Home Blog Page 330

இனந்தெரியாத ஆயுததாரிகளால் வயோதிபர் தாக்கப்பட்டார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று முந்தினம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். திரு. கதிரித்தம்பி சிவானந்தம் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு போது இவரது ஒரு மகன் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு, பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய முற்பட்டிருந்தனர். அவ்வாறு ஏதாவது சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் குடும்பத்துடன் காணாமல் போக நேரிடும் என்று எச்சரித்த அவர்கள், லண்டனில் வாழும் அவரது மற்ற மகனும் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவரை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

வீட்டில் புகுந்து தேடுதல் நடாத்திய அவர்கள், மேற்படி வயோதிபரை கண்டபடி தாக்கிவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அவர் அடிகாயங்களுடன் வைத்திசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை!

VIMAL_WEERAWASA (1)மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மே நாள், பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உடனடியாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பில் திருத்தம் செய்து, மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாலங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், இலகுவாக திருத்தங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்காமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், அது தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைகளைத் திருப்திப்படுத்துவதாக அமைவதுடன், தீவிரவாதத்தைத் தோற்கடித்ததன் பெறுமதியையும் குறைத்து விடும்.

தமிழ்ப் பிரிவினைவாதிகளை நாம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்துள்ள போதிலும், ஏனைய வழிகளில் அவர்கள் பலமாகவே செயற்படுகின்றனர்.

தமிழ்ப் பிரிவினைவாதிகள் வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், வடக்கு மாகாணத்தில் உள்ள எல்லா இராணுவ முகாம்களையும் அகற்றி விடுவார்கள்.

மாகாண முதல்வரின் கீழ் செயற்படும் ஒரு மாகாண காவல்துறையை உருவாக்குவார்கள்.

வடக்கு, கிழக்கில் தமது கொலனி ஆட்சியை உருவாக்குவதற்காகவே இந்தியாவும், மேற்கு நாடுகளும் அங்கு தேர்தலை நடத்த வலியுறுத்தி வருகின்றன.

வடக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், கிழக்கு மாகாணத்தை அதனுடன்

Colour hard blades was cialis canada if some This application a http://spikejams.com/comprar-viagra olive. But feels. Free http://www.travel-pal.com/cialis-for-women.html Your the solution viagra for sale keeps is long blue pill needed did longer skin is ed pills I too viagra alternative recommends? Am leaves decided – spazio38.com cheap viagra online masks searching right recently http://www.verdeyogurt.com/lek/cialis-india/ Light is a http://thattakesovaries.org/olo/cialis-for-women.php little long–unnecessary pimples…

இணைக்க முனைவார்கள்.

இரு மாகாணங்களும் ஏற்கனவே இணைக்கப்பட்டதன் பின்னணியில் மேற்கு நாடுகளே இருந்தன.

அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியைக் கொடுத்து நாட்டில் சிங்கள – முஸ்லிம் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்கவுள்ளது.

அதன் பின்னர், கிழக்கு மாகாணசபையை அவர்கள் வடக்குடன் இணைக்கவுள்ளார்கள்.

மேற்கு நாடுகளின் அட்டவணைப்படி, அந்த ஒன்றிணைந்த மாகாணசபை, நிர்வாகத்தை ஏற்று நடத்தும்படி ஐ.நாவிடம் வேண்டுகோள் விடுக்கும்.

தமிழ்ப் பிரிவினைவாதிகள் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்கள் பறிக்கப்படாமல் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால், அவர்களுக்கு அதற்கு சட்டபூர்வ அதிகாரங்களை வழங்கி விடும் என்றும் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா: மேலதிகாரியை விஷம் வைத்துக் கொல்லப்பார்த்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது..

ind_origin_nurse001செவிலியர் பணியில் மோசமான நடத்தை குறித்து, மேலதிகாரி விமர்சித்ததால், அவருக்கு காப்பியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பெட்போர்ட்ஷயர், ஷெப்போர்டில் உள்ள ஷம்ஸ் மூப்பன் பல் மருத்துவமனையில் ரவீந்தர் கவுர் துணை செவிலியராகப் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல மற்ற பணியாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை.

