Home Blog Page 305

புலிகளைத் தோற்கடித்தபோதும் அவர்களின் கொள்கைகளைத் தோற்கடிப்பத்தில் தோற்றுப்போய்விட்டோம் – நாடாளுமன்றில் ஜனாதிபதி

image_pdfPRINT
வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌதீக ரீதியில் தாம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் அங்குரார்ப்பணம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (08) இடம்பெற்றது.

அங்கு கொள்கை விளக்க உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நான் நம்புகிறேன்.

எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும்.
பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே நான் முயற்சித்து வந்தேன்.
யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வதென்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் காரியம் ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அச்சவால் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்யவேண்டி இருக்கின்றது என தெரிவித்தார்.

மீனவரின் வலையை எரித்த லண்டன் வாசியின் கடவுச்சீட்டு நீதிமன்றால் முடக்கம்

image_pdfPRINT
உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் வலைகளை எரித்து நாசம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  விளக்கமறியலில் வைக்கப்பட்ட லண்டனில் வதிவிட உரிமைபெற்றவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதேவேளை சந்தேகநபரின் கடவுச்சீட்டை முடக்கிவைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.
வெளிநாட்டவருடன் இந்தக் குற்றத்துக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களையும் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியிலுள்ள கடற்கரைக்கு லண்டனிலிருந்து வந்த நபரொருவரும் அவரது நண்பரும் முச்சக்கர வண்டியொன்றில் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு பனை மரம் ஒன்றின் கீழே இறால் பிடிக்கும் வலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மத்தியில் நெருப்பு மூட்டி மீன்களை சுட ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தை அவதானித்த  வலை உரிமையாளர்கள் வலைகள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த இடத்தில் நெருப்பு மூட்ட வேண்டாம் என கேட்டுள்ளனர் .
எனினும் அதனை வந்திருந்தவர்கள் ஏற்காததுடன் தொடர்ந்தும் அவ்விடத்தில் இருந்துள்ளனர்.
வலை உரிமையாளர்கள் அவ்விடத்திலிருந்து சென்று சிறிது நேரத்தின் பின்னர் வந்து பார்த்த போது, 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் தீயில் எரிந்து நாசமாகி கிடந்ததை கண்டுள்ளனர். இந்தச்  சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்டது.
பொலிஸாரின் விசாரணையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்  கைது செய்யப்பட்டார். அவர்  யாழ் நீதிவான் நீதிமன்றில் கடந்த 3ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்.
அவரை இன்று 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அத்துடன், அவரது குற்றத்துக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபருக்கு பிணை கோரி அவரது சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை ஆராய்ந்த நீதிவான், “சந்தேகநபர்கள் மூவரும் பிணை முறியில்  கையொப்பமிட்டு செல்லலாம்.வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு நீதிமன்றால் முடக்கப்படுகிறது” என்று கட்டளையிட்டார்.

யாழில் கட்டடத்தை அடாத்தாக கைவசப்படுத்தியுள்ள தொலைக்காட்சி

image_pdfPRINT

யாழ்.புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டட தொகுதியின் சில பகுதிகளை யாழில்.உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அடாத்தாக கைவசப்படுத்தி வைத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். 

