
தமிழ் இனத்தின் வாழ்வியல், போராட்டம், நினைவுகள் மற்றும் இடம்பெயர்வின் வரலாற்றுப் பாதைகளை ஆழமாக பதிவு செய்யும் முக்கிய படைப்பாக உருவாகியுள்ள “வலிகாமம் இருந்து வன்னி வரை” எனும் நூலின் வெளியீட்டு விழா வருகிற 18 ஏப்ரல் 2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல்போர்டில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழா The Ursuline Academy, Morland Road, Ilford, Essex, IG1 4JU என்ற முகவரியில் நடைபெறுகிறது.

வரலாற்றையும் வலியையும் சாட்சியப்படுத்தும் படைப்பு
மாமனிதர் கவிஞர் நாவண்ணன் அவர்களின் இந்தப் புதிய நூல், வலிகாமம் முதல் வன்னி வரை எமது மக்களின் அனுபவங்களையும், கட்டாய இடம்பெயர்வுகளையும், போர் கால துயரங்களையும், சமூக மனநிலைகளையும் உணர்ச்சியோடு பதிவு செய்கிறது.
இது வெறும் இலக்கிய நூல் மட்டுமல்ல; ஒரு தலைமுறையின் நினைவகமும், ஒரு இனத்தின் வரலாற்றுச் சாட்சியமும், ஒரு சமூகத்தின் மனஉணர்வுகளின் குரலும் ஆகும்.
கவிஞர் நாவண்ணன் அவர்கள் தனது நீண்டகால சமூக ஈடுபாட்டின் அடிப்படையில், நேரடிக் காட்சிகளையும், மக்களின் உணர்வுகளையும் இலக்கிய வடிவில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வை மெய் வெளி வெளியீட்டகம் (Meiveli Publishing House) ஏற்பாடு செய்துள்ளது.
“The wings to lift your vision” என்ற கோஷத்துடன் தமிழ் இலக்கியத்தையும் சிந்தனையையும் உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வரும் இவ்வெளியீட்டகம், பல தரமான தமிழ் நூல்களை வெளியிட்டு வருகிறது.
இலண்டன் தமிழர் தகவல் நடுவம் அனுசரணை வழங்குவதுடன், மெய்வெளி இணையத்தொலைக்காட்சியும் நமது ஈழநாடு இணையமும் ஊடகஅனுசரணையும் வழங்குகின்றன்.
தமிழ் சமூகத்தின் அறிவியல், கலாச்சாரம் மற்றும் வரலாற்று உணர்வுகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வமைப்புகள் தங்கள் ஆதரவை வழங்குகின்றன.

இலக்கிய ஆர்வலர்களுக்கான அழைப்பு
இந்நூல் வெளியீட்டு விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள உள்ளனர். நிகழ்வில் நூல் அறிமுகம், உரைகள், கவிதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
தமிழ் மொழியையும், எமது வரலாற்றையும் நேசிக்கும் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.



