சிறிலங்கா இராணுவத்தில் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப்பெண்கள் 13 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களை உறவினர்கள் மட்டும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியான விடுதி ஒன்றில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
தனது மகளும், ஏனைய சில பெண் பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கி விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சில நிமிடங்களில் மீண்டும் சுயநினைவு பெற்று அவர்கள் இயல்பாக கதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டு படையில் சேர்க்கப்பட்ட இவர்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்களைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.