யாழ்.மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது ,
குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் உள்ளன.  அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவே அது தொடர்பில் தனக்கு பதில் வழங்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் போது பதிலளித்த யாழ் மாநகர ஆணையாளர் குறித்த கட்டடத்தில் உள்ள 54 கடைகளில் 32 கடைகளை யாழ் மாநகரசபை பொறுப்பேற்றுவிட்டதாகவும். கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கியபோது ஒப்பந்தகாரர் கட்டடத்தைக் கட்டி ஏனையவர்களுக்கு விற்பது எனவும் அதன்பின்னர் யாழ் மாநகரசபை அக்கட்டடங்களை பொறுப்பேற்று அதனைக் கொள்வனவு செய்தவர்களிடம் வாடகைப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் மணிவண்ணன் அப்படியானால் குறித்த கட்டடத்தில் யாழ் மாநகரசபை பொறுப்பேற்றிருக்காத தொகுதிகள் இன்னமும் அதனைக் கட்டிய ஒப்பந்த காரரான மனோகரன் என்பவர் வசம் உள்ளதா? அவர் அதனை தான் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக்கொள்கிறாரா உள்ளிட்ட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவேண்டும் என கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் குறித்த கட்டடம் தொடர்பில்  தானும் ஆராய்ந்ததாகவும் குறித்த கட்டட ஒப்பந்தகாரர் தான் சில சிக்கல் நிலைகளில் சிக்குண்டிருப்பதாக குறிப்பிட்டதாகவும் குறிப்பிட்டதோடு யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சி ஒன்றினால் குறித்த கட்டடத்தின் சில பகுதிகள் கட்டட ஒப்பந்தகாரரான மனோகரன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டிப்பதாகவும் அதனை தான் சபைக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் அதற்குப் பதிலுரைத்த உறுப்பினர் மணிவண்ணன் மனோகரனை அழைத்து இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் குறிப்பிட்டதோடு கால தாமதமின்றி குறித்த தொலைக்காட்சி பயன்படுத்தும் கட்டடத்தை யாழ் மாநகரசபை கைப்பற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

கோவிலில் ஆவா குழு வாள் வெட்டு; கழுத்தில் வெட்டுண்ட இளைஞன் அதிதீவிர சிகிச்சையில்

image_pdfPRINT

நீர்வேலியில் சம்பவம்

நீர்வேலியில் ஆலயத்தினுள் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும்,  அதில் படுகாயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரவித்தனர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (7)  மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசி (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
அதே இடத்தைச் சேர்ந்த கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர்.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் இருவரும் இருந்துள்ளனர்.  கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியுள்ளது. ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துள்ளது.
அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கிணற்றுக்குள்ளிலிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டன. அத்துடன் வாள்வெட்டு நடத்தியவரின்  என நம்பப்படும் முகத்தை மறைக்கும் துணியும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் டயரி
மே-08  
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற (No Fire Zone) பாதுகாப்பு வலயம்  இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது.
ஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்து, அதன்பின்னர்  அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது.
2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான
அந்த நிலப்பரப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் நெரிசலாக நகர்த்தப்பட்டனர். 
 
வெறும் 10 நாட்கள் மட்டுமே அந்த வயம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்திராத மக்களாக
எஞ்சிய உயிர்களை கைகளில் பிடித்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனர்.

தமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்

image_pdfPRINT
சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது.
இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது.
காணொளியை பார்க்க
சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில்
சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார். மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.
இதேவேளை அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார்.
இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.
இதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிசாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டினார்.
இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்தார்கள்.
புகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக அவர் கூறினார்.
இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்

image_pdfPRINT

விடுதலைப்புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன?  (பகுதி – 2)

மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,

ராஜீவ் காந்தியின் மரணம் இந்தியாவை மாற்றியதா?

நான் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதான விடயம். ஆனால் ராஜீவின் படுகொலைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது பதவியில் இருந்திருக்கவில்லை.

அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ராஜீவினை சந்திப்பதற்கு விரும்பினார்கள். நானே நேரடியாக அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் காசி ஆனந்தன் ராஜீவ் காந்தியை நேரில் சந்திக்கின்றார்.

அச்சமயத்தில் அவர் பல்வேறு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சென்று தங்களது அலுவகத்தில் சில ஆவணங்களையும் பொருட்களையும் எடுக்க வேண்டியிருந்தது. இந்த வியடத்தினை திபீந்தர் சிங்கிடத்தில் தெரிவித்து விட்டே தமிழகத்திற்கு வந்தனர். இதனை எவ்வாறோ அறிந்த தீட்சித் இலங்கை இராணுவத்திற்கு தகவல் வழங்கிவிட்டார். அத்துடன் தீட்சித் இவர்களின் பயணம் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் கைவிரித்தமையால் ஈற்றில் அவர்கள் மரணமடைய வேண்டியேற்பட்டது. இதனால் தான் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் உருவாக வேண்டிய நிலைமைகள் எழுந்தன.