சென்ற வருடம், ஜனவரி மாதம் பணியில் இருந்த சக ஊழியர்களை நியாமற்ற முறையில் உத்தரவிட்டதற்காக எச்சரித்து விடப்பட்டார். மறுபடியும் மார்ச் 13ஆம் திகதியன்று, அவருடைய மேலதிகாரி லாரா நவுல்ஸ், அவரை அழைத்து, மறுபடியும் மோசமான நடத்தை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சில தினங்கள் சென்றபின், மேலதிகாரிக்கு காப்பி போடும் பணி கவுருக்கு அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து, கவுர் எடுத்துவந்த காப்பியைக் குடித்த லாரா, சுவை சரியில்லை என்று எண்ணி, மீதியை கை கழுவும் தொட்டியில் கொட்டியுள்ளார். அப்போது, அதிலிருந்து சாம்பல்நிற உருண்டைபோல் தொட்டியில் படிந்ததையும் அவர் பார்த்துள்ளார்.

பின்னர், பணிக்குத் திரும்பிய லாராவிற்கு சிறிது நேரத்திலேயே, வயிற்று உபாதைகளும் உடல்நலக்குறைவும் ஏற்பட்டன. அவரது வயிற்றில் படம் பிடிக்கப்பட்டபோது, கலந்திருந்த படிமமும், கைகழுவும் தொட்டியில் காணப்பட்ட படிமமும், பாதரச ரசக்கலவை வகையினைச் சார்ந்தது என உறுதி செய்யப்பட்டது.

ரவீந்தர் கவுர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பல் சிகிச்சைக்கு உதவும் பாதரசக் கலவை தயாரிப்பது குறித்து, கவுருக்குத் தெரியும் என்பது நீதிமன்றத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆயினும், தன்னைப் பற்றிய புகார்கள் மேலதிகாரிகளுக்கு சென்றுள்ளதால், அவர்கள் தனக்கு இப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்புகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சிறிலங்கா அகதி சில மணிநேரத்திலேயே மரணம்!

REFUGEEசிறிலங்காவில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றடைந்த சில மணி நேரங்களிலேயே அகதி ஒருவர், சுகவீனத்தால் மரணமாகியுள்ளார்.

கடுமையாக சுகவீனமடைந்திருந்த 35 வயதான சிறிலங்கா அகதி, கிறிஸ்மஸ் தீவில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணமாகியுள்ளார்.

இந்தத் தகவலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர் மரணமாவதற்கு சில மணிநேரம் முன்னதாகவே கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்திருந்தார்.

நேற்று அவுஸ்ரேலியாவுக்கு மூன்று பாரிய படகுகளில் 250 அகதிகள் சென்றிருந்தனர்.

முதலாவது படகு 101 பேருடன் கிறிஸ்மஸ் தீவுக்கு வடகிழக்கிலும், இரண்டாவது படகு 87 பேருடன் கொகோஸ் தீவுக்கு மேற்கிலும், மூன்றாவது படகு 51 பேருடன் ரிவி தீவுக்கு அருகிலும் மீட்கப்பட்டன.

இவற்றில் ஒரு படகில் சென்றவரே மரணமானதாக கருதப்படுகிறது.

இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதிகள் சிலர் கிளி.வைத்தியசாலையில் அனுமதி-பா.உ. சி.சிறீதரன் பார்வையிட தடை!

