SHARE

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் இன்று தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதிகளில் தெடர்ச்சியாக வெளி மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுவரும் கடலட்டை தொழிலால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இந்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கலந்துரையாடல் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கடலட்டை தொழிலை மேற்கொள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வேண்டும் என்றும் கடலட்டை தொழிலை அந்தப் பகுதியில் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் உள்ளூர் மீனவர்களினால் இங்கு தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக இந்தத் தீரமானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைவாக நீரியல் வழத்திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எதிர்வரும் நாள்களில் போராட்டங்களை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் உள்ளூர் மீனவர்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தனர்.

வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

Print Friendly, PDF & Email