SHARE

யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ். பொலிசார் மற்றும் இந்திய துணைத்தூதரக பாதகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க கோரியும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது இந்திய துணைத்தூதரகத்திற்கு வெளியே யாழ்.பொலிசார் பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.
போராட்டம் ஆரம்பமானதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.பொலிசார் தமது கையடக்க தொலைபேசிகளில் போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.
அதேவேளை துணைத்தூதரகத்தினுள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகளும் துணைத்தூதரக வாளாகத்தினுள் நின்று போராட்டக்காரர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தனர்.
Print Friendly, PDF & Email