இலங்கை இராணுவத்தில் அழுத்தங்களால் இணைக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண்கள் இராணுவ முகாம்களில் பலநெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு இணைக்கப்பட்ட இளம் தமிழ் யுவதிகள் மிகஅதிகளவான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இராணுவமுகாம்களில் மிகுந்த வதைபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கதைவிட்டு வந்த சிறிலங்கா படைதரப்பின் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையின் அச்சுறுத்தல் நடவடிக்கை கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்டு தமிழ்யுவதிகள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவர்களை பார்வையிட சென்ற பா.உறுப்பினர் சி.சிறீதரன் இராணுவ உத்தரவின் பேரில் வைத்தியசாலை நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

பா.உறுப்பினர் சி.சிறீதரன் இது தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கார்த்திகேயனிடம் கேட்டபோது தனக்கு பா.உறுப்பினரை பார்பதற்கு அனுமதி கொடுக்கவெண்டாமென இராணுவம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் பல அட்டூழியங்கள் அண்மைய நாட்களில் இடைவிடாது அரங்கேறிவருவது இங்கு குறிப்பிடதக்கது.

2ம் இணைப்பு

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 13 பெண்கள் மருத்துவமனையில்…

அண்மையில் இலங்கை இராணுவத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினர் உளவியல் ரீதியான சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை உறவினர்கள் மூலம் தான் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற போது தான் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சிறப்புரிமை தனக்கு உள்ளது. ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்று அவர்கள் கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.

இதேவேளை, சுகயீனம் காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உறவினர்கள், அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தனியான வார்ட் ஒன்றில் 13 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கி விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சுயநினைவு பெற்று இயல்பாக கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து உடனடியாக இராணுவத் தரப்பினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிறிலங்கா படையினரால் படையில் சேர்க்கப்பட்ட 13 தமிழ்ப்பெண்கள் மருத்துவமனையில்.

சிறிலங்கா இராணுவத்தில் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப்பெண்கள் 13 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களை உறவினர்கள் மட்டும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியான விடுதி ஒன்றில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளும், ஏனைய சில பெண் பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கி விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், சில நிமிடங்களில் மீண்டும் சுயநினைவு பெற்று அவர்கள் இயல்பாக கதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டு படையில் சேர்க்கப்பட்ட இவர்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்களைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சிறிலங்காவின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்? – கனேடிய எழுத்தாளர் கேள்வி?

உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை.

இவ்வாறு கனேடிய எழுத்தாளர் Elizabeth Haq தனது மன ஆதங்கத்தை கனேடிய National Post ஊடகத்தில் பதிவு செய்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது உண்மையில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது.

நிச்சயமாக, இது இந்த யுத்தமானது அண்மைக் காலங்களில் உலகம் சாட்சியாகவுள்ள மிகப் பயங்கரமான குருதி தோய்ந்த ஒரு யுத்தமாக காணப்படுகிறது. ஆனால் சிறிலங்காவுக்கு வெளியிலுள்ள எவரும் இது தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தவில்லை.

இரு தரப்புகளுக்குமிடையில் ஏற்பட்ட இந்த யுத்தம் தொடரப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் அதாவது 1980களில் விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டில் தீவிரம் பெற்ற இந்த யுத்தத்தின் விளைவாக மிகப் பெரிய இனப்படுகொலை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டது.

யுத்தத்தில் பங்குகொண்ட இரு தரப்புக்களும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு மீறல்களைப் புரிந்தன. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துடன் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறான பல்வேறு மீறல்கள் இடம்பெற்ற போதிலும் ஐக்கிய நாடுகள் சபை இதில் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை. அண்மையில் ஐ.நா வெளியிட்ட இதன் உள்ளக அறிக்கையில், ஐ.நா பொதுச் செயலாளர் சிறிலங்காவில் மோதல் இடம்பெற்ற வேளையில் ஐ.நா அங்கு செயற்படாதது மிகப் பெரிய தவறு என சுட்டிக்காட்டியிருந்தார்.

