யாழ். உதயன் பத்திரிகை மீதான ஊடக படுகொலையின் நினைவு நாள்
யாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது
யாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது
இதேவேளை உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நிர்வாக காலம் முடிவடைந்துள்ள , சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நிர்வாக காலம் முடிவடையவுள்ள, மத்தி, வடக்கு மற்றும் வட மேற்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இந்த தேர்தலை பழைய விகிதாசார முறைமையில் நடத்துவதற்கு அரசியற் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.
விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.
சமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
நீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் (Amber Rudd) பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் ஆம்பர் ரூத்துக்கு எதிராக ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆமபர் ரூத்தின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்து.
இதனையடுத்தே சஜித் ஜாவித்தை பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.
சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என கடந்த வெள்ளிக்கிழமை (27) வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.