Home Blog Page 285

சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளானார்: நீதிவானுக்கு வழங்கப்பட்ட அறிக்கை

image_pdfPRINT

சிறுமியின் உடலில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கான தடையங்களும் உள்ளன என்று நீதிவானுக்கு வழங்கிய சட்ட மருத்துவ அறிக்கையில் சட்ட மருத்துவ அதிகாரி மயூரதன் குறிப்பிட்டுள்ளார்.

சுழிபுரம் பாடசாலையில் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உளபடுத்தப்பட்டது. அதனையடுத்து அது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியால், நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியில் சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்பதற்கான தடயங்கள் உடலில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது்

ஆனால் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை மீதான முற்பகையே கொலைக்கு காரணம்!

image_pdfPRINT

“சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உட்பட நால்வர் துணை நின்றுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“தீவிர விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த பற்றையைப் பகுதியை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டினார். பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது. எனினும் தோடுகளை மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால்  அடையாளம் காணமுடியவில்லை” என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று  திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உட்பட நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

“சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். அவர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள்.

பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இவர்களின் திருட்டு அறியவர சிறுமியின் தந்தை சிவனேஸ்வரன், சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தந்தை தன்னையும் நண்பரையும் தாக்கியதற்கு பழிதீர்க்கவேண்டும் என்ற வெறித்தனத்தோடு பிரதான சந்தேகநபர் கஞ்சாவைப் பாவித்து போதையில் இருந்துள்ளார்.

சிவனேஸ்வரன் றெஜீனா பாடசாலை முடித்து திரும்பும் போது, அவரை பிரதான சந்தேகநபர் கடத்திச் சென்று பற்றைக்குள் வைத்து கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். அதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்” என்று விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

“சிறுமியின் சீருடை எரிக்கப்பட்டது என பிரதான சந்தேகநபரால் இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. எனினும் இன்று முற்பகல் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திய பிரதான சந்தேகநபர், சீருடை போடப்பட்ட இடத்தை காண்பித்தார். எனினும் கயிறு மற்றும் தோடுகளை மீட்க முடியவில்லை.

விசாரணைகளின் பின்னர் 5 சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்” என்றும் பொலிஸார் கூறினர்.

யாழ்.பல்கலை மாணவர் இருவர் கொலை வழக்கு; பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் விடுதலை

image_pdfPRINT

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு மீதான சுருக்க முறையற்ற விசாரணை வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

 இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

3 பொலிஸார் விடுவிப்பு

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று அறிக்கையிட்டனர்.

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர்.

அதனையடுத்து வழக்கு விசாரணை வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்துவரும் தவணைகளில் சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முடிவுறுத்தப்பட்டு வழக்கு ஆவணங்கள் மேல் நீதிமன்ற நடவடிக்கைக்காக சட்ட மா அதிபரிடம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சிறுமியை கொலை செய்து, சீருடையை நெருப்பில் எரித்தேன்: கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

image_pdfPRINT

“சுழிபுரம் சிறுமியை கொன்றவர்களின் ஒருவன் மனநோயாளியை போல நடிக்கிறான். சிறுமியை கொன்றேன் என்பதை ஒப்புக்கொள்கிறான். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் நடிக்கிறான்“ என வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர். சுழபுரம் சிறுமி றெஜீனா கொலை விசாரணை எந்தகட்டத்தில் உள்ளதென நாம் சற்று முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டபோது, மேற்கண்ட தகவல்களை வழங்கினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று மாலை சிறுமியின் சடலம் கிணற்றிற்குள்ளிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய பொலிசார், நேற்றிரவே சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை மேலும் இருவரை கைது செய்தனர்.

பொலிசார் தெரிவித்தபோது – “சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரதான சந்தேகநபர், கொலையை புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளான். தான் மட்டுமே இந்த கொலையை புரிந்ததாக கூறுகிறான்.

சம்பவ இடத்திற்கு அவனை அழைத்து சென்றும் விசாரணை நடத்தினோம்.

அதிக போதையில் இருந்ததாக நிலைதடுமாறி சிறுமியை கொலை செய்து விட்டேன். தோடுகளை திருடவே சிறுமியை கொலை செய்தேன் என கூறுகிறான். சிறுமியை கொலை செய்த பின்னர், அவரது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்து விட்டதாக வாக்குமூலமளித்துள்ளான்.

பின்னர் விரோதம் காரணமாக கொலை செய்தேன் என வாக்குமூலமளித்தான். மனநோயாளி போல தன்னை காட்டி, நடிக்கிறான். முன்னுக்கு பின்னாக வாக்குமூலமளித்தால் தப்பிக்கலாமென பார்க்கிறான்.

ஆனால், நாங்கள் உண்மையை வரவழைப்போம். விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.“ என்றனர்.

