SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகளை இங்கு வாழும் தமிழ் மகன் தான் செய்து கொண்டிருக்கிறான். உள்ளே இருக்கும் சவாலான ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனையில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வன்முறையை தவிர்ப்போம் போதையை ஒழிப்போம் என்ற கருப்பொருளிலான வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான அமைப்பின் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஏமது இனத்துக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு பலர் முன்வந்தார்கள். ஆவர்கள் தமது வாழ்க்கையை மாய்த்துக்கொண்டார்கள். வெளியே இருந்து எமக்கு ஆபத்து வரும் போது எமது இளைஞர்கள் அதனை துணிந்து தடுத்தார்கள்.

போருக்கு பின்னரான காலத்தில்கூட கிறிஸ் பூதம ; வந்தபோது அது யாரால் செய்யப்படுகிறது என்று தெரிந்தும்கூட எங்கள் இளைஞர்கள் அவர்களை துரத்திப்பிடிக்கவும் எதிர்க்கவும் தயங்கவில்லை. நாவாந்துறையிலே அவ்வாறு செயற்பட்டதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 52 பேருக்கு எதிரான வழக்கில் நான் தற்போது முன்னிலையாகிக்கொண்டிருக்கிறேன்.

வெளியிலிருந்து ஆபத்து வரும்போது நாம் கொதித்தெழுகின்றோம். ஆனால் இன்று நடைபெறும் வன்முறைகளை செய்பவர்கள் யார்? தமிழ் இளைஞர்களே. வாள்களோடு வீதிவீதியாக சென்றும் வீடுகளுக்குள் புகுந்தும் பெண்களை வெட்டுபவர்களும் யார்? வெளியிலிருந்தோ வேறுமாவட்டத்திலிருந்தோ வந்தவர்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற ஒருசில தமிழ் இளைஞர்களே அதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளே இருக்கும் சவாலான ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம். ஆகவே இந்த வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டமை சிறந்த விடயமாகும்.

ஏங்கேயாவது போதைப்பொருள் விற்பனைசெய்யப்படுகிறது என உங்களிற்கு தகவல் கிடைத்தால் அதனை பொலிஸாரிடம் சொல்ல அச்சமாகவிருந்தால். இந்த அமைப்பிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள். பொலிஸாரும் இந்த செயற்பாடுகளில் உடந்தையாக உள்ளனர் என்பது எமக்கு நன்கு தெரிந்த விடயம்.

வாளால் வெட்ட யாராவது வந்தால் அவர்களை துரத்தி பிடியுங்கள். வீரம் செறிந்த மண் இது. ஆனால் ஆயுதம் எடுத்து வன்முறை செய்யாதீர்கள். 10 பேர் சேர்ந்தால் இருவர் கத்தியுடன் ஒன்றும் செய்ய முடியாது. ஏமது தமிழ் இளைஞர்களிடத்தே இருந்து மக்களை பாதுகாக்கவேண்டிய துரதிஸ்டவசமான நிலமை தற்போது வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email