SHARE

“சுழிபுரம் சிறுமியை கொன்றவர்களின் ஒருவன் மனநோயாளியை போல நடிக்கிறான். சிறுமியை கொன்றேன் என்பதை ஒப்புக்கொள்கிறான். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் நடிக்கிறான்“ என வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர். சுழபுரம் சிறுமி றெஜீனா கொலை விசாரணை எந்தகட்டத்தில் உள்ளதென நாம் சற்று முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டபோது, மேற்கண்ட தகவல்களை வழங்கினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று மாலை சிறுமியின் சடலம் கிணற்றிற்குள்ளிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய பொலிசார், நேற்றிரவே சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை மேலும் இருவரை கைது செய்தனர்.

பொலிசார் தெரிவித்தபோது – “சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரதான சந்தேகநபர், கொலையை புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளான். தான் மட்டுமே இந்த கொலையை புரிந்ததாக கூறுகிறான்.

சம்பவ இடத்திற்கு அவனை அழைத்து சென்றும் விசாரணை நடத்தினோம்.

அதிக போதையில் இருந்ததாக நிலைதடுமாறி சிறுமியை கொலை செய்து விட்டேன். தோடுகளை திருடவே சிறுமியை கொலை செய்தேன் என கூறுகிறான். சிறுமியை கொலை செய்த பின்னர், அவரது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்து விட்டதாக வாக்குமூலமளித்துள்ளான்.

பின்னர் விரோதம் காரணமாக கொலை செய்தேன் என வாக்குமூலமளித்தான். மனநோயாளி போல தன்னை காட்டி, நடிக்கிறான். முன்னுக்கு பின்னாக வாக்குமூலமளித்தால் தப்பிக்கலாமென பார்க்கிறான்.

ஆனால், நாங்கள் உண்மையை வரவழைப்போம். விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.“ என்றனர்.

Print Friendly, PDF & Email