Home Blog Page 319

இறுதிப்போர் இடம்பெற்ற இடத்தில் நடக்கும் போரை தடுக்க ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரும், மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும் நாளை சனிக்கிழமை முளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது.

வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவின் முளிவாய்க்காலில் காலை 10.00 மணிக்கு இக் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்து காலை 8.00 மணிக்கும் பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கும் விசேட பேரூந்துகள் புறப்படும். எனவே போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உரிய நேரத்திற்குள் குறித்த பேரூந்துகள் புறப்படும் இடத்துக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் காணிகளில் படையினரின் உல்லாச மைதானங்கள்! அதிர்ச்சி புகைப்படம்

image_pdfPRINT

தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி ஒரு வருடமாக போராடிவரும் மக்களின் நிலங்களில் இலங்கை இராணுவத்தினர் விகாரை, கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள் அமைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி வீதியில் நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை அடைந்துள்ளது. இருந்தும் அவர்களின் காணிகளை படையினர் இன்னும் முழுமையாக விடுவிக்கவில்லை.

இந்நிலையிலேயே கேப்பாபுலவில் காணிகளில் படையினர் பெரிய அளவிலான தரம்வாய்ந்த தமக்கான விளையாட்டு மைதானங்களை அமைத்திருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு வருடமாக சொந்த நிலத்துக்காக போராடி வரும் பிலக்குடியிருப்பு மக்கள் நிரந்தர வீடுகள், அடிப்படை போக்குவரத்து வசதிகள் இன்றி இன்னல்களை எதிர்நோக்கிவருகின்ற நிலையில் படையினர் அவர்களின் நிலங்களின் உல்லாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் மீதான தொடரும் சித்திரவதைகள்- மற்றுமொரு ஆதாரம் இதோ!

image_pdfPRINT

இலங்கையில் நல்லாட்சி அராசங்கத்தின் கீழும் சித்திரவதைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஊடகம் அல் ஜசீரா இன்று (1.3.3018) வெளியிட்டுள்ளது.

அதில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட சித்திரவதைகள் குறித்தும் போரின்போது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடூரமான சித்திரவதைகள் பாலியல் கொடுமைகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

https://www.aljazeera.com/amp/news/2018/03/exclusive-evidence-ongoing-torture-sri-lankan-tamils-180301070109291.html

அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்

image_pdfPRINT

அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் தெரிவித்துள்ளார்

கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில் மக்களது போராட்ட இடத்துக்கு வருகைதந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

கேப்பாபுலவு மக்களின் அகிம்சை போராட்டம் ஆண்டு ஒன்றினை கடந்துள்ள நிலையில் அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பது இங்குள்ள வெகுஜென போராட்டங்களை மக்கள் தொடர்ந்து நடத்துவதில் இருந்து அறியமுடிகின்றது

அரசாங்கத்தின் அராஜகபோக்கினை அரசு கைவிட்டுவிட்டு கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளதோ அவற்றையும் விடுவித்து மக்களுக்கான நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதை கேட்டுநிக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணமல் போனோர் பணியகத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம்

image_pdfPRINT

காணமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இப்பணியகத்தின் தலைவராக அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ் செயலாற்றவுள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அங்கீகாரம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட அவர், அச்செயலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் செயற்படுவார் எனவும் ஏனைய 6 உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஜெகதீபா புண்ணியமூர்த்தி, கணபதிப்பிள்ளை வேந்தன், மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரக்கீம் மற்றும் சுமனசிறி லியனகே ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இவ் உறுப்பினர்களில் மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ் இங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளராக இருந்தவர் எனவும் அவரது கணவர் பசீல் பீரிஸ் இராணுவத்தின் வரவு செலவு திட்ட மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை

image_pdfPRINT

மனிதம் உள்ள காதுகளில் எல்லாம் தற்போது கேட்டுக்கொண்டிருக்கும் அந்த சிரிய பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை இது …

#சிரியா– உலகின் கண்களை தன்பர்க்கம் ஈர்த்து நிற்கும் மிகவும் எண்ணெய் வளமிக்க ஒரு நாடு. இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பஷார் அல்-அஸாட் என்பவர் ஜனாதிபதியாக பதவிக்கு வருகின்றார். இவரின் சிறந்த ஆட்சி அவரை தொடர்ந்து இரு தடவைகள் அதே கதிரையில் உட்கார வைக்கிறது.

ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் அங்கு பிரச்சினையின் அடித்தளம் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து ஒரே கதிரையில் இருப்பது சிலரை மமதையின் உச்சத்திற்கு கொண்டுசென்று சர்வதிகார போக்கை உருவாக்கிவிடும். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் சர்வதிகாரம் இதற்கு சிறந்த உதாரணம்.

இந்நிலையில், பஷார் அல்-அஸாட்டின் ஆட்சி சிந்ததாக இல்லை. அவர் சர்வதிகாரப்போக்கையே கடைப்பிடிக்கிறார் என எதிர்த்தரப்பினர் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக எழுந்த ஒரு சிறிய குழு அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆங்காங்கே குண்டுகள் வைத்து கிளர்ச்சிகள் செய்ய ஆரம்பித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஐனாதிபதி அவற்றை அடக்கும் முனைப்பில் தனது அரசபடைகளைக் கொண்டு எதிர்குழுவினரில் சுமார் 12 பேர்வரை கொலைசெய்கிறார்.

இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அரசு எண்ணியிருந்தபோது அதன் பின்னரே தான் பிரச்சினை மேலும் வலுக்க தொடங்குகிறது. அரச படைகளுக்கு எதிராக கிளர்ச்சிக்குழு போர்தொடுக்க அது ஓர் உள்நாட்டு யுத்தமாக மாற்றமடைகிறது.

2011 ஜனவரியில் ஆரம்பமான இப்போரானது
2013 இல் அல் ஹொய்தா அமைப்பு அவ் அரச எதிர்ப்புக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட, மிகப்பெரிய உள்நாட்டு யுத்தமாக மாற்றம்பெற்றது. அல் ஹொய்தாவும் குறித்த அவ்வெதிர்ப்புக்குழுவும் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். ஏன்ற மிகப்பெரிய தீவிரவாதக்குழுவாக மாற்றம் பெற்றது.

இதனையடுத்து அங்கு அரசுக்கு எதிராக பாரிய அளவிலான யுத்தங்கள் நடைபெற தொடங்கின.
அந்தவகையில் கடந்த 2013 வரைக்கும் 90 ஆயிரம் பொதுமக்கள் அந்த உள்நாட்டு யுத்தத்தினால் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் 2015 இல் அதே தொகை சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரமாக மாற்றம் பெறுகிறது. இதனையடுத்தே நேசநாடுகள் உட்பட உலக நாடுகள் இது ஒரு மிகப்பெரிய போர் என கவனம் கொள்ள ஆரம்பித்தன.

இந்நிலையில், சிரியாவுடன் நீண்டகால நட்பை பேணிவரும் ரஷ்யா தனது நட்புக்கு கைகொடுக்க இந்த போருக்குள்ளே நுழைகிறது. இதனையடுத்து சிரியாவுக்கு தேவையான ஆயுதம், பணம் மற்றும் படை பலம் உட்பட அனைத்து உதவிகளையும் இறங்கி செய்யத் தொடங்கியது.
அதேவேளை மறுமுனையில் ரஷ்யாவின் பெரும் எதிரயான அமெரிக்கா ரஷ்யா எங்கு சென்றாலும் அதில் தனது மூக்கையும் நுழைப்பதை விட்டுவைப்பதில்லை. அதனடிப்படையில்
இப்போருக்குள் நேரடியாக உள்நுழையாத அமெரிக்கா 2015 இல் சிரியாவின் மீது பொருளாதார தடையை கொண்டுவருகிறது. அதே நேரம் சிரியாவை சுற்றவுள்ள ஏனைய நாடுகளையும் சிரியாவுடனான தொடர்பை இறுக்கிக்கொள்ள அழுத்தம் கொடுத்தது.

இதனால் இப்போர் 2015 இற்கு பிறகு இன்னும் உக்கிரமடைய சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு உக்கிரமடைந்து வந்த இப்போரின் உச்சக்கட்டமாக இம்மாதம் கடந்த 25,26 ஆம் திகதிகளில் அரசபடைகளினால் இருபெரும் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது.
இது வெறுமனே சாதாரணமானதொரு குண்டுத்தாக்குதல் அல்ல.

இலங்கையின் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது சிங்களப்பேரினவாதத்தினால் அப்பாவிப்பொதுமக்கள் மேல் வீசப்பட்ட இரசாயனம் கலக்கப்பட்ட அதே வாயுக் குண்டுத்தாக்குதேலே அங்கும் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணரச்செய்யும் உடல் பொசுங்கி கருகச்செய்யும் அந்த குண்டுகளின் தார்ப்பரியம் நாம் அறிவோம்.