ஆறு வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு- கொலை என சந்தேகம்

image_pdfPRINT

சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி {காட்டுப்புலம் வெண்கரம் படிப்பக மாணவி} சிவநேஸ்வரன் றெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த மாணவி இன்று பாடசாலை சென்றுவிட்டு 1.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அந்த நேரம் பெற்றோர், சகோதரர்கள் வீட்டில் இருக்கவில்லை.
2 மணியளவில் வீட்டுக்கு வந்த பெற்றோர் சிறுமியின் புத்தகப்பை வீட்டில் இருப்பதை பார்த்து சிறுமியை தேடியுள்ளனர்.

3.40 மணியளவில் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள கிணற்றில் உள்ளாடையுடன் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம் கழுத்தில் காணப்படுவதுடன் நெற்றியிலும் காயம் காணப்படுகிறது.

சிறுமியின் ஆடைகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி பலி!

image_pdfPRINT

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை சிறுமி அவரது வீட்டின் பின்புறம் உள்ள கூழா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து அயலில் உள்ளவர்கள் ஒட்டுசுட்டான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.தூக்கில் தொங்கிய சிறுமியின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.

‘கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை’- முதலமைச்சர் ; ‘விக்கி பிரிந்தால் அழிவோம்’ – சம்பந்தர்

image_pdfPRINT

சிலர் தன்னை அரசியலிலிருந்து வெளியேற்ற துடிக்கிறார்கள் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று (24) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைமைகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தனது ஏற்புரையின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்கமுடியாதவன் நான். எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தனின் வருகை எமக்கெல்லாம் பெருமையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது.

என்னை இந்த முதலமைச்சர் பதவிக்கு கொண்டுவந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமையிலான கட்சிக்கும் விசுவாசமாகவே நான் இருந்துவந்துள்ளேன் என தனது உரையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவளை, நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அனைவரும் வேறுபாடுகளை கழைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவ்வாறு இன்றி பிரிந்து செயல்பட்டார் நமது மக்களை நாமே அழிப்பதாக அமையும் என தனது உரையில் தெரிவித்தார்.

கிளி. சாந்தபுரத்தில் தொடரும் பதட்டம்; பொலிஸ், இராணும் தொடர்ந்தும் தேடுதலில்

image_pdfPRINT

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிக்கொடி, புலிகளின் சீருடை மற்றும் வெடிபொருட்கள் ஆட்டோவில் கொண்டு சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

அவர்களுள் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் வன்னிவேளாம்குளம் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபரை சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து வந்த பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அப்பகுதியெங்கும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மேலும் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அப்பகுதி எங்கும் போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
இதனால் கிளிநொச்சி சாந்த புரத்தில் பதட்டநிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு

image_pdfPRINT

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க அவரது சகோதரி நூலைப் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர்  இரா.சம்பந்தன் உள்பட ஏனையவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்இ பதவிக்கு வந்த பின்இ ஆற்றிய உரைகளின் தொகுப்பே ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூலாக இன்று வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு நாளை

image_pdfPRINT

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சிறப்பு உரையாற்றுகிறார்.

அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்று சிறப்பு உரையாற்றுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பதவிக்கு வந்த பின், ஆற்றிய உரைகளின் தொகுப்பு ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூலாக நாளை (24) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசின் சட்ட ஆலோசகராக கடமையாற்றியவரும் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான முத்துக்குமாரசாமி சுவர்ணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொள்கிறார்.

வாழைச்சேனை காட்டுக்குள் ஆணின் சடலம் மீட்ப்பு

image_pdfPRINT

மட்டக்களப்பு, வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தின் காட்டுமுறி பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் உருக்குலைந்த நடலம் மீட்டக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் குறித்த கண்ணமரக் காட்டுக்குள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதினை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டனர்.

இதனையடுத்து பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தலைவருக்கு தகவல் வழங்கியதனையடுத்து கிராமசேகவர் இது தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

சடலத்தின் அருகில் கைத்தொலைபேசி ஒன்று காணப்பட்டதுடன் உயிரிழந்துள்ளவர் நீல நிற டெனிம் காற்சட்டையும் கறுப்பு நிற ரீ சேட்டுட் அணிந்திருந்துள்ளார் உன தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித் சடலத்தை அங்கிருந்து மீட்டுள்ள பொலிசார் தாம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் மீண்டும் புலிகள்? கிளைமோர், புலிக்கொடி மீட்பு

image_pdfPRINT

‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடி மற்றும் கிளைமோர் குண்டு என்பனவற்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது. சம்பவத்தையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இருவர் தப்பிஓடிவிட்டனர்’ என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர்.

‘ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் என்பன மீட்கப்பட்டன.

தப்பித்த இருவரையும் கைது செய்வதற்கான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

error: Content is protected !!