முள்ளிவாய்க்கால் டயரி
மே-08
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற (No Fire Zone) பாதுகாப்பு வலயம் இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது.
ஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்து, அதன்பின்னர் அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது.
2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான
அந்த நிலப்பரப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் நெரிசலாக நகர்த்தப்பட்டனர்.
வெறும் 10 நாட்கள் மட்டுமே அந்த வயம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்திராத மக்களாக
எஞ்சிய உயிர்களை கைகளில் பிடித்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனர்.