அதனை தவிர விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதவேண்டிய எந்தவொரு சூழலும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனை ஆழமாக கேட்டுக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி “பிரபாகரனிடம் கூறுங்கள் தவறு நடைபெற்றுவிட்டது. எனக்குத் தெரியாது அந்தத் தவறு இழைக்கப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் நடைபெறப்போகின்றது. இதில் அதிகாரத்திற்கு நானே வரப்போகின்றேன். வந்தவுடன் புலிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நான் வழங்குவேன் என்பதை பிரபாகரனிடத்தில் உறுதியாக கூறுங்கள்” குறிப்பிட்டார். இதனை காசி ஆனந்தன் என்னிடத்தில் கூறினார். அந்த தகவல் பிரபாகரனுக்கும் அனுப்பப்பட்டது.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது பதவியில் இல்லாத ஒருவரையும் எதிர்க்காலத்தல் தமக்காக செயற்படப்போவதாக வாக்குறுதி அளித்த ஒருவரையும் கொலை செய்யவேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்படாது. ஆதன் காரணத்தால் ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை தீர்ப்பு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் சட்டத்தரணிகள் குழுவுக்கான நிதி சேகரிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினேன். அந்த வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டு அதில் 19 பேர் விடுதலையாக்கப்பட்டுள்ளனர்.

அந்த வழக்கின் தலைநீதிபதி கே.டி.தோமஸ், இந்;தியாவின் பிரதமரை படுகொலை செய்த வழக்கில் யாரையும் தண்டிக்காது விட்டால் தவறாகிவிடும் என்பதால் தவறிழைத்துவிட்டேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று இந்த கொலைவழக்கின் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி வி.தியாகராஜன், வாக்குமூலத்தினை திருத்தி எழுதியாக குறிப்பிடுகின்றார். இதனைவிடவும் ராஜீவ் கொலையின் பின்னணி சதி இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய கூட்டு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்ட போதும் தற்போது வரையில் அவர்கள் எவ்விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.

தற்போது ராஜீவ் கொலைவழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக்குழு தலைவராக செயற்பட்ட கார்த்திகேயன் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுள்ளதால் கூட்டு ஆணைக்குழு விசாரணை செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இன்னமும் முடியவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்றவர்களின் ஒருவர் வீட்டுத்தரகரான ரங்கநாத்.

சிவராஜன் ரங்கநாத்தை சந்தித்து வீடு வாடகைக்கு தேவை எனக் கோரியதனையடுத்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிவராஜன் டெல்லிக்குச் சென்றபோதும், சந்திரசாமியைச் சந்திக்கச் சென்றபோதும் ரங்கநாத் சென்றுள்ளார். ரங்கநாத்தை கைது செய்தபோது இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார். இருப்பினும் கார்த்திகேயன் அவரை தாக்கி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்பதை ரங்கநாத்தே கூறியுள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பில் இதனை ‘த வீக்’ என்ற பத்திரிகை கார்த்திகேயனிடத்தில் கேள்வி எழுப்பியபோது அவர் கடுந்தொனியில் சத்தமிடவும் அக்கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கட்டுரையொன்றை வெளியிட்டது.

அந்த பத்திரிகை சோனியா கந்தியின் பார்வைக்குச் செல்லவும் அதிர்ச்சியடைந்த அவர் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்கிடத்தில் ரங்கநாத்தை பார்க்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அர்ஜுன் சிங் உடனடியாக ரி.ஆர்.தங்கபாலுவிடத்தில் தகவல் தெரிவிக்கவும் அவர் என்னை வந்து சந்தித்தார். காரணம் ரங்கநாத் என்னுடைய அலுவலகத்தில் தான் தங்கியிருந்தார். அச்சமயத்தில் ரங்கநாத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அவரை அனுப்ப தயார் என்று நான் கோரவும் உடனடியாக ரங்கநாத்துக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பனை அர்ஜுன் சிங் விடுத்தார்.

இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சோனியா காந்தியை ரங்கநாத் சந்தித்தார். தனக்கு நிகழ்த்தப்பட்ட சித்தவதைகள் உட்பட தனது குடும்பத்தை புலனாய்வு அதிகாரிகள் சிதைத்தது வரையில் அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதனால் சோனியா காந்தி எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டதோடு தனது கணவரின் கொலைசம்பவத்தை கண்டறிந்தவர் என்ற வகையில் கார்த்திகேயன் மீது வைத்திருந்த மரியாதையை தாண்டி அவரை சந்திப்பதையும் தவிர்க்கலானார்.

இதுவொருபக்கமாக இருக்கையில் ராஜீவ் மரணமடைந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த யசீர் அரபத், ராஜீவுக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது. ஆகவே கூட்டமான பகுதிகளுக்குள் செல்லவேண்டாம் என அவரை எச்சரித்திருந்தேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

அவ்வாறு யசீர் அரபத் தெரிவித்திருந்த நிலையில் அவரிடத்தில் கார்த்திகேயன் விசாரணை நடத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதனை கடைவரையில் செய்யவில்லையே. மேலும் ரங்கநாத்திடம் சித்திரவதை வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டாலும் சந்திரசாமியிடத்தில் விசாரணை செய்யவில்லையே. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் மீது எவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தமுடியும்?

இன்றும் அன்றும் தற்போது காவிரிமேலான்மை வாரியம் அமைக்குமாறு பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இச்சமயத்தில் தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்புக்;கள் எழுகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி மோடியை வரவேற்ற செல்லமாட்டேன் என்று உறுதியாக கூறியபோதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவரை வரவேற்கிறார். நியாயமான முதலமைச்சர் என்றால் பிரதமரை வரவேற்கச் சென்றிருக்காது விட்டிருந்தால் அவர் அதிர்ச்சியடைந்து சிந்தித்திருப்பார்.

இதேபோன்று தான் அன்று நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.

அச் சமயத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டினார். உடனடியாக ஈழத்தில் நடைபெறும் போரினை நிறுத்தாது விட்டால் தமிழக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நானும்ரூபவ் த.பாண்டினும் வலியுறுத்தியபோது கலைஞர் அமைச்சர்கள் மட்டுமல்ல நாற்பது உறுப்பினர்களும் இராஜினாமச்செய்வோம் என்று கூறவோம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருதினங்களில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி கலைஞரைச் சந்திக்கின்றார்.

இதனையடுத்து ஊடகவியாளர்களை சந்தித்த கலைஞர் இந்திய அரசாங்கம் போர்நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றது. ஆகவே 40 உறுப்பினர்களும் இராஜினாமச் செய்யவேண்டியதில்லை என்று அறிவித்தார்.

அனைத்துக்கட்சி தீர்மானம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அனர்த்துக் கட்சியைக் கூட்டாது கலைஞர் எவ்வாறு சுயமான அறிவிப்பினைச் செய்யமுடியும். ஆகவே அவர் இளைத்தது பெரும் துரோகம் என்பதை அன்றே கண்டனத்துடன் கூறினேன். அதன்பின்னர் நான் பிரனாப்பிற்கும், கலைஞருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்தபோது “2 ஜி ஊழல்” தொடர்பான கோப்பினை கலைஞருக்கு காட்டி கலைஞயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆகவே மாநில அரசாங்கத்தின் பலவீனம் டில்லிக்கு வாய்ப்பாகிவிட்டது.

பிழையான வழிநடத்தல் அத்துடன் இக்காலத்தில் சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராக இந்தியாவின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் நம்பியார் செயற்பட்டார். அவருடைய சகோதரர் விஜய் கே நம்பினார் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளருக்கு இராணுவ ஆலோசகராக பணியாற்றினார்.

வெளிவிவகார செயலாளராக கே.பி.எஸ் மேனனும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் ஆகியோரும் பதவிகளை வகித்தனர். சோனியா காந்தியிடம் கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்க தக்க தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இழந்து விடக்கூடாது என்று கூறி இவர்கள் அனைவரும் சோனியா காந்தியை பிழையாக வழி நடத்தினார்கள்.

இந்தியா செய்தது என்ன?

தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் பிரதிநிதிகளால் பாரியளவில் எதனையும் முன்னெடுக்க முடியாத நிலைமையொன்றுதான் அங்குள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் குமார் பொன்னம்பலம் போன்வர்களை படுகொலை செய்தபோது இந்தியா அது தொடர்பில் கேள்வி எழுப்பியதா? அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா? ஆகவே அவர்களின் நெருக்கடியான நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்ஷவின் கொடூரத்தையும் தனது கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி தமிழ் பிரதேசங்களில் வெற்றிபெறச் செய்து அதனை சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்ய முனைந்த சூழ்ச்சியையும் நன்கு அறிந்து தான் அவரை தோற்கடித்ததோடு தமிழ் கூட்டமைப்பினையும் வெற்றி பெறச் செய்தார். தற்போது கூட சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையல்லாப் பிரேரணையை ஆதரித்துள்ளார்கள். அது அரசியல் ரீதியான தேக்க நிலைக்கு எடுக்கப்படும் முடிவுகளாகும். அதனால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது.

தெற்கு வாசலை தட்டும் சீனா ஈழத்தமிழர்களுக்கு, தமிழ்த்தலைவர்களுக்காக இந்தியா என்ன செய்தது என்பதை விட்டுவிடுவோம். தற்போது நிலைமை என்ன என்பதை கூட டெல்லி விளங்காது இருக்கின்றது. விடுதலைப்புலிகள் பலமாக இருக்கும் வரையில் இந்துமா சமுத்திரத்தில் பிரச்சினைகள் இருக்கவில்லை. தற்போது என்ன நடக்கிறது. 1962 இல் நேரு பிரதமாரக இருந்தபோது வடக்கில் சீனாவினதும் மேற்கில் பாகிஸ்தானினதும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கை நமக்கு உட்பட்ட நாடு என்பதால் தென் இந்தியா பாதுகாப்பன பிரதேசம் என்பதை உணர்ந்து அங்கு இராணுவ முகாம்களை தளபாடங்களை அமைத்தார்.

தற்போது இந்தியாவின் 700 இராணுவ தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் உள்ளன. அவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய தளமாக இருக்கும் தெற்குவாசலை சீனா தட்ட ஆரம்பித்திருக்கின்றதல்லவா? நேருவின் தீர்க்க தரிசனமான சிந்தனை தற்போதுள்ளவர்கள் சிதைத்துவிட்டார்கள். திபெத்திலிருந்து இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டியதில்லை. அவசியம் ஏற்பட்டால் மன்னாரில் இருந்து கூட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்கலாம். வெறும் 20 மைல் தொலைவில் சீனா இருக்குமளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வலுத்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதை விடவும் தனது நாட்டின் இறைமையை பாதுகாப்பது பெருங்கஷ்டமாகியுள்ளது. இந்துமா சமுத்திரத்தின் கட்டுப்பாடு இந்தியாவை விட்டுச் சென்றுள்ளது.

டெல்லி தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே என்னவழியென்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதே. இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகின்றார். சர்வதேச சூழல் மாறவேண்டும் ஈழப் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடுகளில் மாற்றம் தேவையேற்பட வேண்டும் என்றால் சர்வதேசத்தின் சூழல் மாறவேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு மாறாது இருக்கின்றபோதும் உலக நாடுகளின் மனநிலை மாற ஆரம்பித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமையால் தனது சர்வதேச போக்குவரத்துக்கு ஆபத்தாகும் என்று சர்வதேச நாடுகள் சிந்தித்தமையால் தான் சந்திரிகாவை மையப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவை இணைத்து சீன ஆதரவாளராக இருந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சர்வதேசம் வழிசமைத்தது. இவ்வாறு சர்வதேசத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைமைகளும் உறுதியாக நிற்க வேண்டியுள்ளது.

2வருடங்களுக்கு முன்பே நிலைமை நன்கு தெரியும் விடுதலைப்புலிகளுக்கு தற்போது நான்காது ஈழப்போரில் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். காரணம் புலிகளுக்காக சர்வதேசத்திலிருந்து வரும் ஆயுதக்கப்பல்கள் இந்திய கடற்படையின் துணையுடன் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. புலிகளிடமிருந்து 14 சர்வதேச கப்பல்களும் இழக்கப்பட்ட நிலையில் ஆயுதரீதியான பிரச்சினைகள் அவர்களுக்கு காணப்பட்டது. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர்களின் ஆயுத ரீதியான பரிவர்த்தனை துண்டிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்யவேண்டுமே அச்செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

தலைவர் உள்ளார்

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. சரி, அவர் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் சிங்கள இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும்? பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன?

