SHARE

சிலர் தன்னை அரசியலிலிருந்து வெளியேற்ற துடிக்கிறார்கள் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று (24) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைமைகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தனது ஏற்புரையின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்கமுடியாதவன் நான். எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தனின் வருகை எமக்கெல்லாம் பெருமையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது.

என்னை இந்த முதலமைச்சர் பதவிக்கு கொண்டுவந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமையிலான கட்சிக்கும் விசுவாசமாகவே நான் இருந்துவந்துள்ளேன் என தனது உரையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவளை, நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அனைவரும் வேறுபாடுகளை கழைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவ்வாறு இன்றி பிரிந்து செயல்பட்டார் நமது மக்களை நாமே அழிப்பதாக அமையும் என தனது உரையில் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email