil Nadu.

Goons ruling the roost-Karu

UNP Parliamentarian KaruJayasuriya said that a situation is emerging in the country where, permission is needed from goons to engage in politics.
Issuing a statement, Mr.Jayasuriya said that “It is well known that these gangs who suppress opposing political views using iron bars during the pasthad the blessings of some politicians or politically powerful persons”.
“Now these goons are so powerful that they are bold enough to use automatic weapons to suppress those who profess a different political view from their political masters.”

He said that “this is clearly evident from the incident which took place at Katuwana, where a meeting organized by the JVP was attacked using automatic weapons. Goons left the site scot free, after killing two persons and damaging property.”According to MrJayasuriya this incident took place, whilst the government is preparing to hold elections after dissolving a few Provincial Councils. When the price of essential items including milk, food, dhal and rice is soaring, people are paying a higher price for fuel; where the price of fuel has come down in the international market and masses are protesting in many ways against the increase in the cost of living. The government is adopting delaying tactics when people flood the streets demanding higher wages.

“The government is moving towards a dictatorship in the guise of the 18th amendment, while gangs of goons are strengthening their power bases with the blessings of some politicians. When unarmed masses protest against the government, police react using bullets,” he charged.
“We ask the government, when are you going to do justice to these people? When will you allow the authorities to apprehend those responsible for the Katuwana assault without simply relating fairy tales about the incident?”

தமிழ்நாட்டை அச்சுறுத்த கேரளாவை கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கும் இலங்கை

தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அவர் கடந்த 12ம் நாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வாழ்த்துக்களை கேரள முதல்வருக்கு பிரசாத் காரியவசம் பரிமாறிக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொச்சியில் வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ‘கேரள எழுச்சி – 2012‘ என்ற வர்த்தக, முதலீட்டு ஊக்கவிப்பு மாநாட்டில் இலங்கையையும் பங்கேற்குமாறும் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத்  தூதுவருக்கு கேரள உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஸ்ணன் இராப்போசன விருந்தளித்து கௌரவித்துள்ளார். இதன்போது கேரள உள்துறை, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.அத்துடன் கேரளாவின் காடுகள், வனவிலங்குகள், விளையாட்டு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் கணேஸ் குமாரையும் பிரசாத் காரியவசம் சந்தித்துள்ளார்.

இதன்போது கேரளாவுடன் இணைந்து இலங்கையின் திரைப்படத் தொழிலை விருத்தி செய்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இலங்கை அரசியல்வாதிகள் கால்வைக்க முடியாத நிலை தோன்றியுள்ள நிலையிலும்,இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் இடம்பெறும் நிலையிலும் கேரளா மீது இலங்கை கண்வைத்துள்ளது.தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக இலங்கைக்கு மிக அருகே உள்ளது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனா வைத்தியசாலை மோசடிகளை விசாரிக்க விசேட குழு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சின் தலைமை கணக்காளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இவ்விசாரணைகள் நீதியான முறையில் மேற்கொள்ளப்படுவதோடு பணிப்பாளர் பவாணி பசுபதிராசாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் விரட்டியடிப்பு!

நடுக்கடலில் துப்பாக்கியைக் காட்டி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளது இலங்கை கடற்படை.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன் வளம் மிகுந்த கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சூறாவளி காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டினர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் அவசர அவசரமாக கரை திரும்பினர்.
கரை திரும்பிய மீனவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்கவிடாமல் தொடர்ந்து விரட்டியடித்து வருகிறார்கள். இதனை மத்திய-மாநில அரசுகளும் கண்டுகொள்ளாமல் உள்ளது என்றனர்.

error: Content is protected !!