SHARE

யமுனா ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு யமுனா ஏரிக்கு அருகில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்று ஏரியான யமுனா ஏரி தற்போது  தொல்லியல் திணைக்களத்தின் கீழ் உள்ளது.

குறித்த ஏரியை சுற்றிய பாதுகாப்பு வேலிகள் இல்லாமையால் கடந்த சில தினங்களுக்குள் இருவர் ஏரிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் அயலவர்களின் வளர்ப்பு பிராணிகள் மிருகங்கள் என்பன கூட ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலிகள் இல்லாமையால் தவறி விழுந்து உயிரிழக்கின்றன.

எனவே ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலியை அமைத்து தருமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.  ஏரி தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருவதனால் , அதனை சுற்றி அயலவர்களான தாம் வேலி அமைத்தால் அது தண்டனைக்கு உரிய குற்றம் என்பதனால் எம்மால் வேலி அடைக்க முடியவில்லை என தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email