Home Blog Page 283

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை

image_pdfPRINT

விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவடையும் வரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை குறித்த அமைச்சு பதவியில் இருந்து இடைநீக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமருடனான பேச்சு தோல்வி: அதிபர்கள், ஆசிரியர்கள் நாளை சுகயீன லீவு போராட்டம் – ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

image_pdfPRINT

இலங்கை கல்வித் துறையில் இடம்பெறும் அரசியல் நியமனங்களுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உள்பட16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை (4) மேற்கொள்ளவுள்ள சுகயீன விடுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த அறிவிப்பை இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.

“இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும். இத்தகைய நியமனங்களை எதிர்த்து – இலங்கை
கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை சுகயீன லீவில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன.

வடமாகாணத்திலும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

இத்தகைய முறையற்ற நியமனங்கள் எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும்” இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

நீதி நியாயத்துக்கு கட்டுப்படும் ஆசிரியர்கள் நாளை பணிக்குச் செல்லவேண்டும் – கல்வி அமைச்சர் வலியுறுத்து

image_pdfPRINT

“சட்டம் மற்றும் நீதிக்கு கீழ்படிகின்ற அனைத்து கல்விச் சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டு நாளை பணிக்குச் செல்லவேண்டும். பாடசாலைகள் நாளை திறக்கப்படும்” என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் ஆசிரியர்கள், அதிபர்கள் உள்பட அனைத்து கல்விச் சேவை உத்தியோகத்தர்களும் நாளை சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடுவர் என இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று மாலை அறிவித்தது.

அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

image_pdfPRINT

சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நிலைபாதிக்கப்பட்டு உள்ளார் என அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில். உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள இராஜாங்க அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நல பாதிப்புக்கு உள்ளானர்.

அதனை அடுத்து அருகில் உள்ள தனியார் வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற, இராஜாங்க அமைச்சர் இன்று மதியம் வீடு திரும்பினார். தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ” விடுதலை புலிகள் மீள உருவாக வேண்டும் ” என உரையாற்றி இருந்தார்.

அவரது அந்த உரையை அடுத்து நாடு முழுவது சர்ச்சைகள் எழும்பியுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றிலும் கடும் குழப்பம் ஏற்பட்டதனால் நாடாளுமன்றம் நாளைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் குறித்த சர்ச்சைக்கு உரிய உரை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் மற்றும் சபா நாயகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக உரையாற்றினார் எனவும் , இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்நிலையிலையே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை

image_pdfPRINT

மல்லாகம் சந்தியில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த என்.நஸிர் (வயது 25) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த உத்தியோகஸ்தர் இன்று காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென தனது AK 47 ரக துப்பாக்கியால் நெஞ்சு பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸ்நிலையம் சென்றவரை வழிமறித்து போத்தல் குத்து- நெல்லயடியில் சம்பவம்

image_pdfPRINT

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞரை வைத்தியசாலையில் சேர்த்த முச்சக்கர வண்டி சாரதியை போத்தலால் குத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது , அங்கிருந்த இளைஞர் ஒருவர் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார்கள்.

அதனை அடுத்து அங்கிருந்த முச்சக்கர வண்டி சாரதி காயப்பட்ட இளைஞரை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று மந்திகை ஆதார வைத்தியசாலையில்  சேர்த்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிசார் , இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்த சாரதியை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை  பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

விசாரணைக்கு பொலிஸ் நிலையம் செல்லும் போது நெல்லியடி பகுதியில் இனம் தெரியாத கும்பல் முச்சக்கர வண்டியை வழிமறித்து , தாக்குதல் மேற்கொண்டதுடன், சாரதி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொண்டு உடைந்த போத்தலால் குத்தி காயப்படுத்தி விட்டுதப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட ஆவா குழுவினர் கைது

image_pdfPRINT

நல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட மூவரை ஆவா குழுவினர் என மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த வாரம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், வீட்டில் இருந்தவர்கள் மீதும் வாள்வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில் , கொக்குவில் மற்றும் இனுவில் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் ஆவா குழுவை சேர்ந்தவர் எனவும், அவர்கள் இருவரையும் நீண்டகாலமாக தேடி வந்ததாகவும், அவர்களில் ஒருவர் நல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பழையில் வாளுடன் நடமாடிய இளைஞன் கைது

image_pdfPRINT

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகில் வாளுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீதியில் பயணித்த வேளை யூனியன் கல்லூரிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான்.

அதனை அடுத்து இளைஞனை துரத்தி சென்று பொலிஸார் மடக்கி பிடித்து சோதனையிட்ட போது வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலய நிர்வாகத்திடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் விசாரணை

image_pdfPRINT

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மன் தமிழீழ வரை படத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதி உலா வந்தமை தொடர்பில் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்திடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆலய மகோற்சவ திருவிழாவின் போது கடந்த 29ஆம் திகதி அம்மன் தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
அது தொடர்பிலான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன இளைஞன்; கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டார்

image_pdfPRINT

கைதானவர் திடுக்கிடும் வாக்குமூலம்; எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் உடலங்கள் மீட்ப்பு 

வுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன இளைஞன் கடத்தப்பட்டு, சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணி சேனைப்பிலவை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் காணாமல் போயிருந்தார். உறவினர்கள் பல இடங்களிலும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

இதையடுத்து விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். காணாமல் போன இளைஞனை கடத்தி சென்று கொலை செய்து, எரித்து விட்டோம் என வாக்குமூலமளித்தார். ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தின் அலைகரை பகுதியில் கொலை செய்து எரிக்கப்பட்டதாக வாக்குமூலமளித்தார்.

ஒட்டுசுட்டான், நெடுங்கேணி  பொலிசார் இணைந்து நேற்று சந்தேகநபரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். கொலை செய்து, சடலத்தை எரித்த இடத்தை அவர் காண்பித்தார். எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் மனித உடலின் எச்சங்கள் அங்கு மீட்கப்பட்டன.

500 நாட்களாகியும் தீர்வின்றிதொடரும் போராட்டம் ; அமெரிக்கா, லண்டன், ஜேர்மனியிலும் ஒலித்த ஆதரவுக்கு குரல்கள்

image_pdfPRINT

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் (1)  500 ஆவது நாளை எட்டியுள்ளது

கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இவ்வாறு எவ்வித தீர்வுமின்றி தொடர்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமது பிள்ளைகளை ஒருமுறையாவது காட்டுங்கள் என்று கதறி அழுத உறவுகள், ” சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை, ஐ.நா. சபையே எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதிசெய், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடு, பன்னாட்டு தலையீட்டுடனான நீதி பொறிமுறையே எமது தேவை, சர்வதேசமே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு”  போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

புலத்திலும் ஆதரவு

இதேவேளை, உறவுகளின் இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அதே நாளில் அமெரிக்கா, லண்டன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஒன்று திரண்ட புலம்பெயர் உறவுகளும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

யூரோ 4 எரிபொருள் நாளை முதல் நாடுமுழுவதும் கிடைக்கும்

image_pdfPRINT

இலங்கை எரிபொருள் சந்தையில் நாளை 2ஆம் திகதி தொடக்கம் யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதனால் சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோல் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் 95 ஒக்ரைன் பெற்றோலை விநியோகம் செய்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!