SHARE
நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயங்களில் தலையிடக்கூடாது என ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்த பிரச்சினையும் இடம்பெறாது என உறுதியளித்திருந்தார் என்ற அதிர்ச்சியளிக்கும் விடயம் பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள நடன ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டு கும்பல் ஒன்று நடன ஆசிரியை மீதும் அவரது தாயார் மீதும் தாக்குதல் நடத்தினர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணையிலேயே மேற்படி திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.
வாள்வெட்டு கும்பலின் இலக்கு ஆசிரியையின் சகோதரி மீதானதே. குறித்த நேரத்தில் அவர் வீட்டினுள் ஒளிந்துக்கொண்டதானலேயே ஆசிரியை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
ஆசிரியையின் சகோதரியின் கணவரது முதலாவது மனைவி சுவிஸில் வசிக்கிறார். அவரது ஏற்பாட்டிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின் தெரிவித்தனர்.
இதேவேளை இவ் விசாரணையில் புதிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. குறித்த ஆசிரியையின் வீடிற்கு இரண்டு மதங்களிற்கு முன்னர் தம்மை ஈ.பி.டி.பி உறுப்பினர் என சொல்லிக்கொண்டு இருவர் சென்றுள்ளார்.
அவர்கள் தாம் வெளிநாட்டு ஆன்ரி  சொல்லியே வந்தோம் என அச்சுறுத்தும் பணியில் செயல்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட இதனை அறிந்த அயலவர் ஒன்றுகூடி அதில் ஒருவரை மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸில் ஒப்படைத்தனர்.
பின்னர் ஆசிரியையின் வீட்டுக்காரர்கள் இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றது, குறித்த முறைப்பாடு தொடர்பில் சம்மந்தப்பட்ட உறுப்பினர் இருவரையும் அழைத்து இனிமேல் அந்த  குடும்பத்துடன் எந்த பிரச்சினைக்கும் போகக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருந்தார் என பொலிஸ் தவல்கள் தெரிவிக்கின்றன.
Print Friendly, PDF & Email