Home Blog Page 296

முல்லைத்தீவில் தொடர்ந்து பறிக்கப்படும் தமிழ் மக்களின் நிலம்

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் நாயாற்று பாலத்தில் இருந்து கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியை கையகப்படுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்திற்குரிய காணியென அடையாளப்படுத்தும் நடுகல் நேற்று முன்தினம் அங்கு நடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுளார்கள். இதே சாக்கில், அங்கு வாடியமைத்து பெருமளவு நிலங்களை அபகரித்து வருகிறார்கள். மறுபுறம் மகாவலி எல் வலயம் என்ற திட்டத்தின் பெயரில் தமிழர்களின் பாரம்பரிய வளம்கொழிக்கும் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இது போதாதென, வனவிளங்கு திணைக்களத்தினர் இன்னொரு முனையில்- மக்களின் காணிகளைகூட தமது திணைக்களத்திற்கு சொந்தமானதென அடையாளப்படுத்தி மக்களின் தலையில் இடியை இறக்கி வருகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தை அபகரிப்பதில் மிக நூதனமாக திட்டமிட்டு, எல்லா வழிகளிலும் அரச இயந்திரம் செயற்பட்டு வரும் நிலையில், இப்பொழுது புதிதாக தொல்பொருள் திணைக்களமும் தமது கைவரிசையை ஆரம்பித்துள்ளது.
நாயாற்று சந்தியில் இருந்து கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோமீற்றர் பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான பெருமளவு காணிகள் உள்ளன. அவற்றையும் அபகரிக்கும் விதத்திலேயே தொல்பொருள் திணைக்களம் நடுகல் நாட்டியுள்ளது.

அத்துடன் நாயாற்றிலுள்ள விகாராதிபதி தங்கியுள்ள வீட்டிலேயே தொல்பொருள் திணைக்களம் இயங்குகிறது. அந்த வீட்டிலேயே தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகையும் மாட்டிவைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்திவர்களின் பெயர் விபரங்களை வெளியிடத் தயார்

image_pdfPRINT

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவா்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு தம்மிடம் கேட்டால் அதனை எழுத்து மூலம் வழங்க தாம் தயாராக உள்ளதாக காணாமல்போனவா்கள் அலுவலக தலைவா் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட காணாமல்போனவர்கள் அலுவலகம் 2ம் கட்ட செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இதனை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதுடன், 2009ம் ஆண்டு போரின் இறுதியில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறும், அதற்கு பின்னர் சாட்சியமளிக்க தாம் தயார் எனவும் கூறியிருக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய மேற்படி கூற்று தொடர்பாக பதிலளிக்கும் போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், காணாமல்போனவர்களுடைய உறவினர்களின் உணர்வுகளை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன்.

அதேபோல் காணாமல்போனவர்களை கண்டறியலாம் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். மேலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களைபோல் அல்லாது காணாமல் போனவர்கள் அலுவலகம் அமையாது. அதனை மக்கள் நம்பவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தனிமையில் இருந்த தம்பதியரை தாக்கிவிட்டு கொள்ளை

image_pdfPRINT

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது -69) என்ற வயோதிப மாது யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.

விசாரணைகளின் பின்னரே கொள்ளையிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கத்தடை

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் இன்று தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதிகளில் தெடர்ச்சியாக வெளி மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுவரும் கடலட்டை தொழிலால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இந்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கலந்துரையாடல் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கடலட்டை தொழிலை மேற்கொள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வேண்டும் என்றும் கடலட்டை தொழிலை அந்தப் பகுதியில் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் உள்ளூர் மீனவர்களினால் இங்கு தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக இந்தத் தீரமானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைவாக நீரியல் வழத்திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எதிர்வரும் நாள்களில் போராட்டங்களை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் உள்ளூர் மீனவர்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தனர்.

வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு

image_pdfPRINT

வவுனியாவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தக் குழந்தையை மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.

வவுனியா குட்செட் வீதி 1ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையொன்றை கடத்தி சென்றுள்ளனர்.

வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலே குழந்தையை கடத்தி சென்றது.

குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

விரைவாக செயற்பட்ட பொலிஸார் மோப்ப நாய் கொண்டு தேடுதலையும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குழந்தை இன்று புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

அரச பயங்கர வாதத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்- அருட்தந்தை சக்திவேல்

image_pdfPRINT

பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். 

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை. 
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்  குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட பின்னரே குற்றங்கள் சுமத்தப்பட்டன
ஒப்புதல் வாக்கு மூலங்கள் சித்திரவதைகள் மூலம் அவர்களுக்கு தெரியாத மொழிகளில் பெறப்பட்டுள்ளன. அதில் பலர் தமது கையொப்பம் வைக்கவில்லை என்கின்றார்.
ஆனந்த சுதாகரனின் மனைவியை கொன்றது பயங்கரவாத தடைச்சட்டமே 
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவியை ,  பயங்கரவாத தடைச்சட்டமும் சட்டமா அதிபர் திணைக்களமே கொலை செய்தது 98குற்றசாட்டில் 4 குற்றசாட்டுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ஏனைய 94 குற்ற சாட்டுக்கும் தலா ஆயுள் தண்டனையாக 94 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டள்ளது.
ஏற்கனவே நோய்வாய்பட்டு இருந்த ஆனந்தசுதாகரின் மனைவி கேட்டே மேலும் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார். ஆகவே அவரை படுகொலை செய்யதது சட்டமா அதிபர் திணைக்களமே.
அரசியல் கைதிகளை வைத்து அரசியல். 
அரசியல் கைதிகளின் விடயம் அரசியல் விடயமாக உள்ளது. அரசியல் கைதிகள் இல்லை என்பதும் , அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதும் கூட அரசியல் தான்
சிங்கள மக்கள் பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை. 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யாதார். அதில், 600 பேருக்கு புணர்வாழ்வு அளித்து அவர்களை விடுதலை செய்ய முன்னர் தெற்கிலே கதிர்காமம் உட்பட பல இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தார்கள்.
சிங்கள மக்கள் அவர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வில்லை. புலிகளை சிங்கள மக்கள் பயங்கரவாதிகளாக பார்த்திருந்தால் , அவர்கள் சென்ற போது எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள் பஸ்க்கு கல் எறிந்து இருப்பார்கள் , வீதியில் மறியல் செய்து இருப்பார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்க வில்லை. ஏனெனில் சிங்கள மக்கள் அவர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வில்லை.
கிழக்கில் பொலிசை கொன்றவர் எங்கே ?
கிழக்கு மாகாணத்தில் பொலிஸாரை கொன்றவர் என குற்றம் சாட்டப்படும் நபர் இப்ப எங்கே இருக்கின்றார் ? அவர் அரசியல் ரீதியாக விடுவிக்கப்பட்டு யாருக்கு அருகில் இருக்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஆயுதம் கொடுத்தவர் எங்கே ?
அதே போன்று  பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்,  பணம் கொடுத்தார் என நாடாளுமன்றில் பேசப்பட்டு ஹன்சட்டில் உள்ளது. ஆனால் அவர் இப்ப எங்கே ?  அவர் பயங்கரவாதி இல்லையா ?
தமிழர்களை ஒடுக்கவே பயங்கரவாத தடைச்சட்டம். 
தமிழர்களை இனவழிப்பு செய்தவர்கள் பயங்கரவாதிகளே தொடர்ந்து எம்மை அழிக்கவும் ஒடுக்கவுமே பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக அவர்கள் தண்டிக்க விரும்புவது அரசியல் கைதிகளாக உள்ளவர்களை மாத்திரம்  இல்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் தண்டிக்கவுள்ளனர்.
நிபந்தனையற்ற விடுதலை வேண்டும். 
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, புனர்வாழ்வு அளி என கேட்டால் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என நாம் ஏற்பதாக இருக்கும்.  எனவே நாம் கேட்க வேண்டியது நிபந்தனையற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.
தமிழ் அரசியல் வாதிகள் பயங்கரவாதிகள். 
எங்கள் அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்கு பின்னால் போகின்றவர்கள் பயங்கரவாதிகள் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும்.
ஆங்கிலயர் ஆட்சியில் பயங்கரவாதிகள். என தூக்கிலிடப்பட்டவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தேசப்பற்றாளர்கள் ஆனார்கள். அதே போன்று அவர்களுக்கு பயங்கரவாதிகளாக தெரிபவர்கள் எங்களுக்கு தேசப்பற்றாளர்
தமிழர்களை அடக்கவே பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தார்கள். தற்போது கொண்டு வர போகின்ற சட்டம் பொருளாதர கொள்கையை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கத்திற்காக.
அரசியல் கைதிகள் 108
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகள் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் என கேட்ட போது , அரசியல் கைதிகள் என இல்லை. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 108 பேர் உள்ளனர் என பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் அரசியலில் தழம்பல் நிலை. 
தமிழர்கள் மத்தியில் அரசியல் தழம்பல் நிலை உள்ளமையால் தான் யார் யாரோ வந்து நம் மத்தியில் அரசியல் செய்து விட்டு போகின்றார்கள்.
தீர்ப்பு வழங்கப்படவில்லை.. 
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்  தண்டனைக்காலத்தை அனுவித்து விரைவில் விடுதலையடையலாம் என குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களுக்கு கூட  தீர்ப்பு வழங்கப்படமால் காலங்கள். இழுத்தடிக்கப்படுகின்றன.
கூட்டமைப்பு ஏன் மௌனம் காக்கிறது ?
அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்றோம் என கூறிய கூட்டமைப்பினர் மௌனம் காப்பது ஏன் என்பது புரியவில்லை என மேலும் தெரிவித்தார்.