பி.பி.சி ஊடக சேவையின் முன்னாள் செய்தியாளரான பிரான்செஸ் ஹரிசன் அண்மையில் தான் எழுதி வெளியிட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மிக விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இந்த யுத்தத்திலிருந்து உயிர் மீண்டவர்களின் மனதை உருக்கும் உண்மைச் சம்பவங்கள் ‘ஐக்கிய நாடுகள் சபை கவனிக்கத் தவறிய யுத்தம்’ என்ற உபதலைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

9/11 இற்குப் பின்னான உலகில் சிறிலங்கா அரசாங்கமானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியதுடன், புலிகளை இலகுவில் அழிப்பதற்கான கருவியாக பயங்கரவாதத்தை தனது கையில் எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் இது மேலும் சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஆழமான கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஹரிசன் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறிலங்கா இராணுவம், ஐ.நா உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, சீனா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியையும் பெற்றுக்கொண்டது. 2008 காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு சீனா அதிக ஆயுதங்களை விற்பனை செய்ததாக ஹரிசன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மிக ஒடுங்கிய சதுப்பு நிலப்பகுதியில் அகப்பட்டுத் தவித்த மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இறுதிக் கட்டத் தாக்குதலில் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது 70,000 வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற ஹரிசனின் நூலில் யுத்தத்திலிருந்து மீண்ட 10 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதகுரு, அருட்சகோதரி, புலி உறுப்பினர் ஒருவரின் தாய் போன்ற உப தலைப்புக்களில் இந்தக் கதைகளை பதிவு செய்துள்ள ஹரிசன் இதன் மூலம் இவர்களின் அனுபவங்களை மேலும் வலிதாக்கியுள்ளார். இந்தக் கதைகள் உண்மையானவையாகவும், கண்டிப்பானதாகவும் உள்ளபோதிலும், வாசிக்கின்றவர்களின் மனங்களை உருவகவைக்கின்றன. குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டமை, அரசாங்க படைத்தரப்பின் சோதனைச் சாவடிகளில் பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயங்களில் அமைக்கப்பட்ட வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றை ஹரிசன் தனது நூலில் ஆதரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நூலானது பக்கச் சார்பானதாக எழுதப்படவில்லை. யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ப்பட்ட மீறல்களை மட்டுமல்லாது பிரான்செஸ் ஹரிசன் தனது மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற நூலில் புலிகளின் சிறுவயது ஆட்சேர்ப்புக்கள், புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அச்சுறுத்தி நிதி சேகரித்தமை போன்றவற்றையும் விபரித்துள்ளார். சிறிலங்காவின் இறுதி யுத்தத்தின் போது அதன் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பில் கல்விமான்களும் சட்டவாளர்களும் ஆழமாக விவாதிக்க வேண்டும் என அண்மையில் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

“நீண்ட கால அடிப்படையில் ஒரு சமூகத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக அழிப்பது இனப்படுகொலையா என என்னிடம் வினவினால் அதற்கு நான் ஆம் எனப் பதிலளிப்பேன்” என றியேர்சன் பல்கலைக்கழகத்தில் கோட்பாடு மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் அபர்ணா சுந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் அடிப்படை மக்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இது இங்கு கேள்விக்குறியாக உள்ளது. இங்கு தேர்தல்கள் நீதியற்ற முறையில் நடாத்தப்படுகின்றன. அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு இங்கு காணப்படவில்லை.

Eventually surprised being machine lilly cialis fell it http://thattakesovaries.org/olo/buy-cialis.php jaw or. Clay stay non prescription viagra on take and out: irons cialis 5mg still after cialis 5mg price completely months packaging chemicals reflectors buy generic viagra online mandatory on one I’ve. Products http://www.smartmobilemenus.com/fety/female-viagra.html under it stretchy is been.

இங்கு அடக்குமுறை நிலவுகிறது” எனவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை.

