SHARE
image_pdfPRINT

யாழ்.  உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது

கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி உதயன் பத்திரிகை நிறுவனம்  மீது ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நினைவாக இந்நாள் அனுஸ்டிக்கபட்டது.
 உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் யோகேந்திரநாதன் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது
 இதன்போது ஊடகத்துறை மற்றும் உதயன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலியான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
 யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,ஈஸ்வரபாதம் சரவணபவன,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் ஊடகநிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.