ஜமுனா ஏரிக்கு பாதுகாப்பு வேலி வேண்டும்!

image_pdfPRINT

யமுனா ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு யமுனா ஏரிக்கு அருகில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்று ஏரியான யமுனா ஏரி தற்போது  தொல்லியல் திணைக்களத்தின் கீழ் உள்ளது.

குறித்த ஏரியை சுற்றிய பாதுகாப்பு வேலிகள் இல்லாமையால் கடந்த சில தினங்களுக்குள் இருவர் ஏரிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் அயலவர்களின் வளர்ப்பு பிராணிகள் மிருகங்கள் என்பன கூட ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலிகள் இல்லாமையால் தவறி விழுந்து உயிரிழக்கின்றன.

எனவே ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலியை அமைத்து தருமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.  ஏரி தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருவதனால் , அதனை சுற்றி அயலவர்களான தாம் வேலி அமைத்தால் அது தண்டனைக்கு உரிய குற்றம் என்பதனால் எம்மால் வேலி அடைக்க முடியவில்லை என தெரிவித்தனர்.

போராட்டகாரர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய இந்திய- இலங்கை பாதுகாப்பு பிரிவு

image_pdfPRINT

யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். பொலிசார் மற்றும் இந்திய துணைத்தூதரக பாதகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க கோரியும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது இந்திய துணைத்தூதரகத்திற்கு வெளியே யாழ்.பொலிசார் பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.
போராட்டம் ஆரம்பமானதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.பொலிசார் தமது கையடக்க தொலைபேசிகளில் போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.
அதேவேளை துணைத்தூதரகத்தினுள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகளும் துணைத்தூதரக வாளாகத்தினுள் நின்று போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் டெங்கு நோய் ஆபத்து

image_pdfPRINT

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம்இ திருகோணமலைஇ கொழும்புஇ மட்டக்களப்புஇ கம்பஹாஇ மாத்தறைஇ இரத்தினபுரிஇ கண்டிஇ கேகாலைஇ காலிஇ களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சம் கொண்ட மாவட்டங்களாக 2016இ 2017 மற்றும் 2018 முதல் 5 மாதங்களின் புள்ளிவிபரங்களின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டைஇ புத்தளம்இ பதுளைஇ கல்முனைஇ அநுராதபுரம் மொனாரகலஇ பொலன்நறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து உச்சமாக உள்ள மாவட்டங்களாக உள்ளன.

