வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கௌரவிப்பும் விருது வழங்கலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
இதன்போது யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 க்கு மேற்பட்ட சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்த சசிதரன் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் இ.ஜெயசேகரம் உட்பட பெருமளவான மக்களும் கலந்துகொண்டனர்.




