SHARE
image_pdfPRINT
வல்வை முத்துமாரி அம்மன் ஆலய நாதஸ்வர கச்சேரியில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல் கோவிலில் திண்டிருந்த மக்களை மகிழ்ச்சியால் நெகிழ வைத்துள்ள அதே வேளை  சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வேட்டைத்திருவிழாவான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தவில் நாதஸ்வர கச்சேரியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல்களிலிருந்து “ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று/ தமிழீழ கடலெங்கும் எங்கள் கரிகாலன்” எனும் பாடலும் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் / கண்டது சிங்களம் கலங்கிட வெல்வோம் ” எனும் பாடலும் இசைக்கப்பட்டன.
நாதஸ்வர தவலில் தோய்ந்து காற்றில் கலந்து  அங்கிருந்த பெரும் திரளான மக்களை மகிழ்ச்சியால் நெகிழவைத்த குறித்த இரு பாடல்களையும் நீங்களும் கேட்க கிழே உள்ள இரு ‘லிங்’ குகளை அழுத்துங்கள்.