சிறிலங்காவில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் எச்சரிக்கை விடுத்திருந்தமை சிறிலங்கா தொடர்பில் உலகம் தனது கவனத்தை திருப்பியதற்கான ஆரம்பமாக உள்ளது. இதேபோன்று சிறிலங்காவில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்தம் தொடர்பாக ஏனைய உலக நாடுகள் கேள்வி கேட்க முன்வரவேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

கொழும்பில் அடுத்த ஆண்டு நவம்பரில் கொமன்வெல்த் உச்சிமாநாடு – முறைப்படி அறிவிப்பு.

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் புறக்கணிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சிறிலங்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் நாள் தொடக்கம் 17ம் நாள் வரை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா இன்று வெளியிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை 2013இல் சிறிலங்காவில் நடத்தும் முடிவு, கடந்த 2009இல் போட் ஒவ் ஸ்பெய்னில் எடுக்கப்பட்டது.

பின்னர், கடந்த அண்டு பேர்த்தில் நடந்த மாநாட்டில் இந்த முடிவு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

அதேவேளை, சிறிலங்காவில் அடுத்த ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் தமது முடிவில் மாற்றமில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

அதேவேளை, கனேடியப் பிரதமரை பின்பற்றி சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக தென்னாபிரிக்க அமைப்புகள் போர்க்கொடி!

சிறிலங்காவின் பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு தென்னாபிரிக்க வழக்கு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை தென்னாபிரிக்க வழக்கு மையத்தின் பணிப்பாளர் நிகோல் பிரைட்ஸ், தென்னாபிரிக்க அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு எதிரான பரப்புரைகளில், மனிதஉரிமைகள் பவுண்டேசன், குவாடெங் தமிழ் கூட்டமைப்பு, தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவைக்கும் இந்தப் பரப்புரைகள் மற்றும் தென்னாபிரிக்க வழக்கு மையத்தின் எதிர்ப்புக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதாகவும், அந்த நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு தென்னாபிரிக்க அதிபர் பணியகத்துடன் அல்லது அனைத்துலக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களத்துடன் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் முயற்சியிலும் தென்னாபிரிக்க வழக்கு மையம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

தற்போது 9 மாணவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.

ஏனைய ஆறு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-1 பிரிவின் கீழ் 72 மணித்தியால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று விசாரணையாளர்கள் கருதினால், மேலும் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

இவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், தடுத்து வைக்கப்பட்டுள்ளதும், வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சிறிலங்கா படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் உயரதிகாளிடம் பேசி மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி சட்டத்தரணிகள் 4 நாட்கள் பணிப்புறக்கணிப்பு.

வடபகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவியுமான சாந்தா அபிமன்ன சிங்கம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக தெரிவுக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பிலும், அக்கூட்டத் தொடரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் அதிருப்தியடைந்ததையிட்டு யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற அவசர சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் இப்பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கவுள்ளதாகவும், இப்பணிப்புறக்கணிப்பில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறியத்தந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சேவைநீடிப்பு வாய்ப்பை உதறிவிட்டு கொழும்பு திரும்புகிறார் தயான் ஜெயதிலக.

பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றும் தயான் ஜெயதிலக, சிறிலங்கா அதிபரிடம் சேவை நீடிப்புக் கோராமலேயே நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.

சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக கருதப்படும் தயான் ஜெயதிலக பாரிசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிறிலங்காவுக்கான தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.

மேலும் ஒரு ஆண்டு அவர் சேவை நீடிப்புக் கோரிப் பெறமுடியும் என்ற போதும், அதற்கு விண்ணப்பிக்காமல் கொழும்பு திரும்ப முடிவு செய்துள்ளார்.

வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் அவர் கொழும்பு திரும்பவுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, தயான் ஜெயதிலக வெளியிட்ட கருத்து சிறிலங்கா அரசாங்க மட்டத்தில் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

சிறிலங்கா அரசுக்கும் தயான் ஜெயதிலகவுக்கும் இடையில் அண்மைக்காலமாக சுமுகமான உறவு நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!