இந்நிலையில் அரசபடைகளால் டமாஸ்கஷ் என்ற நகரத்தின் மீது பரவலாக போடப்பட்ட இக்குண்டுதாக்குதலில் சுமார் 100 மேற்பட்டோர் இதுவரையில் கொளப்படுள்ளனர். இதில் சிறுவர்கள் மட்டும் 200 தண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அரசுக்கும் அதற்கு எதிரான ஒரு குழுவுக்கும் இடையில் ஆரம்பமான இப்போர் பின்னர் மற்றுமொரு குழுவின் ஆதரவுடன் பெரிய போராக மாறி இன்று அப்பாவி மக்களையும் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று தின்னும் கொடிய போராக மாற்றம் பெற்று நிற்கிறது.

அதேவேளை மறுமுனையில் தலையை நுழைத்து நிற்கும் கீரியும்-பாம்புமான அமெரிக்காவுக்கும் -ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெறும் பனிப்போராகவும் இது மாற்றம் பெற்று நிற்கிறது. இது இன்னுமொரு உலகப்போர் தோற்றம் பெறுவதற்கான அச்சாணியாக அமையும் என்றாலும் மறுப்பதற்கில்லை.

-சுகி

சிரிய படுகொலைகளைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT

சிரியாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியில் கவனஞ் செலுத்துமாறும் அங்கு இடம்பெறும் படுகொலைகளைக் கண்டித்தும் வடக்கு கிழக்குமாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீப சில தினங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயோதிபர்கள் உட்பட அப்பாவிகளான மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும் ஐ.நா. மௌனமாக இருப்பதையும் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை வியாழக்கிழமை (01.03.2018) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும் அன்றைய தினம் மாலை 4 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்த கண்டனப் போராட்டத்தில் மனிதாபிமானத்தை நேசிக்கும் மக்கள் அனைவரையும் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுமாறு அந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்

image_pdfPRINT

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் இலங்கையின் 2 முஸ்லிம் பெண்களில் ஒருவராகத் தெரிவாகி பயிற்சிகளை முடித்துக் கொண்ட பின்னர் இந்த நியமனத்தை அவர் பெற்றுள்ளார்.

வடக்கில் விவசாயிகள் கௌரவிப்பு

image_pdfPRINT

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கௌரவிப்பும் விருது வழங்கலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 க்கு மேற்பட்ட சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்த சசிதரன் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் இ.ஜெயசேகரம் உட்பட பெருமளவான மக்களும் கலந்துகொண்டனர்.

வட்டுவாகலில் போராட்டம் செய்தவர்கள் பலரை சட்டத்திற்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலீஸார் நடவடிக்கை!

image_pdfPRINT

வட்டுவாகல் கோத்தபாஜ கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தவர்கள் பலரை சட்டத்திற்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை சுவீகரித்து செய்துகொள்ளும் நோக்கில் அளவீடு செய்யவந்த அதிகாரிகளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் போராட்டம் மேற்கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளார்கள்

இதில் மக்களின் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே.சிவாஜிலிங்கம் அவர்களை இன்று 27-02-2018 நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் சிவாஜிலிங்கம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி முற்பிணை விண்ணப்பத்தினை கோரியுள்ளார் இதன் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 6 திகதி இந்த வழக்கினை விசாரிக்க திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னிலையில் வட்டுவாகல் பகுதியில் ஆர்பாட்டத்தினை முன்னெடுத்த சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ்பொது மக்களுக்கு பீதியினை ஏற்படுத்தல்
அரசஊழியர் வேலைக்கு இடையூறு, பொதுமக்களின் பாவனைக்கான வீதியினை இடையூறு, கடமையில் இருந்த அரசஊழியர் மீதான அச்சுறுத்தல், வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியமை,அரச வாகனத்தை அடித்து சேதப்படுத்தியமை ,சட்டவிரோதமனா கூட்டம் கூடியமை போன்ற குற்றங்களின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், மற்றும் சி.லோகேஸ்வரன், இளஞ்செழியன், சண்முகலிங்கம் பேன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்ப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்.மருத்துவபீட மாணவன் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

image_pdfPRINT

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த சாமூவேல் எனும் மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீனா செல்லும் கொலைமிரட்டல் பிரியங்க

image_pdfPRINT

கொலைமிரட்டல் அதிகாரி பிரியந்த பெர்ணான்டோ பாடநெறி ஒன்றை கற்பதற்காக சீனா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் விவகாரத்தினையடுத்து விசாரணைகளுக்காகவே அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது இத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி சீனா செல்லவுள்ள அவர் அங்கு 5 மாதகாலம் தங்கியிருந்து பாடநெறியை கற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!