இதுவொருவிடயம்ரூபவ் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ஷ அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா? அதனை ஏன் செய்யவில்லை. அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை(டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.

அப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா?

ராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்போதுரூபவ் டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை என்றும் அவ்வாறான சோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின்றார். இதனை விட ராஜபக்ஷ காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.

சர்வதேச சூழல்கள் மாறவேண்டியுள்ளது

பங்களாதேஷ் விவகரம் சம்பந்தமாக வாஜ்பாய் இந்திராகாந்தியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் அவர் அமைதியாகவே இருந்தார். இரண்டு வருடமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் வெற்றிபெற்றதற்கு அந்நாட்டு மக்கள் அமைப்புக்கள்ரூபவ் இந்தியாவின் உதவி ஆகியன மட்டும் காரணமல்ல. சர்வதேசத்தில் மாற்றம் ஏற்றபட்டது. அக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு விஜயம் செய்தார். இதனையடுத்து சோவியத் பிரதமர் இந்தியா வந்தார் ஒபந்தங்களைச் செய்தார்.

குறிப்பாக இந்தியாவை எந்தநாடு தாக்கினாலும் சோவியத்து துணையாக வரும் என்ற இராணுவ ஒப்பந்தம் முக்கியமானது. இதுவே இந்தியாவின் முதலாவது இராணுவ ஒப்பந்தமாகும். இதனையடுத்தே இந்திய படைகள் அங்கு சென்றன. நிக்ஸின் சீன விஜயம் வரலாற்றினையே மாற்றியது.

அதுபோன்று வியட்நாம் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமெரிக்க தேர்தலில் ஜோர்ஜ் கெனடி வெற்றி பெற்றமையால் படைகளை வாபஸ் வாங்கினால் இதனால் அப்போராட்டம் பெற்ற பெற்றது. ஆகவே சர்வதேச சூழல்கள் விடுதலைப்போராட்டங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே சர்வதேச சூழல் மாற்றத்துக்கு அமைவாக பிரபாகரனின் பிரசன்னமும் இருக்கலாம்.

(நேர்காணல்:- ஆர்.ராம்)

நன்றி- வீரகேசரி


பகுதி – 1 

விடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன? – பழ.நெடுமாறன்

க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்

image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் டயரி

மே-07

புதுக்குடியிருப்பு, இரணைமடு பகுதிகளினூடாக இலங்கை இராணுவத்தின் முன்னகர்ந்துகொண்டுவர பெரும் தொகையான மக்கள் ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பிற்குள் ஒடுங்கும் நிலைமை உருவானது.

இந்நிலையில் இதனைப்பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் தன் கோரத்தனத்தை மேலும் அதிகரித்தது. இதே நாள் 7 ஆம் திகதி (மே 07) அந்த சிறிய பகுதிக்குள் அடைபட்டு போன அப்பாவி மக்கள் மீது க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக அன்று பல உயிர்களை பலியெடுத்தனர்.

வெளிநாடு செல்ல முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர் கைது

image_pdfPRINT

அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்றபட்ட 131 இலங்கையர்களை மலேசிய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக படகில் அவுஸதிரேலியாவுக்கு செல்ல முற்றப்ட் வேளையில் மலேசிய தெற்கு கடல் எல்லை பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள் 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த இலங்கையர்களை சட்டவிரோதமாக அழைத்து சென்ற இந்தோனேஷிய நாட்டவர் மூவரும் மலேசிய நாட்டவர் 4 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

போதைக்கும் பொலிஸாருக்கும் யாழில் தொடர்பு – சுமந்திரன்

image_pdfPRINT

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகளை இங்கு வாழும் தமிழ் மகன் தான் செய்து கொண்டிருக்கிறான். உள்ளே இருக்கும் சவாலான ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனையில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வன்முறையை தவிர்ப்போம் போதையை ஒழிப்போம் என்ற கருப்பொருளிலான வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான அமைப்பின் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஏமது இனத்துக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு பலர் முன்வந்தார்கள். ஆவர்கள் தமது வாழ்க்கையை மாய்த்துக்கொண்டார்கள். வெளியே இருந்து எமக்கு ஆபத்து வரும் போது எமது இளைஞர்கள் அதனை துணிந்து தடுத்தார்கள்.

