SHARE
image_pdfPRINT
இலங்கை அரசாங்கத்தினால் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழில் மே தின கூட்டங்கள் உலக உழைப்பாளர் தினமான இன்றைய தினம் (1) எழுச்சிபூர்வமாக நடைபெற்றன.
அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் வடமராட்சி மாலை சந்தி மைக்கல் விளையாட்டரங்கிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலும் நடைபெற்றன.
வெசாக் வாரத்தில் மே தினம் வந்தமையில் , மகாநயக்க தேரர்கள் மே தினத்தை பிற்போடுமாறு அரசாங்கத்தை கோரியதனை அடுத்து இலங்கையில் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதி என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் மே தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட்டு , 7ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.