SHARE

தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி ஒரு வருடமாக போராடிவரும் மக்களின் நிலங்களில் இலங்கை இராணுவத்தினர் விகாரை, கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள் அமைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி வீதியில் நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை அடைந்துள்ளது. இருந்தும் அவர்களின் காணிகளை படையினர் இன்னும் முழுமையாக விடுவிக்கவில்லை.

இந்நிலையிலேயே கேப்பாபுலவில் காணிகளில் படையினர் பெரிய அளவிலான தரம்வாய்ந்த தமக்கான விளையாட்டு மைதானங்களை அமைத்திருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு வருடமாக சொந்த நிலத்துக்காக போராடி வரும் பிலக்குடியிருப்பு மக்கள் நிரந்தர வீடுகள், அடிப்படை போக்குவரத்து வசதிகள் இன்றி இன்னல்களை எதிர்நோக்கிவருகின்ற நிலையில் படையினர் அவர்களின் நிலங்களின் உல்லாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.