கிளிநொச்சி> முல்லைத்தீவு> மன்னார்> அம்பாறை> வவுனியா மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்டங்கள் டெங்கு தொற்று சராசரியாக காணப்படும் மாவட்டங்களாக உள்ளன.
2017ஆம் ஆண்டைவிட 2018ஆம் ஆண்டு முதல் 5 மாதங்களிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது – என்றுள்ளது.

யாழ்.ஜமுனா எரிக்குள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்ப்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துகுடியில் கொல்லப்பட்டவர்க்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT
தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் சிலர் சுட்டு கொல்லப்பட்டிருந்த நிலையில் அவர்களது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ் நாட்டு அரசே நீதிகேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா, மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டணை என்ன, தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு, மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்ணனை என்ன உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

நல்லாட்சி அரசு ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது

image_pdfPRINT

வட மாகாணசபை உறுப்பினர்கள் குற்றசாட்டு 

நல்லாட்சி அரசாங்கம் ஒரு கையால் காணிகளை வழங்கிவிட்டு மறுகையால் காணிகளை பறித்துக் கொண்டிருக்கும் நாசகார வேலையை செய்து கொண்டிருக்கின்றது. என வடமாகாணச பை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
வடமாகாணசபையின் 123வது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது மண்டைதீவில் கடற்படையின்வசம் உள்ள 18 ஏக்கர் காணியை நிரந்தரமாக சுவீகரிக்க கடற்படையினர் முயற்சித்துவரும் நிலையில், குறித்த காணியை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கோரி வடமாகாணசபை  உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சபைக்கு சமர்பித்திருந்தார். 
இந்த கவனயீர்ப்பு பிரேரணை தொடர்பில் கருத்து  தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்கள்
அது குறித்து மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவிக்கையில், 
1990ம் ஆண்டு தீவகம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டதால் தீவக மக்கள் இடம்பெ யர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியேறினார்கள். இந்நிலையில் மக்களுடைய காணிகளை கடற்படையினர் அபகரித்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.
இவ்வாறு மண்டைதீவில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட 18 ஏக்கர் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர். இதனை காணி உரிமையாளர்களான மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நானும் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் மண்டைதீவுக்கு சென்று நிலமைகளை அவதானித்தி ருந்தோம். அங்கே மக்களுடைய துறைமுகம் மற்றும் நல்ல குடிநீர் கிணறுகள் உள்ள தோட்ட காணிகளையும், குடியிருப்பு காணிகளையும் கடற்படையினர்  தமது கட்டுப்பாட்டின் கீழ்   அபகரித்திருக்கின்றனர். 
இந்த காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். நல்லாட்சி அரசாங்கம் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் 
மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்குவதாக காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்தின் நாசகார வேலையாகும்.
இதனை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என கூறினார்.
 தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,
ஒரு பக்கத்தால் மக்களுடைய காணிகளை
விடுவிப்பதாக காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகிறது.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இந்த விடயத்தை கேட்டிருந்தேன். அப்போது இந்த விடயம் தொடர்பில் மேலே பேசி விட்டோம். என பிரதமர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார். 
மேலே பேசி விட்டோம் என்றால் என்ன பேசினீர்கள்? என்பதை கூறியிருக்கவேண்டும் இந்த விடயத்தை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கவேண்டும். 
அந்த கூட்டத்தில் முதலமைச்சர் கட்டாயமாக கலந்து கொள்ளவேண்டும் என்றார்.
தொட ர்ந்து பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை மக்களிடம் மீள வழங்குவது தொடர்பாக கடற்படை தளபதிக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருப்பதாக கூறினார். 
error: Content is protected !!