SHARE

மனிதம் உள்ள காதுகளில் எல்லாம் தற்போது கேட்டுக்கொண்டிருக்கும் அந்த சிரிய பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை இது …

#சிரியா– உலகின் கண்களை தன்பர்க்கம் ஈர்த்து நிற்கும் மிகவும் எண்ணெய் வளமிக்க ஒரு நாடு. இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பஷார் அல்-அஸாட் என்பவர் ஜனாதிபதியாக பதவிக்கு வருகின்றார். இவரின் சிறந்த ஆட்சி அவரை தொடர்ந்து இரு தடவைகள் அதே கதிரையில் உட்கார வைக்கிறது.

ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் அங்கு பிரச்சினையின் அடித்தளம் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து ஒரே கதிரையில் இருப்பது சிலரை மமதையின் உச்சத்திற்கு கொண்டுசென்று சர்வதிகார போக்கை உருவாக்கிவிடும். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் சர்வதிகாரம் இதற்கு சிறந்த உதாரணம்.

இந்நிலையில், பஷார் அல்-அஸாட்டின் ஆட்சி சிந்ததாக இல்லை. அவர் சர்வதிகாரப்போக்கையே கடைப்பிடிக்கிறார் என எதிர்த்தரப்பினர் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக எழுந்த ஒரு சிறிய குழு அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆங்காங்கே குண்டுகள் வைத்து கிளர்ச்சிகள் செய்ய ஆரம்பித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஐனாதிபதி அவற்றை அடக்கும் முனைப்பில் தனது அரசபடைகளைக் கொண்டு எதிர்குழுவினரில் சுமார் 12 பேர்வரை கொலைசெய்கிறார்.

இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அரசு எண்ணியிருந்தபோது அதன் பின்னரே தான் பிரச்சினை மேலும் வலுக்க தொடங்குகிறது. அரச படைகளுக்கு எதிராக கிளர்ச்சிக்குழு போர்தொடுக்க அது ஓர் உள்நாட்டு யுத்தமாக மாற்றமடைகிறது.

2011 ஜனவரியில் ஆரம்பமான இப்போரானது
2013 இல் அல் ஹொய்தா அமைப்பு அவ் அரச எதிர்ப்புக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட, மிகப்பெரிய உள்நாட்டு யுத்தமாக மாற்றம்பெற்றது. அல் ஹொய்தாவும் குறித்த அவ்வெதிர்ப்புக்குழுவும் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். ஏன்ற மிகப்பெரிய தீவிரவாதக்குழுவாக மாற்றம் பெற்றது.

இதனையடுத்து அங்கு அரசுக்கு எதிராக பாரிய அளவிலான யுத்தங்கள் நடைபெற தொடங்கின.
அந்தவகையில் கடந்த 2013 வரைக்கும் 90 ஆயிரம் பொதுமக்கள் அந்த உள்நாட்டு யுத்தத்தினால் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் 2015 இல் அதே தொகை சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரமாக மாற்றம் பெறுகிறது. இதனையடுத்தே நேசநாடுகள் உட்பட உலக நாடுகள் இது ஒரு மிகப்பெரிய போர் என கவனம் கொள்ள ஆரம்பித்தன.

இந்நிலையில், சிரியாவுடன் நீண்டகால நட்பை பேணிவரும் ரஷ்யா தனது நட்புக்கு கைகொடுக்க இந்த போருக்குள்ளே நுழைகிறது. இதனையடுத்து சிரியாவுக்கு தேவையான ஆயுதம், பணம் மற்றும் படை பலம் உட்பட அனைத்து உதவிகளையும் இறங்கி செய்யத் தொடங்கியது.
அதேவேளை மறுமுனையில் ரஷ்யாவின் பெரும் எதிரயான அமெரிக்கா ரஷ்யா எங்கு சென்றாலும் அதில் தனது மூக்கையும் நுழைப்பதை விட்டுவைப்பதில்லை. அதனடிப்படையில்
இப்போருக்குள் நேரடியாக உள்நுழையாத அமெரிக்கா 2015 இல் சிரியாவின் மீது பொருளாதார தடையை கொண்டுவருகிறது. அதே நேரம் சிரியாவை சுற்றவுள்ள ஏனைய நாடுகளையும் சிரியாவுடனான தொடர்பை இறுக்கிக்கொள்ள அழுத்தம் கொடுத்தது.

இதனால் இப்போர் 2015 இற்கு பிறகு இன்னும் உக்கிரமடைய சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு உக்கிரமடைந்து வந்த இப்போரின் உச்சக்கட்டமாக இம்மாதம் கடந்த 25,26 ஆம் திகதிகளில் அரசபடைகளினால் இருபெரும் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது.
இது வெறுமனே சாதாரணமானதொரு குண்டுத்தாக்குதல் அல்ல.

இலங்கையின் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது சிங்களப்பேரினவாதத்தினால் அப்பாவிப்பொதுமக்கள் மேல் வீசப்பட்ட இரசாயனம் கலக்கப்பட்ட அதே வாயுக் குண்டுத்தாக்குதேலே அங்கும் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணரச்செய்யும் உடல் பொசுங்கி கருகச்செய்யும் அந்த குண்டுகளின் தார்ப்பரியம் நாம் அறிவோம்.

இந்நிலையில் அரசபடைகளால் டமாஸ்கஷ் என்ற நகரத்தின் மீது பரவலாக போடப்பட்ட இக்குண்டுதாக்குதலில் சுமார் 100 மேற்பட்டோர் இதுவரையில் கொளப்படுள்ளனர். இதில் சிறுவர்கள் மட்டும் 200 தண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அரசுக்கும் அதற்கு எதிரான ஒரு குழுவுக்கும் இடையில் ஆரம்பமான இப்போர் பின்னர் மற்றுமொரு குழுவின் ஆதரவுடன் பெரிய போராக மாறி இன்று அப்பாவி மக்களையும் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று தின்னும் கொடிய போராக மாற்றம் பெற்று நிற்கிறது.

அதேவேளை மறுமுனையில் தலையை நுழைத்து நிற்கும் கீரியும்-பாம்புமான அமெரிக்காவுக்கும் -ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெறும் பனிப்போராகவும் இது மாற்றம் பெற்று நிற்கிறது. இது இன்னுமொரு உலகப்போர் தோற்றம் பெறுவதற்கான அச்சாணியாக அமையும் என்றாலும் மறுப்பதற்கில்லை.

-சுகி

Print Friendly, PDF & Email