போருக்கு பின்னரான காலத்தில்கூட கிறிஸ் பூதம ; வந்தபோது அது யாரால் செய்யப்படுகிறது என்று தெரிந்தும்கூட எங்கள் இளைஞர்கள் அவர்களை துரத்திப்பிடிக்கவும் எதிர்க்கவும் தயங்கவில்லை. நாவாந்துறையிலே அவ்வாறு செயற்பட்டதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 52 பேருக்கு எதிரான வழக்கில் நான் தற்போது முன்னிலையாகிக்கொண்டிருக்கிறேன்.

வெளியிலிருந்து ஆபத்து வரும்போது நாம் கொதித்தெழுகின்றோம். ஆனால் இன்று நடைபெறும் வன்முறைகளை செய்பவர்கள் யார்? தமிழ் இளைஞர்களே. வாள்களோடு வீதிவீதியாக சென்றும் வீடுகளுக்குள் புகுந்தும் பெண்களை வெட்டுபவர்களும் யார்? வெளியிலிருந்தோ வேறுமாவட்டத்திலிருந்தோ வந்தவர்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற ஒருசில தமிழ் இளைஞர்களே அதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளே இருக்கும் சவாலான ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம். ஆகவே இந்த வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டமை சிறந்த விடயமாகும்.

ஏங்கேயாவது போதைப்பொருள் விற்பனைசெய்யப்படுகிறது என உங்களிற்கு தகவல் கிடைத்தால் அதனை பொலிஸாரிடம் சொல்ல அச்சமாகவிருந்தால். இந்த அமைப்பிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள். பொலிஸாரும் இந்த செயற்பாடுகளில் உடந்தையாக உள்ளனர் என்பது எமக்கு நன்கு தெரிந்த விடயம்.

வாளால் வெட்ட யாராவது வந்தால் அவர்களை துரத்தி பிடியுங்கள். வீரம் செறிந்த மண் இது. ஆனால் ஆயுதம் எடுத்து வன்முறை செய்யாதீர்கள். 10 பேர் சேர்ந்தால் இருவர் கத்தியுடன் ஒன்றும் செய்ய முடியாது. ஏமது தமிழ் இளைஞர்களிடத்தே இருந்து மக்களை பாதுகாக்கவேண்டிய துரதிஸ்டவசமான நிலமை தற்போது வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நாளை கூட்டம்

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பிலான நினைவேந்தல் கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை முதலமைசச்சர் விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெறவுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவொன்றை அனைத்து தரப்புக்களினையும் உள்ளடக்கி உருவாக்க கோரிக்கைகள் வலுத்துவருகின்ற நிலையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இம்முறை நினைவேந்தல் நிகழ்வினை எந்தவொரு அரசியல் சாயமுமில்லாது முள்ளிவாய்க்கால் மக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணர்வுபூர பணிகளுடன் தயாராகிவரும் முள்ளிவாய்க்கால் மண்

image_pdfPRINT
தமிழினப் படுகொலையின் நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் மண் உணர்வுபூர பணிகளுடன் தயாராகிவருகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்கால் மக்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள், கேப்பாபுலவு மக்கள், முல்லைதீவு மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன.
இம்முறை நினைவேந்தல் நிகழ்வினை எந்தவொரு அரசியல் சாயமுமில்லாது முள்ளிவாய்க்கால் மக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நடாத்துவதெனவும் நினைவேந்தல் நிகழ்வில் யாரும் கலந்து கொள்ளலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே வேளை, முள்ளிவாய்க்கால் மண்ணின் எந்தவொரு பகுதியிலும் யாருமே பிரிந்து நின்று நிகழ்வுகளை நடாத்த அனுமதில்லையெனவும் அம்மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
error: Content is protected !!