SHARE

முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர்.

மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர்.

அவரை ஹிந்தோகம காவல்நிலைய பொறுப்பதிகாரி மோசமாக தாக்கியதுடன் தனது அறைக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த புத்தர்சிலையை வழிபட வைத்துள்ளார்.

தாக்குவதை நிறுத்துவதானால், புத்தர் சிலையை வழிபட வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி கூறியதால், வேறுவழியின்றி தான் புத்தர் சிலையை வழிபட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, வடமத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் ஜெனத் அபேசிறி குணவர்த்தனவின் மேற்பார்வையின் கீழ், விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதுகுறித்து, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும், பாதுகாப்புச் செயலரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email